இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை; மோடி-ஜின்பிங் சந்திப்பில் முக்கிய முடிவு

பீஜிங், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது சீனா, ரஷியா, இந்திய உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளை கொண்ட அரசியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு அமைப்பாகும். இந்த அமைப்பு கடந்த 2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்தன. இந்த அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு ஆகஸ்டு 31 மற்றும் செப்டம்பர் 1-ந்தேதிகளில் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் நடைபெறுகிறது. … Read more

பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிரான பாரபட்சமான தடைகளை ரஷ்யாவும் சீனாவும் எதிர்க்கின்றன: புதின்

தியான்ஜின்: பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் சமூகப் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் “பாரபட்சமான தடைகளுக்கு” எதிராக ரஷ்யாவும் சீனாவும் பொதுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார். பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு 10% வரி விதிக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அச்சுறுத்திய நிலையில், புதின் இக்கருத்தை கூறியுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு (SCO) உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள தியான்ஜினுக்கு வந்த ரஷ்ய அதிபர் புதின், சீன அரசின் சின்ஹுவா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ … Read more

உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி… கோல்ப் விளையாடிய டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், பொருளாதாரம் மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில், தற்போது 79 வயதாகும் டிரம்ப்பின் உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும் தான் முழு உடல்நலத்துடன் இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். முன்னதாக டிரம்ப்பின் கைகளில் சிராய்ப்பு காயங்கள் இருப்பதை காட்டும் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. இது குறித்து கடந்த ஜூலை … Read more

சீனாவும் இந்தியாவும் நண்பர்களாக இருப்பது சரியான தேர்வு: மோடி முன்னிலையில் ஜி ஜின்பிங் உரை

தியான்ஜின்: சீனாவின் தியான்ஜினில் பிரதமர் மோடியுடனான இருதரப்பு சந்திப்பின் போது, ​​சீன அதிபர் ஜி ஜின்பிங், “இரு நாடுகளும் நண்பர்களாக இருப்பது சரியான தேர்வு” என்று கூறினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனாவின் தியான்ஜின் நகருக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். ஏழு ஆண்டுகளுக்கு பின் சீனா சென்ற அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எஸ்சிஓ அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் ஒரு … Read more

25 வயதுக்குள் கோடிகளை குவிக்கலாம்… AI படிப்புகளை முடித்தால்… ஆனால் இந்த தப்பை பண்ணாதீங்க!

AI jobs 2025: AI படிப்புகளை படித்தால் 25 வயதுக்கு முன்னரே கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம். இதுகுறித்து விரிவாக எங்கு காணலாம்.

இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: ஜி ஜின்பிங் உடனான சந்திப்பில் பிரதமர் மோடி அறிவிப்பு

சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற 15-வது இந்திய, ஜப்பான் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதன் பிறகு அவர் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் 90 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று டோக்கியோவில் 16 ஜப்பானிய ஆளுநர்களுடன் கலந்துரையாடினார். ஜப்பான் பயணத்தை நிறைவு … Read more

தேடப்படும் வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது பெல்ஜியம் நீதிமன்றம்

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,300 கோடி மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷியின் ஜாமீன் மனுவை பெல்ஜியம் நீதிமன்றம் நிராகரித்தது. மும்பையில் நகை வியாபாரம் செய்த கீதாஞ்சலி குழுமத்தின் உரிமையாளர் மெகுல் சோக்‌ஷி (66). இவரும் இவரது உறவினர் நீரவ் மோடியும் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் பெற்று மோடி செய்து வெளிநாடு தப்பிச் சென்றனர். இவர்கள் நிதி மோசடி குற்றவாளிகளாக … Read more

சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு: இன்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார்

தியான்ஜின்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று சீனாவின் தியான்ஜின் நகருக்கு சென்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அவர் இன்று சந்தித்துப் பேசுகிறார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற 15-வது இந்திய, ஜப்பான் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதன் பிறகு அவர் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் 90 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் … Read more

ட்ரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை: மேல்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த அதிபர் ட்ரம்பின் உத்தரவுகள் சட்டவிரோதமானவை என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கூடுதல் வரிவிதிப்பை நீக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ட்ரம்ப் அரசு மேல்முறையீடு செய்ய அக்டோபர் 14-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரிவிதிப்புக் கொள்கையை அமெரிக்கா கடை பிடிக்கும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். கனடா, மெக்சிகோ உட்பட … Read more

ஏமனில் இஸ்ரேல் தாக்குதல்: ஹவுதி அரசின் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டார்

சனா: ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி அரசின் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சிப் படை சனிக்கிழமை அன்று அறிவித்தது. இந்த தாக்குதல் ஏமன் தலைநகர் சனாவில் நடந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹவுதி அரசின் அமைச்சர்கள் மற்றும் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது. இதை அன்றைய தினம் இஸ்ரேல் பாதுகாப்பு படையும் உறுதி செய்திருந்தது. ‘ஹவுதி தீவிரவாத படையின் முக்கிய இடத்தின் மீது … Read more