பெரு நாட்டில் சிறியரக விமானம் தரையில்மோதி விபத்து – 7 பேர் உயிரிழப்பு <!– பெரு நாட்டில் சிறியரக விமானம் தரையில்மோதி விபத்து – 7 பேர… –>

பெரு நாட்டில் பயணிகள் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் பிரபல தொல்பொருள் ஆய்வு  தலமான Nazca Lines பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 3 பேர் டச்சு நாட்டினர் என்றும், 2பேர் சிலி நாட்டினர் என்றும் 2பேர் பெரு நாட்டினர் என்றும் போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து போக்குவரத்து அமைச்சகம் கூறும் போது செஸ்னா 207 ரக விமானம் நாஸ்கா நகரில் உள்ள மரியா ரெய்ச் விமான … Read more

கிரிப்டோ கரன்சியை விளம்பரப்படுத்த 410 பவுண்ட் தங்கக்கட்டியை பூங்காவில் வைத்த நபர்

வாஷிங்டன்: தங்கம் விற்கிற விலையில் பெரும்பாலான மக்கள் சொந்தமாக சில கிராம்களில் தங்கத்தை வாங்குவதற்கே அரும்பாடுபட்டு வருகின்றனர்.   இந்நிலையில், பணக்காரர்களே வாயைப் பிளக்கும் அளவிற்கு அமெரிக்காவில் ஒரு அதிசய சம்பவம் நடந்துள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த நிக்லஸ் காஸ்டெல்லோ (43) என்ற கலைஞர் ஒரு தங்க கன சதுரத்தை வடிமமைத்துள்ளார். இவர் காஸ்டெல்லோ காயின் கிரிப்டோ கரன்சியை விளம்பரப்படுத்துவதற்காக இந்த தங்க கன சதுரத்தை உருவாக்கியுள்ளார். இந்த தங்கக்கட்டியை சுமார் 410 பவுண்டு எடையில் 24 கேரட் … Read more

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிறை| Dinamalar

சிங்கப்பூர்: சிங்கப்பூரில், 2020ல் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை மீறி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண், ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சாலை ஒன்றில் குடித்து, கும்மாளமிட்டுள்ளார். அவருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தும் ஒன்றரை ஆண்டுகளாக ஆறு முறை இதுபோல சட்டமீறலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து லட்சுமி, அவரது நண்பர் ரவீந்திரன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் தொடரப்பட்ட வழக்கில் லட்சுமிக்கு, 10 வாரங்களும், ரவீந்திரனுக்கு எட்டு வாரங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. … Read more

Longer live: இந்த நாடுகளில் மட்டும் மனிதர்கள் நூறாண்டு வாழும் ரகசியம் என்ன?

புதுடெல்லி: மரணம் என்றாலே அனைவருக்கும் அச்சம் இருக்கும் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்ற ஆசை இருப்பதும் என்பது அனைவருக்கும் தெரிந்த சிதம்பர ரகசியம் தான். இன்று வாழ்க்கை முறைக் கோளாறுகள், உணவு முறை மாற்றங்கள், கலப்படம், மாசுபாடு என பல நோய்களால் மக்களின் வாழ்நாள் குறைந்துக் கொண்டே வருகிறது. இளைஞர்களும் அகால மரணம் அல்லது கடுமையான நோய்களுக்கு பலியாகின்றனர்.இப்படி வாழுவதற்குக் அதிக பிரச்சனைகள் இருந்தாலும், உலகில் அதிகபட்ச … Read more

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் வெளியே வந்தால் கைது: பிலிப்பைன்ஸ் அதிபர்

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தால் கைது செய்யப்படுவார்கள் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் தெரிவித்துள்ளார். உலக அளவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பு 2021 டிசம்பர் 27-ம் தேதி முதல் 2022 ஜனவரி 2-ம் தேதி வரையிலான உலக அளவிலான கரோனா தொற்று குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த வாரத்தில் உலக அளவில் கரோனா பரவல் திடீரென 71 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், உயிரிழப்பு 10 … Read more

