அவசரப்பட்டு ஊரடங்கை கைவிடக்கூடாது: உலக சுகாதார அமைப்பு| Dinamalar

ஜெனிவா: உலக நாடுகள் அவசரப்பட்டு ஊரடங்கை கைவிடக்கூடாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.உலகம் முழுவதும் தற்போது ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அவ்வப்போது உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுப்பது வழக்கம். ஒமைக்ரான் பரவல் அதிகரித்தாலும் இதனால் பலியாகுபவர்களது எண்ணிக்கை மிகமிகக் குறைவாக உள்ளதன் காரணமாக தற்போது உலக நாடுகள் பல ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. ஆனால் உலக சுகாதார அமைப்பு வைரஸ் தாக்கம் இன்னும் முழுவதுமாக உலகை விட்டு நீங்கவில்லை … Read more

ஈரான் தீவிரமாக இருந்தால் அணுசக்தி ஒப்பந்தம் சாத்தியம்: அமெரிக்கா

வாஷிங்டன்: அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் தீவிரமாக இருந்தால், சில நாட்களில் ஒப்பந்தம் சாத்தியமாகும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்து வருகிறது. இதில் பிரான்ஸ், பிரிட்டன், சீனா, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகள் கலந்துகொண்டுள்ளன. அமெரிக்காவும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளது. அமெரிக்கா விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கும் ஈரான் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை சிலவற்றை நீக்குவதாகவும் … Read more

ஒருத்தருக்குக் கூட கொரோனா வரவே இல்லை.. அசரடிக்கும் நாடுகள்.. கொஞ்சம் குட்டித் தீவுகள்!

பல நாடுகளிலும் அலை அலையாக கொரோனா வந்து குதறி எடுத்து விட்டுப் போன போதிலும் கூட சில நாடுகளில் கொரோனா இதுவரை எட்டிப் பார்க்கக் கூட இல்லை. இப்படிப்பட்ட நாடுகளும் பூமியில் உள்ளன. கடந்த 2 வருடமாக கொரோனா பரவல் குறையாமல் நீடித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 3 அலைகளாக பரவல் இருந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் முதல் அலையில் மிகப் பெரும் உயிரிழப்பை சந்தித்தன. 2வது அலையிலும் அதே நிலைதான் ஏற்பட்டது. ஓமைக்ரான் வந்த பிறகுதான் … Read more

ரஷ்யா – உக்ரைன் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம் : அமெரிக்கா எச்சரிக்கை <!– ரஷ்யா – உக்ரைன் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம் : அமெரிக்கா… –>

உக்ரைன் எல்லைகளில் இருந்து ரஷ்யா படைகளை திரும்பப் பெற்று வருவதாக கூறி வரும் நிலையில், உக்ரைனில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, உக்ரைன் மீது ரஷ்யா அடுத்த சில நாட்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.  சோவியத் யூனியன் உடைந்த போது தனிநாடாக உருவெடுத்த உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா முயற்சித்து வருவதால், பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைனின் … Read more

சரக்கு கப்பலில் தீ விபத்து: ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் எரிந்து நாசம்

வால்க்ஸ்வேகன் குழுமத்தின் ஆயிரக்கணக்கான சொகுசு கார்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ஃபெலிசிட்டி ஏஸ் என்ற மிகப்பெரிய பனாமா சரக்குக் கப்பல்  அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசோர்ஸ் தீவுகள் அருகே திடீரென தீப்பிடித்தது. தீ விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போர்ச்சுகல் கடற்படை மற்றும் விமானப்படையினர் விரைந்து கப்பலில் இருந்த 22 பணியாளர்களை பத்திரமாக மீட்டனர். விபத்துக்கான காரணம் குறித்தும், தீயில் சிக்கிய கார்களின் எண்ணிக்கை குறித்தும் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர். ஃபெலிசிட்டி ஏஸ் ரக கப்பல் … Read more

சுறா மீன் தாக்கி ஒருவர் பலி சிட்னி கடற்கரைகள் மூடல்| Dinamalar

சிட்னி:கடலில் குளித்து கொண்டிருந்த ஒருவர், சுறா மீன் தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில், மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு தலங்களுள், கடற்கரையும் ஒன்று. இங்கு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர், கடலில் குளித்து மகிழ்வர்.சமீபத்தில், சிட்னிக்கு அருகில் உள்ள லிட்டில் பே என்ற கடற்கரையில், கடலில் குளித்து கொண்டிருந்த ஒருவரை சுறா மீன் தாக்கியது. இதில் அவர் உயிரிழந்தார். இது தொடர்பான, ‘வீடியோ’ சமூக வலை தளங்களில் வெளியாகி … Read more

கனடா பிரதமரை ஹிட்லருடன் ஒப்பிட்ட எலான் மஸ்க்..!

ஒட்டாவா, கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி டிரைவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் லாரி டிரைவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கனடா அரசு அறிவித்தது. இதை எதிர்த்து கனடாவில் தலைநகர் ஒட்டாவாவில் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தின் ஒரு பகுதியாக கனடா – அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலமான தி அம்பாசிடர் பாலத்தை போராட்டக்காரர்கள் முடக்கினர். அதன்பின்னர், அந்த மேம்பாலம் மூடப்பட்டது. இதனால் … Read more

அடுத்த கட்டத்துக்கு செல்லும் உக்ரைன் ரஷ்யா விவகாரம்: மழலையர் பள்ளி மீது ஷெல் தாக்குதல்

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கிழக்கு உக்ரேனிய கிராமமான ஸ்டானிட்சியா-லுகன்ஸ்கா மீது ரஷ்ய பிரிவினைவாதிகள் ஷெல் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 20 குழந்தைகள் மற்றும் 18 ஊழியர்கள் பயன்படுத்தும் மழலையர் பள்ளியின் சுவரில் ஷெல் வெடிப்பு நடந்தது. குழந்தைகள் உள்ளே இருந்தபோதும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அந்த மழலையர் பள்ளியில் இருந்த குழந்தைகள் காயம் ஏதும் ஏற்படாமல் சிறிது நேரத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மழலையர் பள்ளி … Read more

துவாலு முதல் நவுரு வரை… கரோனாவே இல்லாத நாடுகளின் பட்டியல் – WHO வெளியீடு

ஜெனீவா: கரோனா தொற்று இல்லாத நாடுகள் எவை என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலான நாடுகள் பசிபிக் மற்றும் அட்லான்டிக் பெருங்கடலில் உள்ள தீவு தேசங்கள். துவாலு: பசிபிக் பெருங்கடலில் உள்ள இந்த நாட்டு காமன்வெல்த் கூட்டமைப்பில் ஓர் அங்கம் வகிக்கிறது. கரோனா பரவல் தொடங்கியவுடன் இந்த நாடு கட்டாய தனிமைக்குச் சென்று எல்லைகளை மூடியது. இப்போது அங்கு 50% மக்கள் முழுமையாக … Read more

வாரத்தில் 4 நாட்கள் வேலை – அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்!

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே அரசு ஊழியர்கள் பணிபுரியும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில், வாரத்தில் நான்கு நாள் மட்டுமே வேலை என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், இந்த திட்டத்துடன், ஊழியர்களுக்கு மற்றுமொரு பெரிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதாவது, அலுவலக நேரம் முடிந்த பின் அலுவலகம் சம்பந்தப்பட்ட அனைத்து சாதனங்களையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து வைக்கலாம். அலுவலகம் சம்பந்தப்பட்ட எந்த செய்திகள் மற்றும் அழைப்பிற்கு பதிலளிக்க வேண்டும் என்ற கட்டாயம் … Read more