ராஜபக்சேக்களுக்கு சொந்தமான ஓட்டலுக்கு தீவைப்பு| Dinamalar
கொழும்பு: இலங்கையில் மக்களின் போராட்டம் காரணமாக பிரதமராக இருந்த ராஜபக்சே பதவி விலகி, திரிகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். அந்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்காலை மெடில்லா பிரதேசத்தில் ராஜபக்சேக்களுக்கு சொந்தமானதாக கருதப்படும் ஓட்டலுக்கு தீவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொழும்புவிலிருந்து வெளியேறும் மக்கள் இலங்கையில் வெடித்த கலவரம் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில், சற்று தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து … Read more