பெருமிதம் உடைந்தது: வடகொரியாவில் முதல் கரோனா தொற்று; அவரசநிலை அறிவிப்பு: ஊரடங்கு, கட்டுப்பாடுகள் அமல்

சியோல்: உலகம் முழுவதையும் கரோனா உலுக்கி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை என பெருமையாக கூறி வந்த வடகொரியாவில் முதன் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடுமுழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தி அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். கரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு அதிகரித்தபோது ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை சீன … Read more

கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா செனட் சபையில் தோல்வி.. குடியரசுக் கட்சியின் வலுவான எதிர்ப்பால் மசோதா தோல்வி..!

குடியரசு கட்சியின் வலுவான எதிர்ப்பால் அமெரிக்காவில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா செனட் சபையில் தோல்வியில் முடிந்தது. கருக்கலைப்பு உரிமைக்கு ஆதரவளிக்கும் பெண்கள் சுகாதார பாதுகாப்பு மசோதா செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையில், ஒரு ஜனநாயகக் கட்சி உறுப்பினர் உள்பட 51 எதிர்ப்பு வாக்குகள் மூலம் குடியரசுக் கட்சியினர்  மசோதாவைத் தோற்கடித்தனர்.  நவம்பரில் நடக்கவிருக்கும் இடைத் தேர்தல் வெற்றி மூலம் மசோதாவை நிறைவேற்ற ஜனநாயகக் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   … Read more

ஸ்பெயினில் 4 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களை மூடும் அபாயம்

மாட்ரிட் : ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் மற்றும் கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட காரணங்களால் ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஸ்பெயின் அரசு, எரிபொருள் விலை உயர்வை ஈடு செய்ய பல்வேறு கொள்கைகளை வகுத்துள்ள போதிலும், இன்னும் சில சிக்கல்களை சந்தித்து வருகிறது. முன்னதாக ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ், மார்ச் மாத இறுதியில் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 20 செண்ட் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. … Read more

உக்ரைனில் இருந்து மக்களை வெளியேற்ற ரஷ்யாவுடன் தொடர் பேச்சுவார்த்தை.. இரு நாடுகளின் போரால் ஆப்பிரிக்க நாடுகளில் உணவு பஞ்சம்..!

உக்ரைனில் இருந்து மேலும் மக்களை வெளியேற்ற ரஷ்யாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஐ.நா. பொதுச் செயலாளார் ஆண்டனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். உக்ரைன், ரஷ்யா இடையிலான போர், கருங்கடலில் சரக்கு கப்பல் போக்குவரத்தை சீர்குலைத்து உலகளவில் உணவு தானியங்கள், எண்ணெய் வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்திருப்பதாகக் குறிப்பிட்டார். போரால் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உணவு பஞ்சம் ஏற்படத் துவங்கி உள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார். ரஷ்யா – உக்ரைன் இடையிலான உடனடி சமாதான … Read more

இந்திய தூதரகம் திட்டவட்ட அறிவிப்பு| Dinamalar

கொழும்பு,:’இலங்கையில் வன்முறையை அடக்க, ராணுவத்தை அனுப்பும் பேச்சுக்கே இடமில்லை’ என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.நம் அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட ஆளுங்கட்சியினருக்கு சொந்தமான வீடுகள், வர்த்தக நிறுவனங்களை மக்கள் தீவைத்து எரிக்கும் சம்பவங்களும், வன்முறைகளும் தினமும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், ‘இலங்கையில் வன்முறையை கட்டுப்படுத்த, இந்திய ராணுவம் வர உள்ளது’ என சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. … Read more

தொற்றுநோய்களின் சுனாமி கொரோனாவால் இன்னமும் 1 6 மில்லியன் மக்கள் மரணிக்கலாம்: ஆய்வு

‘ஜீரோ-கோவிட்’ கொள்கையை நீக்குவது என்பது கொரோனா வைரஸை கட்டவிழ்த்து விடுவதற்கு ஒப்பானது என்று சீன ஆய்வு கூறுகிறது. சீனாவில், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது. சீன அரசு விதித்துள்ளபூஜ்ஜிய-கோவிட் கொள்கை மீதான விமர்சனங்களுக்கு மத்தியில், இது தொடர்பான ஒரு புதிய ஆய்வு வெளியாகி அச்சங்களை அதிகரித்துள்ளது. கொரோனாவின் பரவலால் தொழிற்சாலைகளை மூடிய ஜீரோ கோவிட் என்ற கடுமையான கொள்கையை நீக்குவது “தொற்றுநோய்களின் சுனாமி” என்பது போல் பேரலையை எழுப்பும் என்றும், கிட்டத்தட்ட 1.6 மில்லியன் மக்களின் மரணத்திற்கு … Read more

இலங்கையில் வரும் வாரத்தில் புதிய பிரதமர் – அதிபர் கோத்தபயா உறுதி

இலங்கையில் வரும் வாரத்தில் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.அதிபரை ரணில் சந்தித்துப் பேசியிருப்பதால் அவர் பிரதமராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கையில் நிலவும் அமைதியின்மைக்கு மத்தியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். வரும் வாரத்தில் பொதுமக்களின் நம்பிக்கை பெற்ற புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்க உள்ளதாக கூறினார். நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட அதிபர் முறையை நீக்க இடமளிக்கும் வகையிலான 19வது சட்ட திருத்தத்தை மீண்டும் கொண்டு … Read more

சீனாவில் தொடரும் ஊரடங்கு கட்டுப்பாடு சுகாதார அமைப்பு தலைவர் ஆட்சேபம்| Dinamalar

பீஜிங்:சீனாவில், நீண்ட நாட்களாக அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை குறிப்பிட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாற்றக்கோரி, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் வலியுறுத்தி உள்ளார்.நம் அண்டை நாடான சீனாவில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம், 1,847 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.வைரஸ் பரவலை தடுக்க, சீனாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. கொரோனா பாதிப்பு குறைந்தாலும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாமல் … Read more

2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும் – இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை

கொழும்பு: இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக காலி முகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியேற காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையின் மத்திய வங்கியின் கவர்னர் பி.நந்தலால் வீரசிங்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இலங்கையில் 2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும். அடுத்த இரு வாரங்களில் அரசியல் கட்சிகள் ஸ்திரத்தன்மையை … Read more

அல்ஜசீரா செய்தியாளர் துப்பாக்கிசூட்டில் பலி| Dinamalar

ஜெருசலேம்:ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கு கரை நகரமான ஜெனின் என்ற இடத்தில் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், ‘அல்ஜசீரா’ ஊடகத்தை சேர்ந்த பெண் செய்தியாளர் ஷிரின் அபு அக்லா, 51, உயிரிழந்தார். மேற்காசிய நாடுகளான இஸ்ரேல்-, பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. சர்ச்சைக்குரிய மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலியர்களை தாக்குவதும், அவர்களை இஸ்ரேல் போலீசார் மற்றும் ராணுவத்தினர் சுட்டுக்கொல்வதும் வாடிக்கையான சம்பவமாகிவிட்டது. இந்நிலையில், அல்ஜசீரா ஊடகத்தின் மூத்த செய்தியாளர் ஷிரீன் அபு … Read more