ஆஸ்திரேலியா: வாத்து குடும்பத்திற்காக வரிசையாக அணிவகுத்து நின்ற வாகனங்கள்; வைரலான வீடியோ

பெர்த் ஆஸ்திரேலியா நாட்டின் பெர்த் நகரில் குவிநானா சாலையில் வாகனங்கள் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும். வாகனங்கள் போட்டி போட்டு கொண்டு விரைவாக கடந்து செல்லும். இந்நிலையில், காலை வேளையில் வாத்து ஒன்று தன்னுடைய குஞ்சுகளை அழைத்து கொண்டு அந்த வழியே சென்றது. இதனால், வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்று விட்டன. வாத்து, அதனுடைய குஞ்சுகளுடன் மெல்ல நடந்து சென்றன. அவை சாலையை கடந்து செல்லும் வரை வாகனங்கள் அந்த பகுதியிலேயே காத்திருந்தன. இந்த சம்பவத்தின்போது, விரைவாக வந்த … Read more

ஆப்கன் தாக்குதலில் 58 பாக். ராணுவ வீரர்கள் பலி – பேச்சுவார்த்தைக்கு முட்டாகி அழைப்பு

காபூல்: சனிக்கிழமை இரவு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார் 58 ராணுவ வீரர்களும், 9 ஆப்கன் படையினரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது அண்மை காலத்தில் இரு தரப்புக்கும் இடையிலான மிக தீவிர மோதலாக அமைந்துள்ளது. சமீப மாதங்களில், எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அண்மையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. … Read more

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் அதிரடி தாக்குதல்

காபுல், பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துவரும் தலிபான்கள் இருநாட்டு எல்லையில் கிளை அமைப்பை தொடங்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. தெஹ்ரீக் இ தலிபான் என்ற அமைப்பு பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதாக குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், இந்த பயங்கரவாத அமைப்பை அழிப்பதாக கூறி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பாகிஸ்தான் விமானப்படை கடந்த சில நாட்களுக்குமுன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானை … Read more

எகிப்தில் காசா அமைதிக்கான உச்சி மாநாடு: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப், அல் சிசி அழைப்பு

கெய்ரோ: பாலஸ்தீனத்தின் காசா பகுதி அமைதிக்கான உச்சி மாநாடு நாளை (அக்.13) எகிப்து நாட்டில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அல் சிசி ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதல் மிக தீவிரமானது. அதற்கடுத்த இந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தை … Read more

‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ – நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து

வாஷிங்டன், உலகின் மிகவும் உயர்ந்த நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நோபல் பரிசு கனவு தகா்ந்தது. இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் லட்சக்கணக்கான மக்கள் உயிர்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி என பெருமிதம் அடைந்தார். அவர், “நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட மரியா கொரினா என்னிடம் தொலைபேசியில் அழைத்து பேசினார். … Read more

அமெரிக்கா: பள்ளிக்கூடத்தில் இளைஞர் நடத்திய துப்பாக்கி சூடு – 4 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் வடக்கு மகாணமாக மிசிசிப்பி உள்ளது. அங்குள்ள லேலேண்ட் கிராமத்தில் அரசு பள்ளிக்கூடத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் பள்ளி மைதானத்தில் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்தாட்ட போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் பள்ளி மைதானத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட ஏராளமானவர்கள் குவிந்து இருந்தனர். இந்த நிலையில் மைதானத்திற்குள் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர் தான் மறைந்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு சரமாரியாக சுட தொடங்கினான். கண்மூடித்தனமாக நடந்த … Read more

போர் நிறுத்தத்தை கண்காணிக்க காசாவில் அமெரிக்க வீரர்கள் முகாம்

காசா: கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் முதல் இஸ்​ரேல் ராணுவம், காசா​வின் ஹமாஸ் குழு​வினர் இடையே போர் நடை​பெற்று வந்​தது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் முயற்​சி​யால் இருதரப்​பினர் இடையே எகிப்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. கடந்த 9-ம் தேதி இரு தரப்பு இடையே போர் நிறுத்த ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இஸ்​ரேல் அமைச்​சரவை ஒப்​புதல் அளித்த பிறகு கடந்த 10-ம் தேதி காசா​வில் போர் நிறுத்​தம் அமலுக்கு வந்​தது. அமைதி ஒப்​பந்​தத்​தின்​படி ஹமாஸ் பிடி​யில் உள்ள இஸ்​ரேலிய … Read more

சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 100% வரி: ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: சீன பொருட்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் கூடுதலாக 100% வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ட்ரம்ப் பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கான வரியை கணிசமாக அதிகரித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் வரியை சற்று குறைத்தார். அந்த வகையில் சீன பொருட்களுக்கு இப்போது 30% வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில், அதிபர் ட்ரம்ப்கடந்த 10-ம் தேதி தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: ஸ்மார்ட்போன், மின்சார வாகனங்கள், ராணுவ தளவாடங்கள் … Read more

பிரான்ஸ் பிதமராக ஜெபஸ்டின் மீண்டும் நியமனம்

பாரிஸ், ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு பிரான்ஸ். இந்நாட்டின் ஜனாதிபதியாக இம்மானுவேல் மேக்ரான் செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையிலான அரசின் ஆட்சி காலம் 2027ம் ஆண்டு வரை உள்ளது. அதேவேளை, கடந்த ஆண்டு பிரான்ஸ் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தார். இதனை தொடர்ந்து நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இதனிடையே, அரசியல் குழப்பம் காரணமாக கடந்த ஓராண்டில் பிரதமராக நியமிக்கப்பட்ட 4 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மேக்ரான் … Read more

அமெரிக்கா: ராணுவ ஆயுத ஆலையில் திடீர் வெடிவிபத்து; 19 பேர் பலி என அச்சம்

நியூயார்க், அமெரிக்காவின் தெற்கே டென்னஸ்ஸி மாகாணத்தின் ராணுவ வெடிபொருள் ஆலையில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சத்தம் பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மக்களுக்கும் கேட்டுள்ளது. இதனால், வீடுகள் குலுங்கின. சிலர் வெடிவிபத்து ஏற்பட்ட காட்சிகளை அவர்களுடைய கேமராவில் படம் பிடித்தனர். இதில், 19-க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டனர். அவர்களை காணவில்லை. இந்த வெடிவிபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரம் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. ஆனால், 19 பேரும் உயிரிழந்து இருக்க … Read more