உக்ரைனின் தலைநகரில் 'பெரிய அளவிலான' டிரோன் தாக்குதல்

கீவ், உக்ரைன், ரஷியா இடையேயான போர் ஆயிரம் இருநூறு நாட்களைத் தாண்டி நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியா, உக்ரைன் நடத்திய நேரடி பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனிடையே, கடந்த 1ம் தேதி உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷிய போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. இதனால், இரு தரப்பு மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. … Read more

ஈரான் அணு சக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவின் பி-2 போர் விமானத்தின் சிறப்பு அம்சங்கள்

வாஷிங்டன்: கடந்த 1970-களில் அதிவீன பி-2 போர் விமானத்தை தயாரிக்கும் பணியில் அமெரிக்கா களமிறங்கியது. புதிய போர் விமானத்தை தயாரிக்கும் பணி அமெரிக்காவின் நார்த்ரோப் கார்ப்பரேசனிடம் அளிக்கப்பட்டது. கடந்த 1989-ம் ஆண்டில் பி-2 போர் விமானம் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. உலகின் மிகச் சிறந்த போர் விமானமாக பி-2 கருதப்படுகிறது. 172 அடி அகலம், 69 அடி நீளம் கொண்ட இந்த போர் விமானத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதனை ரேடாரில் கண்டறிய முடியாது. அணு … Read more

உச்சகட்ட போர்ப்பதற்றம்: ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது..? – டிரம்ப் கேள்வி

வாஷிங்டன் ஈரான் நாட்டில் உள்ள போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய 3 முக்கிய அணு செறிவூட்டல் நிலையங்கள் மீது அமெரிக்கா நேற்று குண்டு வீசி தாக்கியது. இந்த தாக்குதலுக்கு பிறகு, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்க மக்களுக்கு விளக்கமளிக்க, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “அமெரிக்க ராணுவ தாக்குதல்களால் ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் முற்றிலும் முழுமையாகவும் அழிக்கப்பட்டுவிட்டன. இந்த தாக்குதல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. நமது போர் … Read more

அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிப்பு – முழு விவரம்!

டெஹ்ரான்: அமெரிக்க போர் விமானங்​கள், நீர்​மூழ்​கி​ கப்பல்களில் இருந்து சரமாரியாக குண்டுகள், ஏவுகணைகளை வீசி நடத்​தப்பட்ட தாக்குதலில், ஈரானின் 3 அணுசக்தி தளங்​கள் முற்​றி​லு​மாக அழிக்​கப்​பட்​டன. ஈரானிடம் 10-க்​கும் மேற்​பட்ட அணுகுண்​டு​கள் தயாரிக்க தேவை​யான யுரேனி​யம் இருப்​ப​தாக கணக்​கிடப்​பட்​டுள்​ளது. ஈரானிடம் உள்ள யுரேனி​யம் தற்​போது 87 சதவீதம் அளவுக்கு செறிவூட்​டப்​பட்டு இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. யுரேனி​யத்தை சுமார் 90 சதவீதம் அளவுக்கு செறிவூட்​டி​னால் அணுகுண்​டு​களை தயாரிக்க முடி​யும். இதற்​கிடையே, அமெரிக்க அதிப​ராக டொனால்டு ட்ரம்ப் பதவி​யேற்ற பிறகு, ஈரானின் … Read more

அமெரிக்க தாக்குதலால் ஆவேசம்: இஸ்ரேலை நோக்கி சீறும் ஏவுணைகள் – ஈரானின் புது ‘வியூகம்’ என்ன?

தெஹ்ரான் / டெல் அவிவ்: இஸ்ரேலுக்கு ஆதரவாக தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா மீதான கடும் கோபத்தில் உள்ள ஈரான் பல்வேறு புதிய வியூகங்களை வகுத்துள்ளது. இதனிடையே, ஆவேசத்தின் உச்சமாக, இஸ்ரேல் நகரங்கள் மீது சக்தி வாய்ந்த ஏவுகணைகளை வீசி கடும் தாக்குதல் நடத்தி வருகிறது ஈரான். அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக உள்ளது என கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் கடுமையாக பதிலடி தந்து வந்ததால் இரு … Read more

''போரின் தீவிரத்தை குறைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்'' – ஈரான் அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ஈரான் அதிபர் மசூத் பெஷஷ்கியன் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, போரின் தீவிரத்தைக் குறைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வலியுறுத்தியுள்ளார். ஈரான்-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வந்த நிலையில், இன்று திடீரென அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால், போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபருடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, ​​சமீபத்திய பதற்றங்கள் குறித்து பிரதமர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். … Read more

அமெரிக்க தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் திட்டவட்டம்

டெஹ்ரான்: ஈரானில் அமைந்துள்ள அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதி செய்தார். இந்நிலையில், இது தொடர்பாக ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக உள்ள அமெரிக்கா, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ஐ.நா சாசனம், சர்வதேச … Read more

போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் சம்மதிக்க வேண்டும்: டிரம்ப் பதிவு

நியூயார்க், காசா மீது இஸ்ரேல் ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் சூழலில், ஈரான் நாடும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும் அதற்கு பதிலடி கொடுத்தது. இதன்பின்னர் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் தணிந்திருந்த சூழலில், திடீரென ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனை … Read more

'நரி திட்டம்' அச்சத்தில் அமெரிக்கா… பயமுறுத்தும் ஈரான்… ஸ்லீப்பர் செல் ஞாபகம் இருக்கா?

Sleeper Cell: ஈரானுக்கு எதிரான போரில் தற்போது இஸ்ரேலுடன் அமெரிக்கா கைக்கோர்த்துவிட்டது. இந்நிலையில், ஈரானின் ஸ்லீப்பர் செல்கள் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

“இனியும் உடன்படவில்லை எனில்…” – ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை விவரித்த ட்ரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: “ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம். அமைதிக்கான உடன்பாட்டை மேற்கொள்ளவில்லை எனில், ஈரான் மீது அடுத்தடுத்த தாக்குதல் மிகப் பெரியதாக இருக்கும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதை சமூக வலைதள பதிவு மூலம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.30 (இந்திய நேரப்படி) … Read more