போர் மூளும் அபாயம்: நாடு தழுவிய அவசர நிலை பிரகடனம் அறிவித்தது உக்ரைன்

ரஷியா பாராளுமன்றத்தில் நேற்று உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை அங்கீகரித்துள்ளது ரஷியா. உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உக்ரைன் எல்லையையொட்டி ரஷியா போர்ப்படைகள் நகர்ந்து வருகின்றன. உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீட்டர் தொலைவில்தான் ரஷிய படைகள் முகாமிட்டுள்ளது. இது செயற்கைக்கோள் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் ரஷியா போர் … Read more

27 வயது மாடல் அழகியின் காதல் வலையில் விழுந்த 50 வயது எலான் மாஸ்க்…!

சிட்னி, உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவருமான  எலான் மஸ்க்கிற்கு  தற்போது 50 வயது ஆகிறது. இவர் கடந்த 2000-ம் ஆண்டு ஜஸ்டின் வில்சன்என்பவரை திருமணம் செய்துகொண்டார். 8 ஆண்டுகள் நீடித்த இவர்களது உறவு கடந்த 2008-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு டலுலா ரிலே என்ற  நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார் எலான் மஸ்க். கடந்த 2012-ம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை … Read more

ரஷ்யா மீது பொருளாதார தடை – பிரதமர் அதிரடி அறிவிப்பு!

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக, கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ அறிவித்துள்ளார். ‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது. … Read more

டிரம்பின் சமூகவலைத்தள செயலியை கிண்டலடித்து இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்கள்! <!– டிரம்பின் சமூகவலைத்தள செயலியை கிண்டலடித்து இணையத்தில் வைர… –>

முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் அன்மையில் வெளியிட்ட சமூக வலைத்தள செயலியில் ஏராளமான குறைபாடுகள் இருந்ததால் ட்விட்டரில் அதனை கிண்டல் அடித்து மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அந்நாட்டு அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது  டிரம்ப் வன்முறை தூண்டும் விதமாக பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பதிவிட்டதால், அவரது ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டனர். பின்னர் அந்த பதிவுகள் நீக்கப்பட்டதோடு அவரது சமூகவலைத்தள பக்கமும் முடக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை, சென்சார் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட Truth Social … Read more

கிழக்கு உக்ரைனில் வெடிகுண்டு தாக்குதல்- பொதுமக்கள் பீதி

கிழக்கு உக்ரைனில் உள்ள டென்ட்ஸ்க் மாகாணத்தில் ஒரு பகுதி அரசு கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலும் உள்ளது. அங்கு கிளர்ச்சியாளர்கள் டென்ட்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லுகன்ஸ்க் மக்கள் குடியரசு ஆகியவற்றை அமைத்துள்ளனர். டென்ட்ஸ்க் மாகாணத்தில் சில நாட்களாக அரசு படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இருதரப்பு பகுதியிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இந்த நிலையில் உக்ரைன்- ரஷியா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் கிழக்கு உக்ரைனில் அரசு … Read more

வெடி விபத்தில் 59 பேர் பலி| Dinamalar

உகாடோவுகோ:புர்கினா பாசோவில், தங்க சுரங்கம் அருகே ரசாயன பொருட்கள் வெடித்த விபத்தில், 59 பேர் பலியாயினர்.மேற்கு ஆப்ரிக்க நாடான புர்கினா பாசோவில், பாம்ப்லோரா கிராமம் அருகே தங்க சுரங்கம் அமைந்துள்ளது. இதன் அருகே, தங்க சுத்திகரிப்புக்கான ரசாயன பொருட்கள் அதிக அளவில் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன.இந்த ரசாயன பொருட்கள் நேற்று முன்தினம் திடீரென வெடித்து சிதறின. இதில் அப்பகுதியில் இருந்த 59 பேர் பரிதாபமாக பலியாயினர். காயமடைந்த 100க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.வெடிவிபத்தால் பலியானோர் உடல்கள், … Read more

Russia-Ukraine Crisis: அகண்ட ரஷ்யாவை ஏற்படுத்துவதற்கான புடினின் திட்டம்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்,  ஆயுத பிரயோகம் ஏதும் இல்லாமல் உக்ரைனை மூன்றாகப் பிரித்துள்ளார். உக்ரைனின் இரு கிழக்கு மாகாண பகுதிகளையும் சுதந்திர நாடுகளாக விளாடிமிர் புடின் அங்கீகரித்துள்ளார். இந்தப் பகுதிகளில் உக்ரைனின் ராணுவம் நடத்தும் தாக்குதலில் இருந்து பாதுகாக்க உதவுவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனின் பிரிவினைவாதப் பகுதிகளை சுதந்திர நாடாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அங்கீகரித்துள்ளார். கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு பகுதிகள் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் … Read more

உக்ரைன் எல்லையில் இருந்து 20 கி.மீ தொலைவில் படைகளை நிறுத்திய ரஷ்யா: பாயும் பொருளாதாரத் தடைகள்

மாஸ்கோ: உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீ. தொலைவில் படைகளை நிறுத்தியுள்ளது ரஷ்யா. இது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களை அமெரிக்காவின் மாக்ஸார் டெக்னாலஜிஸ் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்துக்கு முன்னதாக எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்களில் தெற்கு பெலாரஸில் உள்ள மோசிர் விமான தளத்தில் படைகளின் முகாமும், 100 வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விமான தளம் உக்ரைன் எல்லையில் இருந்து 40 கி.மீ.-க்கும் குறைவான தொலைவிலேயே இருக்கிறது. இதுதவிர மேற்கு ரஷ்யாவின் போச்செப் பகுதியில் கூடுதல் … Read more

ரஷ்யாவுக்கு எரிவாயு குழாய் திட்டத்தை நிறுத்திய ஜெர்மனி

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள கடல் பகுதியில் இருந்து ஜெர்மனியின் லப்மின் வரை பால்டிக் கடலுக்கு கீழே 1,200 கிலோ மீட்டர் நீளத்துக்கு நார்டு ஸ்ட்ரீம்-2 என்ற எரிவாயு குழாய் மூலம் ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயுவை கொண்டு செல்ல அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நார்டு ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் திட்டத்துக்கு வழங்கிய ஒப்புதலை ஜெர்மனி நிறுத்தி வைத்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இப்பணிகள் முழுமையாக முடிந்தாலும் இன்னும் எரிவாயு கொண்டு செல்லப்படாத நிலையில் அதற்கான ஒப்புதலை … Read more