இந்தோனேசியாவில் மதப்பள்ளி இடிந்து விபத்து – பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

ஜகார்தா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணம் சிடொர்ஜொ நகரில் அல் ஹொசின் இஸ்லாமிய மதப்பள்ளி உள்ளது. இந்த மதப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதப்பாடம் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த மதப்பள்ளியில் கடந்த திங்கட்கிழமை மதியம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மத வழிபாடு (தொழுகை) செய்துகொண்டிருந்தனர். அப்போது, மதப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் மத வழிபாடு செய்துகொண்டிருந்த மாணவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த … Read more

காங்கோ முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை விதிப்பு

கின்ஷாசா, மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் பல்வேறு கிளர்ச்சி குழுக்களுக்கள் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. கிளர்ச்சி குழுக்கள், பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்புப்படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனிடையே, காங்கோவில் எம்23 என்ற கிளர்ச்சிக்குழு செயல்பட்டு வருகிறது. இந்த கிளர்ச்சிக்குழுவுக்கு அண்டை நாடான ருவாண்டா ஆதரவு அளித்து வருகிறது. அதேவேளை, காங்கோவில் 2001 முதல் … Read more

பிரதமர் மோடி புத்திசாலியான தலைவர்: ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு

மாஸ்கோ: பிரதமர் நரேந்​திர மோடி சமச்​சீ​ரான மனநிலை கொண்ட புத்​தி​சாலி​யான தலை​வர் என்று ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு தெரி​வித்​தார். ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​வதற்கு எதி​ராக இந்​தி​யப் பொருட்​கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்​துள்​ளார். இதனால் இந்​தியா – அமெரிக்கா இடையி​லான உறவில் விரிசல் ஏற்​பட்​டுள்​ளது. ஐ.நா. பொதுச்​சபை கூட்​டத்​தில் அண்​மை​யில் பேசிய ட்ரம்ப், “ரஷ்​யா​விடம் இருந்து இந்​தி​யா​வும் சீனா​வும் தொடர்ந்து கச்சா எண்​ணெய் … Read more

‘ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி’ – ஹமாஸுக்கு ட்ரம்ப் கெடு

வாஷிங்டன்: இஸ்ரேல் உடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள ஹமாஸ் தீவிரவாத படைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரைதான் கெடு என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று இதை தெரிவித்த ட்ரம்ப், இதுவே ஹமாஸுக்கு கடைசி வாய்ப்பு. அமைதி உடன்படிக்கை திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்: கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய … Read more

ஆட்டம் காண்கிறதா அமெரிக்கப் பொருளாதாரம்? – பணி முடக்கமும், தாக்கமும் – ஒரு தெளிவுப் பார்வை

அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் யாவும் அதற்கேற்ற விளைவுகளை உலகம் முழுவதும் கடத்துவது காலங்காலமாகவே நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதனால்தான், அமெரிக்கா என்றால் ‘பொருளாதார சூப்பர் பவர்’ என்ற அந்தஸ்து இருக்கிறது. இந்தச் சூழலில்தான் அமெரிக்காவில் ‘எகனாமிக் ஷட்டவுன்’ என்ற செய்தி பரவலாக பெரும் பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்கா ஷட்டவுன் / பணி முடக்கம் என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? இந்த ஷட்டவுன் என்ன மாதிரியான தாக்கத்தை அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும்? உலக நாடுகளுக்கு இதனால் … Read more

கடவுளாக மாறிய 2 வயது குழந்தை! அதுவும் இரண்டு மதத்தினராலும் வழிபடப்படுபவர்..

2 Year Old Girl Becomes Living Goddess : நேபாளின் காத்மாண்டுவில், இரண்டு வயது குழந்தை வாழும் கடவுளாக மாறியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.

போராட்டத்தை ஒடுக்க துப்பாக்கிச் சூடு: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 12 பேர் உயிரிழப்பு

முசாபராபாத்: பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​தி​ மக்கள் 38 முக்​கிய கோரிக்​கைகளை வலி​யுறுத்தி போராட்​டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கை குழு (ஏஏசி) தலைமை தாங்​கியது. போராட்டத்தின் 3-வது நாளான நேற்று பேரணி நடத்த திட்டமிட்டனர். இதையடுத்து, முசாபராபாத், தத்யா,ரவாலாகோட், நீலம் பள்ளத்தாக்கு மற்றும் கோட்லி பகுதிகளில் ராணுவம் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டனர். பேரணியைத் தடுக்க போலீஸார் ஏற்படுத்திய தடைகளை தாண்டி மக்கள் பேரணி சென்றனர். அப்போது அவர்கள், ‘‘காஷ்மீர் எங்களுடையது, … Read more

ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முத்தாகி அடுத்த வாரம் இந்தியா வருகிறார்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தலிபான் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் ஆமிர் கான் முத்தாகி அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை அதிகாரபூர்வமாக கைப்பற்றியது. அதன்பின்னர் தலிபான் அரசின் அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும். தலிபான் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் ஆமிர் கான் முத்தாகி அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார் என்று வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் … Read more

அணில் என நினைத்து… 17 வயது மாணவன் சுட்டுக்கொலை – வேட்டையால் நடந்த விபரீதம்

Bizarre News: அணில் என நினைத்து 17 வயது மாணவனை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கி உள்ளது.

அமெரிக்க அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது: ரஷ்ய அதிபர் புதின் உறுதி

சோச்சி: அயலக அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரியை டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் விதித்துள்ள சூழலில், அவர் இதனை தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள சோச்சி நகரில் சர்வதேச அளவிலான பாதுகாப்பு தொடர்பான நிகழ்வு நடந்தது. இந்தியா உள்ளிட்ட 140 நாடுகள் பங்கேற்ற இந்த நிகழ்வில் புதின் பேசியது: “ரஷ்யாவின் வர்த்தக ரீதியான கூட்டாளிகள் மீது அதிக வரிகள் … Read more