இலங்கையில் அரசுக்கு எதிராக மெகா போராட்டம்.. ஊரடங்கு நாளை வரை நீட்டிப்பு..!

இலங்கையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், அவரது வீடும், முன்னாள் அமைச்சர்கள், மேயர்கள் வீடுகளும் தீவைத்துக் கொளுத்தப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. இலங்கை முழுவதும் நாடு தழுவிய ஊரடங்கு நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கும் இடையே நேற்று கலவரம் மூண்டது. போராட்டக்காரர்களின் கூடாரங்களுக்கு மகிந்தாவின் ஆதரவாளர்கள் தீ வைத்த நிலையில், பொதுமக்கள் பதில் தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த சிறைக் கைதிகளையும் … Read more

இலங்கையில் நீடிக்கும் வன்முறை – ஐநா கடும் கண்டனம்!

இலங்கை வன்முறை சம்பவத்திற்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அண்டை நாடான இலங்கையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி இருக்கும் இலங்கையில், கொரோனா தொற்று காரணமாக பிறக்கப்பிட்ட முழு ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. சமையல் கேஸ் சிலிண்டர், பெட்ரோல் – டீசல், அரிசி, பருப்பு … Read more

பொது இடங்களில் பெண்கள் பர்தா அணிவது கட்டாயம் என்ற தலிபான் அரசின் உத்தரவை கண்டித்து பெண்கள் பேரணி

ஆப்கானிஸ்தானில், பொது இடங்களில் பெண்கள் தலை முதல் கால் வரை மறைக்கும் பர்தாவை அணிய வேண்டும் என தலிபான் அரசு உத்தரவிட்டதை கண்டித்து காபூலில் பெண்கள் கண்டன பேரணி நடத்தினர். கடந்த முறை தங்கள் ஆட்சியில் விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளை போல் இம்முறை நடக்காது எனத் தெரிவித்திருந்த தலிபான்கள், அண்மையில் பெண்கள், ஆண் துணை இல்லாமல் தனியாக பயணிக்கவும், ஆண்களும் பெண்களும் ஒரே சமயத்தில் பூங்கா செல்லவும் தடை விதித்தனர்.   Source link

பாக்.,கில் அதிகரிக்கும் கோதுமை, சர்க்கரை தட்டுப்பாடு; குடிமக்கள் அவதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: பாக்.,கில் கோதுமை, சர்க்கரை தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டுக் குடிமக்கள் அவதியுற்று வருகின்றனர். பாகிஸ்தான் நாட்டில் சர்க்கரை தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. கைபர் பக்துன்வாலா பகுதிக்கு பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வரவேண்டிய கோதுமை உரிய நேரத்தில் வராமல் போனதால் மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இன்றி தவித்தனர். இதன் காரணமாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முக்கிய உத்தரவு ஒன்றை இட்டுள்ளார். நாட்டில் சர்க்கரை தட்டுப்பாடு … Read more

பாமாயில் மீதான ஏற்றுமதி வரியை குறைக்க மலேசிய அரசு பரிசீலனை

சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய்யின் தேவை அதிகரித்துள்ள நிலையில், மலேசிய அரசு பாமாயில் மீதான ஏற்றுமதி வரியை குறைக்க முன்வந்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போரால் சூரியகாந்தி எண்ணெய்க்கும், இந்தோனேஷிய அரசின் தடை உத்தரவால் பாமாயிலுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சாதகமாக்கி கொண்டு, உலகின் இரண்டாவது பெரிய பாமாயில் உற்பத்தி நாடான மலேசியா, பாமாயில் ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. மலேசியாவிடம் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யும் இந்தியா, வங்கதேசம், ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கோரிக்கையை … Read more

இலங்கை மக்கள் வன்முறையை கைவிட்டு அமைதி காக்க வேண்டும்- அதிபர் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள்

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், அரசுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.  மகிந்த ராஜபக்சே உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த  சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டன.  பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே தமது குடும்பத்தினருடன், திரிகோணமலையில் உள்ள கடற்படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும், அவர் கப்பல் மூலம் வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.  இதையடுத்து திரிகோணமலை கடற்படை தளத்தை முற்றுகையிட்டு … Read more

நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்: ராஜபக்சே மகன் உறுதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையில் மக்கள் போராட்டத்தை அடுத்து ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், ‛நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்’ என மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. இதனையடுத்து மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அவரின் வீட்டிற்கும், மேற்கு மாகாணத்தில் மல்வனை பகுதியில் உள்ள … Read more

தாஜ்மகாலை எலான் மஸ்க் குடும்பத்தினர் பார்வையிட்ட தருணங்கள்… இது 3 தலைமுறைகளின் கதை!

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மகாலுக்கு உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு காலகட்டங்களில் வந்து சென்றுள்ளனர். இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா நகரின் யமுனை ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ளது தாஜ்மகால். வெளிநாட்டினர், உள்நாட்டு மக்கள் என தினமும் பல ஆயிரம் பேர் வந்து பார்வையிட்டு செல்லும் இடம். உலகின் முக்கியமான இடங்களில் ஒன்று. முகலாய மன்னர் ஷாஜகான், அவரது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய மகால் இது. … Read more

சிறைச்சாலையில் பயங்கர மோதல் – 44 கைதிகள் படுகொலை!

ஈக்வடார் நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 43 கைதிகள் உயிரிழந்து உள்ளனர். தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறைச்சாலைகளில் அடிக்கடி கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் நடந்து வருகிறது. தலைநகர் குய்டோவில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் சாண்டோ டொமிங்கோ டிலாஸ் கொலராடோசில் உள்ள பெல்லாவிஸ்டா சிறைச்சாலையில், இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பயங்கர கலவரம் வெடித்தது. இந்த … Read more

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதை விரைவுபடுத்தும் சட்ட முன்வடிவில் கையெழுத்திட்டார் அதிபர் ஜோ பைடன்!

ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை விரைவு படுத்துவதற்கான கடன் குத்தகை சட்ட முன்வடிவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார். இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரை தோற்கடிக்க ராணுவ உதவிகள் வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட இச்சட்டம் தற்போது, உக்ரைனுக்காக புதுப்பிக்கப்பட்டு கையெழுத்திடப்பட்டுள்ளது. இச்சட்டம் அமெரிக்கா உக்ரைனுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்குவதை எளிதாக்குகிறது. உக்ரைனுக்காக கூடுதலாக 33 பில்லியன் டாலர்கள் நிதி வழங்குவதற்கான கோரிக்கையையும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜோ பைடன் முன்வைத்தார்.  Source link