பொலிவியாவில் தொடர் கன மழையால் நிலச்சரிவு… ஏராளமான வீடுகள் சேதம் – 62,000 குடும்பங்கள் பாதிப்பு <!– பொலிவியாவில் தொடர் கன மழையால் நிலச்சரிவு… ஏராளமான வீடுக… –>

பொலிவியாவில் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் 62,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் லா பாஸில்,  கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால், ஏராளமான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவவில் புதைந்தும், மலைப்பகுதிகளில் இருந்து அடித்து வரப்பட்ட பாறைகள் விழுந்தும் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. Source link

நெதர்லாந்தில் எச்.ஐ.வி. வைரசில் புதிய மாறுபாடு கண்டுபிடிப்பு

ஆம்ஸ்டர்டாம்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. இந்த வைரஸ் உருமாற்றங்கள் அடைந்து தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் எச்.ஐ.வி. வைரசில் புதிய மாறுபாடு கண்டறியப்பட்டு இருக்கிறது. நெதர்லாந்து நாட்டில் எச்.ஐ.வி. வைரசின் புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது எச்.ஐ.வி. வைரசின் மிகவும் கொடிய மாறுபாடாகும் என்று தெரிவித்துள்ளனர். … Read more

அமெரிக்காவில் வள்ளுவர் தெரு உதயம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அமெரிக்காவில் ஒரு தெருவுக்கு உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்க வடக்கு வர்ஜீனியா பகுதியில் தமிழ்ப்பள்ளி நடத்தி வரும் வள்ளுவன் தமிழ் மையத்தின் முயற்சியால் இது நடந்துள்ளது.திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட நூலாக இருந்தாலும் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. திருக்குறள் குறித்து ஐரோப்பிய நாடுகளில் ஆராய்ச்சியும் நடந்துள்ளன. திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் உலகப் புகழ் உண்டு. தற்போது திருவள்ளுவரை … Read more

பிட்காயின் மதிப்பு 3 மாதங்களில் இல்லாத கடும் வீழ்ச்சி: 40 சதவீதம் சரிந்தது

நியூயார்க்: பிட்காயின் கடந்த 3 மாதங்களில் இல்லாத வகையில் பெரும் சரிவை சந்தித்துள்ளது. டிஜிட்டல் கரன்சி வர்த்தகம் முதலீட்டாளர்கள் குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. பிட்காயின் உட்பட கிரிப்டோ கரன்சிகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்றன. இந்தியாவிலும் இந்த ஏற்றம் காணப்படுகிறது. பல நாடுகளில் ஏராளமான முதலீட்டாளர்கள் தொடர்ந்து கிரிப்ட்டோகரன்சியில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்ட்டோகரன்சிகளின் மதிப்பு தொடர்ந்து அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. ஒட்டுமொத்த கிரிப்டோ முதலீடுகள் … Read more

அமெரிக்க கடற்கரை பரப்பில் ஓய்வு எடுத்த அரிய வகை ஆக்டோபஸ் <!– அமெரிக்க கடற்கரை பரப்பில் ஓய்வு எடுத்த அரிய வகை ஆக்டோபஸ் –>

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் கடற்கரை பரப்பில் அமைதியாக ஓய்வு எடுத்த அரிய வகை ஆக்டோபசின் வீடியோ வெளியாகி உள்ளது. Heather Leon என்பவர் தனது தாயுடன் Myrtle கடற்கரைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஆழமற்ற நீரில் ஆக்டோபஸ் ஒன்று ஓய்வு எடுப்பதைக் கண்டார். உடனடியாக அதனை வீடியோவில் பதிவு செய்த அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். பின்னர் அந்த ஆக்டோபஸ் தண்ணீரில் நீந்தியபடி அங்கிருந்து செல்வதையும் அவர் படம்பிடித்து வெளியிட்டுள்ளார்.  Source link