விண்வெளியில் காந்தப்புயல்; SpaceX அனுப்பிய 40 செயற்கோள்கள் சேதம்..!!

விண்வெளியில் உண்டான காந்த புயலினால் செயற்கோள்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், பிரபல தொழிலதிபர் எலான் மாஸ்க்கின் ஏராளமான செயற்கை கோள்கள் சேதமடைந்தன என தகவல்கள் வெளியாகியுள்ளது. விஞ்ஞான சாதனையாக திகழும் வான்வெளியில் நிறுத்தபட்ட செயற்கை கோள்களை கண்ணுக்கு தெரியா காந்த புயல் நொடியில் செயலிழக்க வைத்துள்ளது.எலோன் மஸ்க்கின் விண்வெளி முயற்சியில்,  ஸ்பேஸ்எக்ஸ் பல செயற்கைக்கோள்களை இந்த புயலில் இழந்தது, சமீபத்தில் ஏவப்பட்ட பல செயற்கை கோள்கள் பூமியை நோக்கி விழுந்ததால் அழித்தது. மேலும் படிக்க | விண்வெளியில் உடல் … Read more

'உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்': அமெரிக்கர்களுக்கு பைடன் அறிவுறுத்தல்

வாஷிங்டன்: போர்மேகச் சூழலில் சிக்கியுள்ள உக்ரைனில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார். உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எல்லையில் சுமார் 1 லட்சம் வீரர்களை ரஷ்யா நிறுத்தியுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை என்பிசி செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அதிபர் பைடன், “அமெரிக்கர்கள் உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டிய தருணம் இது. நாங்கள் உலகின் மிகப்பெரிய ராணுவத்தை எதிர்கொண்டுள்ளோம். இது மிகவும் வித்தியாசமான சூழல். நிலைமை … Read more

ஹெச்ஐவி கிருமியைக் கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானி காலமானார் <!– ஹெச்ஐவி கிருமியைக் கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானி காலமானார் –>

எச்ஐவி கிருமியைக் கண்டுபிடித்த என்ற பெருமைக்குரிய பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி லுக் மாண்டாக்னியர் தனது 89வது வயதில் காலமானார். பாஸ்டர் நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சியாளராக இருந்தபோது 1983ம் ஆண்டு எச்ஐவி கிருமியைக் கண்டுபிடித்தார். எச்ஐவி வைரஸ் குறித்த கண்டுபிடிப்புகளை யார் முதலில் கண்டுபிடித்தது என்பது குறித்து காலே என்ற விஞ்ஞானியுடன் அவர் நீண்ட போராட்டம் நடத்தினார். இறுதியில் இருவரும் அந்தச் சாதனையைப் பகிர்ந்து கொண்டனர். கடந்த 2008ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை சக ஆய்வாளருடன் மான்டாக்னியர் … Read more

லிபியா பிரதமரை கொல்ல முயற்சி: காரில் சென்றபோது துப்பாக்கிச்சூடு

திரிபோலி : லிபியா நாட்டின் பிரதமராக அப்துல் ஹமீத் அல் திபய்பா (வயது 62) உள்ளார். இவர் நேற்று தலைநகர் திரிபோலியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவர் கார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர். இந்த கொலை முயற்சியில் அவர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு அரசியல் குழப்பமும் நிலவுகிறது.

லிபியா பிரதமரை கொல்ல முயற்சி..! காரில் சென்றபோது துப்பாக்கிச்சூடு

திரிபோலி,  லிபியா நாட்டின் பிரதமராக அப்துல் ஹமீத் அல் திபய்பா (வயது 62) உள்ளார். இவர் நேற்று தலைநகர் திரிபோலியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவர் கார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர். இந்த கொலை முயற்சியில் அவர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு அரசியல் குழப்பமும் நிலவுகிறது.

தடுப்பூசியால் சுவாச உறுப்புகளுக்கு பாதுகாப்பு இல்லை: புதிய முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள்!

கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படு உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதற்கிடையே, தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தடுப்பூசி தொடர்பாக புதிய முயற்சிகளில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து விரைவில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக கனடா நாட்டை … Read more

சவுதி அரேபியாவில் ட்ரோன் மூலம் ஹவுதி போராளிகள் தாக்குதல் நடத்த முயற்சி… 12 தொழிலாளர்கள் காயம் <!– சவுதி அரேபியாவில் ட்ரோன் மூலம் ஹவுதி போராளிகள் தாக்குதல் … –>

சவுதி அரேபிய விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 12 பேர் காயமடைந்தனர். ஏமன் எல்லைக்கு அருகில் உள்ள அபா விமான நிலையத்தின் மீது ஹவுதி போராளிகள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்றனர். இதையடுத்து வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் ட்ரோனை சவுதி அதிகாரிகள் சுட்டு வீழ்த்தினர். ஆனால் வீழ்த்தப்பட்ட ட்ரோனின் பாகங்கள் விழுந்ததில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் காயமடைந்ததாக சவுதி அரசு தெரிவித்துள்ளது. Source link

மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை உருவாக்க ஆய்வு| Dinamalar

டொரன்டோ : கொரோனா வைரசுக்கு எதிராக மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கொரோனாவுக்கு எதிராக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், தடுப்பூசி தொடர்பாக பல புதிய முயற்சிகளில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.கனடாவைச் சேர்ந்த மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான கட்டுரை, மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:கொரோனா … Read more

ரஷ்யாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 1,97,076 பேருக்கு தொற்று

மாஸ்கோ, உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.  இதுவரை உலக அளவில் 40.47 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 57.99 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  ரஷ்யாவில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் பரவலால், நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி … Read more