தென் கொரியா இரட்டை வேடம் போடுகிறது ; வடகொரியா விமர்சனம்

பியாங்காங், வடகொரியா அதிபராக யூன்சுக் இயோல் இருந்தபோது அவசரநிலை பிரகடனப்படுத்தி உடனடியாக வாபஸ் பெற்றார். இதனால் அவர் மீது விமர்சனம் எழுந்தநிலையில் பதவி விலக்கப்பட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். தென்கொரியாவின் புதிய அதிபராக லீ ஜே மூங் என்பவர் பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் வடகொரியா உடனான பகையை நிறுத்துவதற்காக பேச்சுவார்த்தை தொடங்குவேன் என அறிவித்தார். தற்போது அமெரிக்கா உடனான கூட்டுப்போர் பயிற்சியில் தென்கொரியா தீவிரமாக ஈடுபடுகிறது. இந்த பயிற்சி போர் பதற்றத்தை தூண்டும் வகையில் உள்ளதாக வடகொரியா … Read more

பாகிஸ்தானில் கனமழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை 750 ஆக உயர்வு

லாகூர், பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் கைபர் பக்துவா, சிந்து, பஞ்சாப் ஆகிய மாகாணங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும், பல பகுதிகளில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, கனமழை, வெள்ளத்தில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் … Read more

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலையில் 5% தள்ளுபடி: ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி அறிவிப்பு

மாஸ்கோ: அமெரிக்காவிடமிருந்து பல்வேறு கட்ட அழுத்தம் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5 சதவீத தள்ளுபடியில் தொடரும் என்று இந்தியாவுக்கான ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதி அளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனால், ரஷ்யாவிலிருந்து தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிப்புடன், மொத்தம் 50 … Read more

ஆப்கனிஸ்தானில் பேருந்து விபத்து: 19 குழந்தைகள் உட்பட 79 பேர் உயிரிழப்பு

காபுல்: ஆப்கனிஸ்தானின் ஹிராட் மாகாணத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 19 குழந்தைகள் உட்பட 79 பேர் உயிரிழந்தனர். ஈரானில் இருந்து ஆப்கனிஸ்தானுக்கு திரும்பியவர்கள் பயணித்த பேருந்து ஒன்று அந்நாட்டின் வடமேற்கில் உள்ள ஹிராட் மாகாணத்தில் நேற்றிரவு (உள்ளூர் நேரப்படி இரவு 8.30) விபத்துக்குள்ளானது. லாரி மற்றம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் பேருந்து தீ பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் 19 குழந்தைகள் உட்பட 79 ஆப்கனியர்கள் உயிரிழந்துள்ளனர். ஆப்கன் உள்துறை செய்தித் தொடர்பாளர் … Read more

ஹோட்டிலில் சாப்பிட்டு கொண்டிருந்த தம்பதி..திடீரென ஏறிய கார்! வைரலாகும் வீடியோ..

Car Crashed Houston Viral Video : ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, கார் நுழைந்ததில், இரண்டு உயிர்கள் பரிபோயிருக்கும். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜப்பானில் 1,600 வகையான பொருட்கள் விற்பனைக்கு தடை

டோக்கியோ, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வணிக வளாகத்தில் காலாவதியான உணவுப்பொருள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கியோட்டோ, ஓசாகா உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் தீவிர சோதனை நடைபெற்றது. அப்போது 20-க்கும் மேற்பட்ட கடைகளில் காலாவதியான பொருட்கள் மீது போலியான ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்தது உறுதியானது. இதனையடுத்து நாடு முழுவதும் சுமார் 1,600 உணவுப்பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 1 More … Read more

இந்தியாவுக்கு அரிய வகை கனிமங்கள் வழங்க தயார்; சீனா அறிவிப்பு

சீன வெளியுறவு மந்திரி வாங் யி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை டெல்லி வந்தார். அவரை மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றனர். பின்னர் சீன வெளியுறவு மந்திரி வாங் யி மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் சச்சரவுகளாக மாறக்கூடாது. அனைத்து வடிவங்களிலும் வரும் தீவிரவாதத்தை எதிர்த்து … Read more

கூகுல் மீது ரூ.314 கோடிக்கு மேல் அபராதம்! ஆஸ்திரேலியா சுந்தர் பிச்சைக்கு ஆப்பு வைத்தது!

Rs.314 Crore Penalty to Google: டெக் ஜெயன்ட் கூகுளுக்கு அதிர்ச்சி தண்டனை விதித்த ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவில் போட்டியை தடுக்க முயன்ற குற்றச்சாட்டில் ரூ.314 கோடி அபராதம்!

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவே இந்தியா மீது ட்ரம்ப் வரி விதிப்பு: அமெரிக்கா விளக்கம்

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்வதைத் தடுக்கவே இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூடுதல் வரிகளை விதித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அதிபர் ட்ரம்ப் மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுத்துள்ளார். இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் உள்ளிட்டபிற நடவடிக்கைகளையும் அவர் எடுத்துள்ளார். இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் தனக்குள் உறுதிமொழி கொண்டார். ட்ரம்ப் … Read more

கனமழை: திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 13 பேர் பலி

பீஜிங், சீனாவின் வடக்கு பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஓர்டோஸ், பாவோடா உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இந்த கனமழையால் ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதன்படி மஞ்சள் நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 10-க்கும் மேற்பட்டோர் அடித்துச்செல்லப்பட்டனர். அதேபோல் ஓர்டோசில் உள்ள ஆற்றிலும் 3 பேரை வெள்ளம் அடித்துச் சென்றது. மீட்பு பணியில் அவர்கள் 13 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் பலர் வெள்ளத்தில் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் … Read more