புதின்-டிரம்ப் இடையேயான வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு நிறைவு

Live Updates 2025-08-15 17:57:40 16 Aug 2025 4:51 AM IST டிரம்ப் மற்றும் புதின் இடையேயான போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை முடிந்தது. இதனை தொடர்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது புதின் கூறும்போது, எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம் என்று கூறினார். டிரம்ப் அதிபராக இருந்திருந்தால், போர் தொடங்கியிருக்காது என கூறியிருந்தார். அது உண்மைதான். டிரம்பிற்கு … Read more

‘டிரம்ப்-புதின் சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக அமையும்’ – ரஷியா நம்பிக்கை

மாஸ்கோ, அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற பின்னர், 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் டொனால்டு டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். இதற்காக புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பலமுறை பேசினார். இந்நிலையில், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் எல்மென்டார்ப்-ரிச்சர்ட்சன் கூட்டு ராணுவ படை தளத்தில் இன்று(15-ந்தேதி) அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் நேரில் சந்தித்து பேசுகின்றனர். இந்த … Read more

பாலியல் குற்றங்கள்… ஹமாஸ் அமைப்பை கருப்பு பட்டியலில் சேர்த்த ஐ.நா. அமைப்பு

டெல் அவிவ், இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. அப்போது, பலரை துப்பாக்கியால் சுட்டும், தாக்கியும் படுகொலை செய்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் … Read more

அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு: ஜோபைடன் மகனிடம் ரூ.8,700 கோடி நஷ்டஈடு கேட்கும் டிரம்ப் மனைவி

வாஷிங்டன், அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிதியாளர் ஜெப்ரி எப்ஸ்டீன் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அவர் மீதான வழக்குகள் நிலுவையில் இருந்தபோது சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே அவர் மீதான விசாரணை ஆவணங்களில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட பிரபலங்கள் பெயர்கள் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் டிரம்புக்கு அவரது மனைவி மெலனியாவை எப்ஸ்டீன்தான் அறிமுகப்படுத்தினார் என்றும் அப்படித்தான் டிரம்பும், மெலனியாவும் சந்தித்தனர் என்று முன்னாள் ஜனாதிபதி ஜோபைடனின் மகன் ஹண்டர் பைடன் … Read more

உக்ரைன் போரை நிறுத்தும் டிரம்பின் உண்மையான முயற்சிக்கு பாராட்டு: புதின்

லண்டன், அமெரிக்க ஜனாதிபதியாக நடப்பு ஆண்டு ஜனவரியில் டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர், 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிற உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளிடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பல முறை பேசினார். இந்நிலையில், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் எல்மென்டார்ப்-ரிச்சர்ட்சன் கூட்டு ராணுவ படை தளத்தில் நாளை (15-ந்தேதி) அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷிய … Read more

உக்ரைன் போரை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: புதினுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: உக்​ரைனுக்கு எதி​ரான போரை ரஷ்யா நிறுத்​தா​விட்​டால் மோச​மான விளைவு​களை சந்​திக்க நேரிடும் என்று அமெரிக்கஅதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி மாதம் முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இப்​போதைய நிலை​யில் உக்​ரைனின் 22 சதவீத பகு​தி​களை ரஷ்யா கைப்​பற்றி உள்​ளது. கடந்த ஜனவரி​யில் அமெரிக்க அதிப​ராக பதவி​யேற்ற டொனால்டு ட்ரம்ப், இரு நாடு​கள் இடையி​லான போரை நிறுத்த தீவிர முயற்சி செய்து வரு​கிறார். இதுதொடர்​பாக கடந்த … Read more

இங்கிலாந்து பிரதமருடன் உக்ரைன் அதிபர் சந்திப்பு

லண்டன், ரஷியா – உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்பு அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள ஒரு ராணுவ தளத்தில் நடக்கிறது. இந்த போர் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரின் அலுவலகத்துக்கு நேரில் சென்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி … Read more

‘இறந்துபோன செல்லப்பிராணிகளிடம் பேச வேண்டுமா..?’ சீனாவில் நூதன மோசடி

பீஜிங், வீடுகளில் அன்பாக வளர்க்கப்படும் நாய், பூனை, பறவைகள், மீன்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகள் பெரும்பாலும் குடும்பத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிடுகின்றன. அவ்வாறு வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் திடீரென உயிரிழக்கும்போது, அதன் உரிமையாளர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகிவிடுகின்றனர். அவ்வாறு துயரத்தில் வாடும் உரிமையாளர்களை குறிவைத்து பணம் பறிக்கும் கும்பல் ஒன்று சீனாவில் இயங்கி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக சீன ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் இதற்காக பல்வேறு குழுக்களை நடத்தி வருவதாக … Read more

அமெரிக்காவின் பழைய AI சிப்ஸ் வேண்டாம் என்று கூறிய சீனா! என்ன காரணம்?

China Says No to america ai chips: சீனா, அமெரிக்காவின் பழைய AI சிப்ஸ்களுக்கு ‘NO’ சொன்னது! இதற்கு பின்னால் பெரிய அரசியல், தொழில்நுட்ப காரணங்கள் உள்ளன.

இந்தியாவின் சுதந்திர நாளைச் சூழ்ந்துள்ள உலக அரசியல் சவால்கள்! என்ன நடக்கப் போகிறது?

India’s Independence Day Challenges: இந்த ஆண்டு ஆகஸ்ட் 15, இந்திய சுதந்திர தினம் மட்டுமல்ல — உலக அரசியலில் பல அதிரடி சம்பவங்கள் மையமாகும் நாள். உள்ளக அரசியலிருந்து சர்வதேச அணு அச்சுறுத்தல்கள்வரை, இந்தியா பலவிதமான சவால்களைச் சந்திக்கிறது.