ரஷ்ய தாக்குதலில் கை, கால்களை இழந்த அசோவ் படை வீரர்களின் புகைப்படங்கள் வெளியீடு..!

மரியுபோல் உருக்காலையில், கை, கால்களை இழந்த நிலையில் உள்ள வீரர்களின் புகைப்படங்களை உக்ரைனின் அசோவ் படையினர் வெளியிட்டுள்ளனர். தீவிர வலதுசாரி சித்தாந்தம் கொண்ட ராணுவக் குழுவினரால் அமைக்கப்பட்ட அசோவ் படைப்பிரிவு, கடந்த 8 ஆண்டுகளாக டான்பாஸ் பகுதியில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத இயக்கங்களுடன் போராடி வந்தனர். மரியுபோல் உருக்காலையில் இருந்து பொதுமக்கள் வெளியேறிய நிலையில், அங்கு முகாமிட்டுள்ள அசோவ் படையினர் மீது ரஷ்ய படைகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தின. இதில் படுகாயமடைந்த வீரர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. Source link

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்| Dinamalar

கீவ்:உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர், இரண்டரை மாதங்களை கடந்து விட்ட நிலையில், ரஷ்யா போரை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான ஒடேசா மீது, ரஷ்யா தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. ஒலியை விட, ஐந்து மடங்கு வேகத்தில், 2,000 கி.மீ., தொலைவு சென்று, இலக்கை தாக்கி அழிக்கும், ‘ஹைபர்சோனிக்’ ஏவுகணைகளை ரஷ்யா வீசியது. இந்த தாக்குதலில், ஒடேசாவில் உள்ள ஒரு வணிக வளாகம் பலத்த சேதம் அடைந்தது. இதில், ஒருவர் கொல்லப்பட்டார்; நான்கு பேர் … Read more

இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் மரணம்

இஸ்ரேல் படைகள் தாக்குதலில் அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் ஷிரின் அபு அக்லா கொல்லப்பட்டது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷிரின் அபு அக்லா பாலஸ்தீன பத்திரிகையாளர். இவர் பல ஆண்டுகளாக அல் ஜசீரா பத்திரிகையில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவத்தால் ஷிரின் அபு அக்லா கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொல்லப்பட்டபோது ஷிரின் பத்திரிக்கையாளர்களுக்கான தற்காப்பு ஆடையையே அணிந்திருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் … Read more

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: பெய்ஜிங்கில் புகழ்பெற்ற அரண்மனை அருங்காட்சியகம் மூடப்படுவதாக அறிவிப்பு.!

கொரோனா பரவல் காரணமாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற அரண்மனை அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தியனன்மென் சதுக்கத்தின் தெற்கே சுமார் 183 ஏக்கர் பரப்பளவில் 9 ஆயிரத்து 999 அறைகளுடன் அமைந்துள்ள இந்த அரண்மனை 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். அரண்மனை அமைந்துள்ள பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை அடுத்து, நாளை முதல் அரண்மனை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெய்ஜிங்கில் வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்ட நிலையில், மக்கள் வீடுகளில் இருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.   … Read more

பெருமூளை நோயால் பாதிக்கப்பட்ட சீன அதிபர் ஜி ஜின்பிங்- வெளியான பரபரப்பு தகவல்

பீஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் பெருமூளை நோயால் பாதிகப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் பெருமூளை அனிரிசம் நோயால் பாதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும்  ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. அறுவை சிகிச்சைக்குப் பதில் அவர் பாரம்பரிய சீன மருந்துகளை எடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின்போது கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே ஜி ஜின்பிங், வெளிநாட்டு தலைவர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். அப்போதில் இருந்தே … Read more

பாக்., பிரதமரின் ஊழலை விசாரித்தவர் திடீர் மரணம்| Dinamalar

லாகூர்:பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷரீப் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் ஊழல்களை விசாரித்த புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவர், திடீரென மரணம் அடைந்தார். பாக்., புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ., தலைவராக இருந்த முகமது ரிஸ்வான், 47, முந்தைய ஆட்சியில், ஷெபாஸ் ஷரீப் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் சர்க்கரை ஊழல் குற்றச்சாட்டுகளை கண்டுபிடித்து, வழக்கு பதிவு செய்தார். ஷெபாஸ் ஷரீப் குடும்பத்தினர், 28 போலி நிறுவனங்களை துவக்கி, வெளிநாடுகளுக்கு, 1,400 கோடி ரூபாய் அனுப்பியதையும் கண்டுபிடித்தார்.சமீபத்தில், பாக்., பிரதமராக ஷெபாஸ் … Read more

டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் தடையை திரும்பப் பெறுவேன்: எலான் மஸ்க்

டெக்சாஸ்: முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கிற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெறுவேன் என தெரிவித்துள்ளார் எலான் மஸ்க். உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன எலான் மஸ்க், அண்மையில் ட்விட்டர் தளத்தை வாங்குவது உறுதியானது. தற்போது அதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். ட்விட்டர் தளத்தை மஸ்க் வாங்குகிறார் என்ற செய்தி வெளியானது முதலே ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கிற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து பேசப்பட்டு வந்தது. அதுகுறித்து ட்ரம்ப் கூட தனது கருத்தை … Read more

சர்க்கரை ஏற்றுமதிக்கு முழு தடை – பிரதமர் அதிரடி அறிவிப்பு!

உள்நாட்டு தேவை அதிகரித்து வருவதால், சர்க்கரை ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் முழு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்து உள்ளார். அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு, ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில், உள்நாட்டு தேவை அதிகரித்து வருவதால், சர்க்கரை ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் முழு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்து உள்ளார். இது குறித்து, சமூக வலைதளமான ட்விட்டரில், பாகிஸ்தான் பிரதமர் … Read more

ராஜபக்சேவை கடற்படை தளத்திற்கு அழைத்து சென்றது ஏன்? – அரசு விளக்கம்!

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, பாதுகாப்பு காரணங்களுக்காகவே, கடற்படை தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக, அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அண்டை நாடான இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதால், அந்நாட்டில், பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் கேஸ், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும், தொடர் மின் வெட்டு … Read more