இஸ்ரேல் – ஈரான் போர்: ட்ரம்ப்பின் ‘கணிக்க முடியாத போக்கு’ அமெரிக்காவுக்கு சாதகமா, பாதகமா?

“நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது; ஆனா, வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவேன்” என்பன போன்ற பஞ்ச் வசனங்களை சினிமாவில் வேண்டுமானால் ரசிக்கலாம். ஆனால், “அதை நான் செய்யலாம். செய்யாமலும் போகலாம். நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது” என்று ஈரான் பிரச்சினையில் அமெரிக்க அதிபர் கூறியிருப்பது ரசிக்கக் கூடிய வசனமும் அல்ல, ஏற்கக் கூடிய வாதமும் அல்ல. ஈரான் பிரச்சினையில் ட்ரம்ப்பின் கணிக்க முடியாத இந்தப் போக்கு அமெரிக்காவுக்கு சாதகமா, பாதகமா என்பதைப் … Read more

‘எனது 17 பில்லியன் டாலர் சொத்தை என் 106 பிள்ளைகளுக்கு வழங்குகிறேன்’ – டெலிகிராம் சிஇஓ அறிவிப்பு

துபாய்: தனது 17 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளை தன் 106 பிள்ளைகளுக்கு சரிசமமாக பிரித்து வழங்கிட முடிவு செய்துள்ளதாக டெலிகிராம் மெசஞ்சர் சிஇஓ பவெல் துரோவ் கூறியுள்ளார். 40 வயதான அவர், பிரெஞ்சு மொழி செய்தி இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் இதை பகிர்ந்துள்ளார். சட்டவிரோத குற்றச் செயல்களுக்கு டெலிகிராம் நிறுவனம் துணை போன குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் பிரான்ஸ் நாட்டில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற்ற … Read more

இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாத வரை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை: ஈரான் திட்டவட்டம்

தெஹ்ரான்: தங்கள் நாட்டின் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தொடரும் நிலையில், அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று அந்நாட்டின் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “அமெரிக்கர்கள் பேச்சுவார்த்தைகளுக்கு தீவிரமாக அழைப்பு விடுக்கும் செய்திகளை பலமுறை அனுப்பி வருகின்றனர். ஆனால், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் நிற்காத வரை, ராஜதந்திரம் மற்றும் உரையாடலுக்கு இடமில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். இஸ்ரேலுக்கு எதிரான நமது … Read more

ஈரான் இஸ்ரேல் மோதல்: ரஷ்யா, சீனாவை பார்த்து டிரம்ப் பயப்படுகிறாரா? 2 வாரம் அவகாசம் எதற்கு?

Israel-Iran War Latest News: டொனால்ட் டிரம்ப் “இரண்டு வாரங்கள் காத்திருப்பார்” அதன் பிறகு தாக்கலாமா? வேண்டாமா? என்பதை அவர் முடிவு செய்வார் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

“போர் நிறுத்தத்தை நாங்கள்தான் கோரினோம்” – பாக். துணைப் பிரதமர் ஒப்புதல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இரண்டு விமானப் படைத் தளங்களை இந்தியா தாக்கியதை அடுத்தே போர் நிறுத்தத்தை கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் ஒப்புக்கொண்டுள்ளார். ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கிய இந்தியா, மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளின் இரவில் பாகிஸ்தானின் 9 … Read more

‘ஈரானுக்கு நாங்கள் முழு தார்மிக ஆதரவை வழங்குகிறோம்; ஆனால்…’ – பாகிஸ்தான் சொல்வது என்ன? 

இஸ்லாமாபாத்: ஈரானுக்கு நாங்கள் முழு தார்மிக ஆதரவை வழங்குகிறோம். ஆனால் இதுவரை எங்களிடம் ஈரான் எந்த வகையான ராணுவ உதவியையும் கேட்கவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஷஃப்கத் அலி கான் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஈரான் குறித்த பாகிஸ்தானின் நிலைப்பாடு தெளிவானது மற்றும் வெளிப்படையானது. ஈரானுக்கு நாங்கள் முழு தார்மிக ஆதரவை வழங்குகிறோம்; ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். ஈரான் எல்லையில் உள்ள அகதிகளுக்கு பாகிஸ்தானில் … Read more

ஈரான் – இஸ்ரேல் போர் தகவல் பரிமாற்றம்: புதின், ஜின்பிங் முடிவு 

மாஸ்கோ: ஈரான் – இஸ்ரேல் போர் குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஈரான் – இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில் புதின், ஜின்பிங் ஆகிய இரு தலைவர்களும் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினர். இந்தப் பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இது குறித்து ரஷ்ய வெளியுறவு கொள்கை உதவியாளர் யூரி உஷாகாவ் நேற்று மாஸ்கோவில் கூறுகையில், “ஈரான் … Read more

வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கும் பணி.. மீண்டும் தொடங்கிய அமெரிக்கா

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு, வெளிநாட்டினருக்கு எதிரான கொள்கைகளை பின்பற்றி வருகிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு கட்டுப்பாடு விதித்தார். மேலும், வெளிநாட்டு மாணவர்களுக்கு மாணவர் விசா வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த மாதம் அமெரிக்க அரசு அறிவித்தது. விசா நேர்காணல்கள் நிறுத்தப்பட்டன. மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் சமூக வலைத்தள கணக்குகளை ஆய்வு செய்து, அவர்களை பற்றிய பின்னணியை அறிய கால அவகாசம் தேவைப்படுவதால், இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தது. இதனால், அமெரிக்காவில் படிக்க திட்டமிட்டு … Read more

9 கணவன்கள்… 99 வயது வரை வாழ்ந்த கவர்ச்சி நடிகை… பல கோடிக்கு அதிபதி – யார் இவர்?

Zsa Zsa Gabor: 9 திருமணங்களை செய்து, 99 வயது வரை வாழ்ந்த பல கோடிகளுக்கு அதிபதியான பிரபல அமெரிக்க கவர்ச்சி நடிகை ஸ்சா ஸ்சா கபோர் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

ஈரான் பதிலடி தாக்குதலில் இஸ்ரேல் அறிவியல் ஆராய்ச்சி மையம் கடும் சேதம்

டெல் அவிவ்: ​​ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் வெடித்துள்ள நிலையில், இஸ்ரேலின் ரெஹோவொட்டில் உள்ள வெய்ஸ்மென் உயிர் அறிவியல் மற்றும் இயற்பியலுக்கான ஆராய்ச்சி நிறுவனத்தை ஈரானிய ஏவுகணைகள் கடுமையாக தாக்கியது. இஸ்ரேலின் ‘அறிவியலின் மணிமகுடம் (crown jewel of science)’ என அழைக்கப்படும் மிகமுக்கியமான வெய்ஸ்மென் ஆராய்ச்சி மையத்தை ஈரான் ஏவுகணைகள் கடுமையாக தாக்கியது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெய்ஸ்மேன் அறிவியல் நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும், அது ஆராய்ச்சி மையத்தில் உள்ள … Read more