போர் முரசு கொட்டும் கிம் ஜாங் உன்! ராணுவத்தை போருக்கு தயாராக உத்தரவு!

North Korea And War Preparation : அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான வருடாந்திர கூட்டு இராணுவப் பயிற்சிகள் தொடங்கிய நிலையில், வட கொரிய ராணுவம் போருக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என கிம் ஜாங் உன் அறிவுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

உக்ரைனுக்கு எதிராக போரிட கட்டாயப்படுத்துகின்றனர்: ரஷ்ய ராணுவத்திடம் இருந்து மீட்குமாறு 7 இந்தியர்கள் கதறல்

புதுடெல்லி: உக்ரைன், ரஷ்யா இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகபோர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுற்றுலா சென்று உக்ரைனில் சிக்கியுள்ள 7 இந்தியர்கள் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் இந்தியர்கள் கூறியிருப்பதாவது: கடந்தஆண்டு டிசம்பர் 27-ம் தேதி புத்தாண்டை கொண்டாட ரஷ்யாவுக்குசுற்றுலா வந்தோம். பின்னர் ஒருஏஜெண்ட் மூலம் பெலாரஸ் சென்றோம். ஆனால், விசாவுடன்தான் செல்ல வேண்டுமென்று தெரியாது. எங்களை நெடுஞ்சாலையில் இறக்கிவிட்டு அந்த ஏஜெண்ட் ஓடிவிட்டார். போலீஸார் எங்களைப் பிடித்து ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைத்து … Read more

Life Insurance in Dubai for Indian Workers | இந்திய தொழிலாளர்களுக்கு துபாயில் ஆயுள் காப்பீடு

துபாய்: யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரபு எமிரேட்சில் டிரைவர், மிஷின் ஆப்பரேட்டர், கட்டுமான பணிகள் போன்றவற்றில் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கு, புதிய ஆயுள் காப்பீடு திட்டம் கிடைக்க வகை செய்துள்ளதாக துபாயில் உள்ள இந்திய துாதரகம் கூறியுள்ளது. இயற்கை மரணங்கள் மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், 35 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் 65 சதவீதம் பேர் டிரைவர் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்கள். இவர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள், மருத்துவ காப்பீடு மற்றும் … Read more

அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு… ரஷிய ராணுவத்தில் வேலையில் சேர்ந்த இந்தியர் பலி

மாஸ்கோ, ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து, நீடித்து வருகிறது. இந்த நிலையில், ரஷிய ராணுவத்தில் இந்தியர்கள் பணியாற்றுவதும், முறையான பயிற்சி இல்லாமல் பலர் சிக்கி தவித்து வருவதும் தெரிய வந்துள்ளது. இதில், முகமது அப்சான் என்ற ஐதராபாத் நகரை சேர்ந்த இளைஞரும் ஒருவர். வேலைக்காக சென்ற அவர், உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டு உயிரிழந்து உள்ளார். அவருடைய மறைவை இந்திய தூதரகம் இன்று உறுதி செய்துள்ளது. அவருடைய குடும்பத்தினர் மற்றும் … Read more

பெரு: இளம்பெண்ணை பணிக்கு அமர்த்தியதில் ஊழல்; பிரதமர் ராஜினாமா

லிமா, பெரு நாட்டின் பிரதமர் பதவியை வகித்து வந்த ஆல்பர்டோ ஒடரோலா மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இளம்பெண் ஒருவரை சட்டவிரோத வகையில், பொது துறை சார்ந்த பணியில் அமர்த்திய குற்றச்சாட்டை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக குரலெழுப்பின. இதுபற்றிய ஆடியோ ஒன்றும் வெளிவந்தது. இதனை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து விலகும் முடிவை ஆல்பர்டோ அறிவித்து உள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அதிபர் டினா பொலுவார்தேவுடன் பேசிய பின்னரே, பிரதமர் பதவியில் இருந்து விலகும் முடிவை … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்; பின்வாங்கும் நிக்கி ஹாலே – குடியரசு கட்சி வேட்பாளராகும் வாய்ப்பை பெறுவாரா டிரம்ப்?

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த வருட இறுதியில் நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட இருக்கிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கப்போவது யார் என்பதை முடிவு செய்வதற்காக அக்கட்சி சார்பில் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அதிக வாக்குகளை பெரும் நபர் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார். இதில் டொனால்ட் டிரம்ப், நிக்கி … Read more

நேபாளம்; ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் 7 பேர் பலி

காத்மண்டு, நேபாள நாட்டில் பஸ் ஒன்று, தலைநகர் காத்மண்டுவை நோக்கி இன்று காலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 48 பேர் பயணம் செய்தனர். அப்போது, தடிங் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில், பஸ்சானது திரிசூலி ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனால், பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினார்கள். அவர்களை காப்பாற்ற அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடினர். இந்த நிலையில், ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் பயணிகள் பலரும் … Read more

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலே விலகல்

வாஷிங்டன்: குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலே விலகி உள்ளார். இதன் மூலம் அக்கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக செயல்பட்டு வருகிறார். இவரது பதவிக்காலம் நவம்பர் வாக்கில் நிறைவடைய உள்ளது. இந்த சூழலில் அந்த நாட்டின் பிரதான கட்சியாக உள்ள குடியரசுக் … Read more

Taiwanese minister regrets racist comments against Indians | இந்தியர்கள் மீது இனவெறி கருத்து தைவான் அமைச்சர் வருத்தம்

பீஜிங், இந்திய தொழிலாளர்கள் குறித்து இனவெறி மற்றும் பாகுபாட்டை துாண்டும் வகையில் தெரிவித்த தன் கருத்துக்கு, தைவான் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார். கிழக்காசிய நாடான தைவானில், பல்வேறு துறைகளில் தொழிலாளர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதைப் போக்கும் வகையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் பணியாற்ற தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது. விவசாயம் இதுதொடர்பாக அந்நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சூ மிங்சுன் சமீபத்தில் அளித்த பேட்டியில், “தைவான் தொழிலாளர் துறை, … Read more

முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டா: ரூ.25 ஆயிரம் கோடியை இழந்த மார்க் ஜுக்கர்பர்க்

வாஷிங்டன், 2004ல் அமெரிக்காவை மையமாக கொண்டு மார்க் ஜுக்கர்பர்க் என்பவர் தனது நண்பர்களுடன் தொடங்கிய நிறுவனம், பேஸ்புக். உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்கு கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளமாக பேஸ்புக் முன்னணியில் உள்ளது. தற்போது மெட்டா எனும் நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் ஆகியவை இயங்கி வருகின்றன. இவற்றை மார்க் ஜுக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார். நேற்று உலகெங்கும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் … Read more