உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42.37 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 கோடியே 37 லட்சத்து 18 ஆயிரத்து 979 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 … Read more

Unique experiment: சூப்பர் ஐடியா! நீர் சேமிப்பு + மின்சார உற்பத்தி = சோலார் பேனல்கள்

Unique experiment: கால்வாய்களில் சோலார் பேனல்களை வைத்து, 63 பில்லியன் கேலன் தண்ணீர் சேமிப்பதுடன், 13 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சூப்பர் திட்டம்… 4,000 மைல்கள் (6437 கிமீ) அளவிற்கு கால்வாய்களின் இரண்டு பக்கங்களிலும் சோலார் பேனல்கள் வைக்கப்பட்டு இந்த அற்புதமான இயற்கையை மேம்படுத்தி, நவீன வசதிகளை பெறும் திட்டம் கலிபோர்னியாவில் செயல்படுத்தப்படுகிறது. நெவாடா மலைகள் மற்றும் கலிபோர்னியாவின் வடக்குப் பகுதிகளிலிருந்து மாகாணத்தின் பிற பகுதிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்லும் கால்வாய்களின் இருபுறமும் சூரியசக்தி பேனல்கள் … Read more

தலைநகரை மாற்றும் இந்தோனேசியா: காரணம் என்ன? 

ஜகர்த்தா: இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவை போர்னியோ தீவுக்கு மாற்றும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. புதிய தலைநகருக்கு நுசாந்தரா எனப் பெயர் வைக்கவும் இந்தோனேசிய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த சில வருடங்களாக இந்தோனேசியத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வந்த கோரிக்கை தற்போது நிறைவேறவுள்ளது. நாடாளுமன்றத்தில் தலைநகரை மாற்ற நாடாளுமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து புதிய தலைநகரை மேம்படுத்துவதற்கான பணியை இந்தோனேசியா தொடர்ந்துள்ளது. தேசிய திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு முகமையின் தரவுகளின்படி, புதிய தலைநகருக்கான மொத்த … Read more

உக்ரைன் எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு உக்ரைன் வீரர்கள் பலி.! <!– உக்ரைன் எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் ஏவுக… –>

உக்ரைன் எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு உக்ரைன் வீரர்கள் உயிரிழந்தனர். ரஷ்யா ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக உக்ரைன் ராணுவத்தினர் தெரிவித்தனர். டோனேடெஸ்க் மாகாணத்தில் உள்ள ரஷ்யா ஆதரவு பெற்ற பிரிவினைவாத அரசின் தலைவரான டெனிஸ் புஷிலின் முழு அளவில் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பதாக அறிவித்துள்ளார். உக்ரைன் எல்லையருகே அந்நாட்டு ராணுவத்திற்கும் பிரிவினைவாத படைகளுக்கும் இடையே  வன்முறைத் தாக்குதல்களும் மோதல்களும் அதிகரித்துவருகிறது. இதனைப் பயன்படுத்தி ரஷ்யா உக்ரைன் … Read more

எல்லையின் நிலையே சீனாவுடனான உறவை தீர்மானிக்கும் – மத்திய வெளியுறவுத்துறை மந்திரி கருத்து

முனிச்: ஜெர்மனியில் நடைபெற்ற முனிச் பாதுகாப்பு மாநாடு குழு விவாதத்தில்  இந்தியா சார்பில் பங்கேற்ற வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பின்னர் சீனாவுடனான இந்தியாவின் உறவு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்  பேசியதாவது: பிரச்சனை என்னவென்றால், 45 ஆண்டுகளாக நிலையான எல்லை நிர்வாகம் இருந்தது. 1975 முதல் எல்லையில் ராணுவ உயிரிழப்புகள் எதுவும் இல்லை. நாங்கள் ராணுவப் படைகளை கொண்டு வரக்கூடாது என்று சீனாவுடன் ஒப்பந்தம் செய்தோம். நாங்கள் அதை எல்லை என்று அழைக்கிறோம். ஆனால் அது … Read more

26 நாடுகள் பங்கேற்கும் ‘ஆளில்லா விமான கண்காட்சி-கருத்தரங்கு’ – அபுதாபியில் நாளை தொடங்குகிறது

அபுதாபி, அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் ஆளில்லா விமானம் மற்றும் அதனை இயக்குவது தொடர்பான பயிற்சி கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 5-வது ஆண்டாக இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 26 நாடுகளைச் சேர்ந்த 134-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் முதல் முறையாக இஸ்ரேல், செர்பியா, ஆஸ்திரியா, பல்கேரியா, மால்டா, துருக்கி மற்றும் பக்ரைன் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன. ஆளில்லா விமானம் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்கள், நவீன உத்திகள், பாதுகாப்பு … Read more

ஒமைக்ரான் பரவினாலும் ஊரடங்கு கிடையாது: நியூசிலாந்து

ஒமைக்ரான் பரவ ஆரம்பித்தாலும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று நியூசிலாந்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, “இந்தக் காலகட்டத்தில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் தொற்று, முன்பை விட வித்தியாசமானது. ஒமைக்ரான் அதிகம் தொற்றும் தன்மை கொண்டது. இது கடினமாக இருக்கப் போகிறது. கோவிட் மாறும்போது நாமும் மாற வேண்டியுள்ளது. ஆனால், இந்த முறை ஒமைக்ரான் காரணமாக கரோனா பரவல் ஏற்பட்டாலும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை. கட்டுப்பாடுகளை மட்டுமே … Read more

தண்ணீரில் ஆக்சிஜன் அளவு அதிகரித்த காரணமா.? கடலில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆயிரக்கணக்கான மீன்கள் <!– தண்ணீரில் ஆக்சிஜன் அளவு அதிகரித்த காரணமா.? கடலில் இறந்த ந… –>

சிலி நாட்டின் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பயோ பயோ பகுதியில் உள்ள கடலில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக சுற்றுச்சூழல் அதிகாரிகள் கடல் தண்ணீரின் மாதிரியை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையில் கடல் தண்ணீரில் வழக்கத்தை விட அதிக அளவு ஆக்சிஜன் அளவு கூடியதால் தான் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். Source link

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் உதவி

காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கபடைகள் வெளியேறியதை அடுத்து அங்கு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். புதிய அரசாங்கத்தை அமைத்துள்ள தலிபான்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதனால் தலிபான் அரசாங்கத்தை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. சர்வதேச அங்கீகாரம் கிடைக்காததால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதற்கிடையே மனிதாபிமான அடிப்படையில் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு உதவியது. கடந்த டிசம்பர் மாதம் மருந்துகளை ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பியது.   அதன் பின் 2 முறை … Read more