எதிரெதிர் திசையில் பயணித்த 2 பயணிகள் ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து… 95 பேர் காயம்

துனிசியாவின் தெற்கு பகுதியில் ஒரே வழித்தடத்தில் எதிரெதிர் திசையில் பயணித்த 2 பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 95 பேர் காயமடைந்தனர். தெற்கு துனிஸின் Jbel Jelloud பகுதியில், பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் பலர் காயங்களுடன் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் எலும்பு முறிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என அவசர சேவைப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். Source link

பாகிஸ்தானில் 18 வயது இந்துப் பெண் சுட்டுக்கொலை

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள சுக்குர் ரோகி என்ற இடத்தில் வசித்து வந்த இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் பூஜா. 18 வயதான இவர், தனது வீடு அருகில் உள்ள தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது, ஒரு கும்பல் பூஜாவை கடத்த முயற்சி செய்துள்ளது. கடும் எதிர்ப்பு தெரிவித்த பூஜா, கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அந்த கும்பல் கோபடைந்து பூஜைவை சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது. பாகிஸ்தான் அடிக்கடி … Read more

சீனாவில் டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா மூடல்: கொரோனா தொற்று அதிகரிப்பால் நடவடிக்கை

சீனாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அதிகரித்து வரும் கொரோனா பரவலால் ஷாங்காய் நகரில் செயல்பட்டு வரும் டிஸ்னிலாண்ட் பொழுதுபோக்கு பூங்கா தற்காலிகமாக மூடப்படுகிறது. சீனாவில் அதிக மக்கள்தொகை கொண்ட பெரிய நகரமான ஷாங்காய் நகரில் அமெரிக்காவைச் சேர்ந்த டிஸ்னிலாண்ட் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. அதிவேகமாகப் பரவிவரும் கொரோனா பரவல் காரணமாக சீனாவின் பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஷாங்காயில் உள்ள டிஸ்னிலேண்ட் பார்க் காலவரையின்றி மூடுவதாக டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது. Source link

அமெரிக்காவில் கார் ஓட்டும் முன்னாள் ஆப்கானிஸ்தான் நிதிமந்திரி: ஏன் இந்த அவல நிலை?

வாஷிங்டன் : ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அதை தொடர்ந்து, முந்தைய அரசின் மந்திரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் உயிர் பயத்தில் குடும்பத்தோடு நாட்டை விட்டு வெளியேறினர். அவர்களில் சிலர் தங்களின் வாழ்வாதரத்துக்காக சிறிய, சிறிய வேலைகளை பார்ப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அப்படி ஆப்கானிஸ்தானின் நிதிமந்திரியாக அதிகாரமிக்க பதவியில் இருந்த காலித் பயெண்டா என்பவர் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அமெரிக்காவில் கார் டிரைவராக வேலை பார்த்து வரும் … Read more

உக்ரைனில் 3.3 லட்சம் பேருக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்.!

உக்ரைன் எல்லையில் பாதுகாப்பு முகாம்கள் அமைத்து குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோரை தங்க வைத்துள்ளதாகவும், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு ரொட்டி, கோதுமை மாவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கியுள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டாபானே டுஜாரிக், குழந்தைகள் நிதியம் மற்றும் அகதிகளுக்கான முகமை என ஐ.நா.வின் இரு அமைப்புகள் ஒன்றிணைந்து உக்ரைனை விட்டு வெளியேறிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு புகலிடம் அளித்துள்ளதாக கூறினார். ஐ.நா. உணவு கழகம் மூலம்  உக்ரைனில் சிக்கியுள்ள … Read more

ரஷியா விவகாரத்தில் இந்தியா நடுங்குகிறது: ஜோ பைடன்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போரை நிறுத்துமாறு வலியுறுத்தியும் ரஷியா போரை நிறுத்தவில்லை. உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கீழே போடும் வரை போரை நிறுத்த மாட்டோம் என ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் எந்த பயனும் இல்லை. இதற்கிடையே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள், நேட்டோ நாடுகள் என பல்வேறு நாடுகளை கொண்ட … Read more

கறுப்பின பெண் நீதிபதியை நியமிக்க அமெரிக்க பார்லி.,யில் ஓட்டெடுப்பு| Dinamalar

வாஷிங்டன் : அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முதல் கறுப்பின பெண் நீதிபதியாக கேடன்ஜி பிரவுன் ஜாக்ஸனை நியமிப்பதற்கான ஓட்டெடுப்பு துவங்கியது. அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக கேடன்ஜி பிரவுன் ஜாக்ஸன், 51, என்ற கறுப்பினத்தை சேர்ந்த பெண்ணை நியமிக்க, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அமெரிக்க பார்லி.,யில் செனட் உறுப்பினர்களிடையே இதற்கான வாக்கெடுப்பு நேற்று துவங்கியது. அதிபர் பைடனின் இந்த முடிவை, ஜனநாயக கட்சி ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறது. நாட்டில் … Read more

உக்ரைன் மீது மனிதர்களை ஆவியாக்கும் குண்டுகளை வீசும் ரஷ்யா

மனிதர்களை ஆவியாக்கும் ராக்கெட் குண்டுகளை உக்ரைன் மீது ரஷ்யா தொடர்சியாக ஏவும் வீடியோ வெளியாகி உள்ளது. உக்ரைனின் துறைமுகப் பகுதியான மரியுபோல் நகரத்தை நோக்கி நொடிக்கு ஒரு முறை இந்த குண்டுகள் வீசப்பட்டன. அப்போது தரையில் இருந்த புற்களும் பற்றி எரிந்தன. ஆவியாக்கும் குண்டுகள் மற்ற குண்டுகளை விட ஆபத்தானவை என்று கூறும் விஞ்ஞானிகள், இந்தக் குண்டுகள் வெடிக்கும் போது, ஒரு பெரிய தீப்பந்தத்தை உருவாக்க சுற்றியுள்ள பகுதியில் ஆக்ஸிஜனை உறிஞ்சுகின்றன. இதனால் அந்தப் பகுதியில் இருக்கும் … Read more

ஊபர் கார் டிரைவராக மாறிய மாஜி ஆப்கன் நிதி அமைச்சர்| Dinamalar

வாஷிங்டன் : ஆப்கானிஸ்தான் முன்னாள் நிதி அமைச்சர் காலித் பயெண்டா ‘ஊபர்’ கார் டிரைவராக அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ‘ஊபர்’ கார் டிரைவராக இருப்பவர் காலித் பயெண்டா. இவர் தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் முன்னாள் நிதி அமைச்சர்.கடந்த ஆண்டு ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றுவதற்கு ஒரு வாரம் முன் காலித் பயெண்டாவுக்கும் அப்போதைய பிரதமர் அஷ்ரப் கனிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஆக. 10ல் காலித் பதவி விலகினார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் … Read more

போராட்டத்தில் ஈடுபட்ட உக்ரைன் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டிய ரஷ்யப் படைகள்

உக்ரைன் கெர்சன் நகரை விட்டு வெளியேறுமாறு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது ரஷ்யப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கெர்சன் நகர சாலையில் ரஷ்யப் படைகளின் ஆக்கிரமிப்பை கண்டித்து மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் திரண்ட மக்கள் மீது ரஷ்ய வீரர்கள் துப்பாக்கியில் சுட்டும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டி அடித்தனர். ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் நிலை குழைந்த மக்கள் அலறியடித்து ஓடினர். Source link