பதற்றம் எதிரொலி – இலங்கையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு

கொழும்பு: பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வந்த இலங்கை மக்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.   அதிபர் மற்றும் பிரதமர் பதவிகளில் உள்ள ராஜபக்சே குடும்பத்தினர் பதவியில் இருந்து விலகவேண்டும் என அவர்கள் வலியறுத்தினர். இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், ராஜபக்சே ஆதரவாளர்களுக்கு இடையே நேற்று ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.  இதில் மகிந்த ராஜபக்சே உள்பட ஆளும் கட்சியைச் சேர்ந்த சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ … Read more

இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினரை. காணவில்லை!| Dinamalar

கொழும்பு :இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட ஆளுங்கட்சியினருக்கு சொந்தமான வீடுகள், வர்த்தக நிறுவனங்களை மக்கள் தீ வைத்து எரிக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. நாளுக்கு நாள் வன்முறை அதிகரித்து வருவதை அடுத்து, மகிந்த மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர். ‘அவர்களை காணவில்லை’ எனக் கூறப்பட்ட நிலையில், திரிகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் அவர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால், அங்கு … Read more

திருகோணமலையிலிருந்து சோபர் தீவுக்கு தப்பியோடிய மகிந்த ராஜபக்சே குடும்பம் ! வைரலாகும் ஆடியோ

கொழும்பு, இலங்கை முழுவதும் கொந்தளிப்பாக காணப்படும் சூழலில், பிரதமருக்கான அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறினார். பலத்த பாதுகாப்புடன் குடும்பத்தினருடன் சொகுசு வீட்டை விட்டு அவர் வெளியேறினார். இந்நிலையில் மகிந்த ராஜபக்சே, அவரது மனைவி, ஒரு மகன் மற்றும் குடும்பத்தினர் ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை திருகோணமலை கடற்படைத் தளத்தை வந்தடைந்தனர். அவர்கள் கடற்படைத் தளபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து கடற்படை தளத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு போராட்டங்களால் … Read more

ஓய்வு பெற உள்ளாரா ராணி இரண்டாம் எலிசபெத்?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: ராணி இரண்டாம் எலிசபெத் வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற உள்ளதால் படிப்படியாக தனது பொறுப்புகளை இளவரசர் சார்லஸ் இடம் அளித்து வருகிறார் என கூறப்படுகிறது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்(96) வயது மூப்பு காரணமாக தனது அன்றாட பணிகளை மேற்கொள்ள சிரமப்படுகிறார். இதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக தனது அதிகாரத்தை இளவரசர் சார்லஸ் இடம் மாற்றி வருகிறார். இதன் முதல் படியாக ஆண்டுதோறும் பிரிட்டன் பாராளுமன்றத்தின் ஹவுஸ்ஸ் … Read more

போர் முனையில் 200 கண்ணிவெடிகளை கண்டறிந்த பேட்ரனுக்கு பதக்கம் வழங்கி கவுரவம்

கீவ், உக்ரைன் நாட்டின் மீது 9 வாரங்களுக்கும் மேலாக ரஷியா தொடுத்துள்ள போர் நீடித்து வருகிறது.  ரஷிய படையெடுப்பினை முன்னிட்டு உக்ரைனில் பதுக்கி வைக்கப்படும் கண்ணிவெடிகளை கண்டறியும் பணியும் நடந்து வருகிறது. இதில் ஜாக் ரஸ்செல் வகையை சேர்ந்த பேட்ரன் என பெயரிடப்பட்ட இரண்டரை வயது மோப்ப நாய் ஒன்று திறமையாக செயல்பட்டு வருகிறது.  இதுவரை உக்ரைனில் 200 கண்ணிவெடிகளை மோப்பம் பிடித்து கண்டறிந்து உள்ளது. வீரர்களை கவுரவிக்க நடந்த பாராட்டு விழாவில் பேட்ரன் மற்றும் அதன் … Read more

40 இடங்களில் சி.பி.ஐ., ரெய்டு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : விதிகளை மீறி வெளிநாட்டு நன்கொடை பெற்றுத்தந்த விவகாரத்தில், மத்திய உள்துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ., தயாராகி வருகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதை அடுத்து, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனால், வெளிநாட்டு நன்கொடை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. … Read more

இலங்கையை விட்டு மகிந்த ராஜபக்சே வெளியேற மாட்டார் – நமல் ராஜபக்சே

கொழும்பு, இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என அவரது மகனும், எம்.பி.யுமான நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சே தற்போது தங்கியிருக்கும் திரிகோணமலை கடற்படை தளத்தை மக்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நமல் ராஜபக்சே,  இலங்கையை விட்டு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியேற மாட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் மகிந்த ராஜபக்சே விலகமாட்டார். புதிய பிரதமரை தேர்வு செய்வதில் மகிந்த ராஜபக்சே முக்கிய … Read more

இலங்கை நெருக்கடி: போராட்டக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பித்த அரசு

முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடி காரணமாக , மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து நடந்த மோசமான வன்முறையில்,  ராஜபக்சேவின் மூதாதையர் வீடு உள்ள ஆளும் கட்சியை சேர்ந்த பல வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.  இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, நிலைமை மோசமாகி வருகிறது. இலங்கையில் ஏற்பட்டு வரும் வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில், திங்கள்கிழமை, அம்பாந்தோட்டாவில் உள்ள ராஜபக்சேவின் மூதாதையர் வீடு, 14 முன்னாள் அமைச்சர்கள், 18 எம்.பி.க்கள் மற்றும் ராஜபக்சே குடும்பத்திற்கு விசுவாசமான தலைவர்களின் வீடுகள் … Read more

இலங்கையில் பொது சொத்துக்களை சூறையாடுவோரை கண்டதும் சுட உத்தரவு

இலங்கையில் பொது சொத்துக்களை சூறையாடுவோரை கண்டதும் சுட அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டில் அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்டவர்களின் வீடுகள், அலுவலகங்களுக்கு போரட்டக்காரர்கள் தீ வைத்ததுடன், அவர்களின் சொத்துக்களையும் சேதப்படுத்தினர். இந்நிலையில், இன்றும் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து, சக குடிமக்களை தாக்குவோரையும் சுட்டுத்தள்ள முப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, காலே மாவட்டத்தில் உள்ள ரத்காமாவில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் காயமடைந்தனர். மேலும், நீர்கொழும்புவில் இரு … Read more

இந்தாண்டிற்கான புலிட்சர் விருதுக்கு 4 இந்தியர்கள் தேர்வு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்; இந்தாண்டிற்கான புலிட்சர் விருதுக்கு நான்கு இந்தியர்கள் தேர்வாகியுள்ளனர். உலக அளவில் இலக்கியம், பத்திரிகை, ஆன்லைன் ஜர்னலிசம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அமெரிக்காவில் புலிட்சர் எனப்படும் உயரிய விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டிற்கான புலிட்சர் விருதுக்கு நான்கு இந்தியர்கள் தேர்வு பெற்றுள்ளனர். இவர்களில் கடந்தாண்டு ஆப்கானிஸ்தானில் செய்தி சேகரிக்க சென்ற இடத்தில் தலிபான்கள் கொடூர தாக்குதலில் பலியான இந்தியாவைச் சேர்ந்த டேனிஷ் சித்திக், மற்றும் புகைப்பட கலைஞரான அட்னன் அபிதி, … Read more