Blasphemy video released: Pak, Gil youth sentenced to death | மதத்தை இழிவுப்படுத்தி வீடியோ வெளியீடு: பாக்., கில் இளைஞருக்கு மரண தண்டனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டதற்காக பாகிஸ்தானில் 22 வயது இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இஸ்லாமிய மதம் குறித்து அவதூறு பரப்பினால் மரண தண்டனை விதிக்கும் வகையிலான சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார். அதை … Read more

சீனாவுடன் போட்டியை விரும்புகிறோம்; மோதலை அல்ல: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விளக்கம்

வாஷிங்டன், அமெரிக்காவுககும், சீனாவுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளில் மோதல் இருந்து வருகிறது. குறிப்பாக தைவான் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டை சீனா விரும்பவில்லை. அத்துடன் அந்நாட்டுடன் வர்த்தக ரீதியிலும் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பைடன் நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: சீனாவுடன் அமெரிக்கா போட்டியை விரும்புகிறது,மோதலை அல்ல. சீனாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற அமெரிக்கா வலுவான நிலையில் உள்ளது.”சீனாவின் நியாயமற்ற பொருளாதார நடைமுறைக்கு எதிராக நாங்கள் நிற்கிறோம், தைவான் பகுதியில் அமைதி மற்றும் … Read more

காசாவில் குழந்தைகளின் உயிரை பறிக்கத் தொடங்கிய பஞ்சம்

ரபா: ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக காசாவில் உக்கிரமான தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், பெரும்பாலான பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. வடக்கில் இருந்து தெற்கு நோக்கி படிப்படியாக முன்னேறிய இஸ்ரேல் படைகள் தற்போது கடைசி நகரமான ரபாவை சுற்றி வளைத்துள்ளனர். போர் தொடங்கியபோது உடனடி நடவடிக்கையாக காசாவுக்கான உணவு, தண்ணீர், மருந்து மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் செல்லும் பாதையை மூடியது. தெற்கு பகுதியில் உள்ள இரண்டு பாதைகள் வழியாக மட்டும் உதவிப் பொருட்களை ஏற்றி செல்லும் … Read more

மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர் எண்ணிக்கை 33% குறைந்தது

மாலே: மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் 33 சதவீதம் குறைந்துள்ளது. மாலத்தீவு தலைநகர் மாலேவில் இருந்து ‘அதாது’ என்ற ஆன்லைன் செய்தி சேனல் செயல்படுகிறது. இந்த சேனல் வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த 2023-ம் ஆண்டில் மார்ச் மாத நிலவரப்படி 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு வருகை தந்தனர். 2024, மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 27,224 ஆக, அதாவது 33 சதவீதம் குறைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியர்களை … Read more

அமெரிக்க மக்களின் உண்மையான எதிரி 'பேஸ்புக்' – டிரம்ப் விமர்சனம்

வாஷிங்டன், அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் அமெரிக்கர்களின் தரவுகளை வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் சட்டம் மற்றும் வெளிநாட்டு எதிரிகளால் கட்டுப்படுத்தப்படும் செயலிகளுக்கான தடைச் சட்டம் ஆகியவற்றின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்கு 50-0 என்ற கணக்கில் உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து அமெரிக்க அரசின் அனைத்து சாதனங்களிலும் சீனாவின் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை விதித்து அமெரிக்க அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவின் ‘டிக்டாக்’ செயலியுடன் ‘பேஸ்புக்’ நிறுவனத்தை ஒப்பிட்டு … Read more

5வது திருமணத்திற்கு தயாராகும் 92 வயது தொழிலதிபர்; 67 வயது காதலியை மணக்கிறார்

வாஷிங்டன், தீ வால் ஸ்டிரிட் ஜர்னல், பாக்ஸ் நியூஸ் போன்ற அமெரிக்க செய்தி ஊடகங்களின் உரிமையாளராக இருந்தவர் ரூபர்ட் முர்டோக் (வயது 92). முர்டோக் தனது உலகளாவிய ஊடக கட்டுப்பாட்டை கடந்த நவம்பரில் தனது மகன் லாச்லனிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், இவர் தனது நீண்ட நாள் காதலியான எலெனா ஜுகோவாவை (வயது 67) திருமணம் செய்து கொள்வதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். எலெனா ஜுகோவா ஒரு ஓய்வுபெற்ற மூலக்கூறு உயிரியலாளர் ஆவார். முர்டோக்கும் அவரது காதலிக்கும் … Read more

டேக்-ஆப் ஆன விமானத்தில் இருந்து கழன்று விழுந்த டயர்.. வைரலாகும் வீடியோ

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஜப்பானுக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது. அதில் 235 பயணிகள், 14 ஊழியர்கள் பயணித்தனர். விமானம் டேக்-ஆப் ஆனபோது விமானத்தின் ஒரு டயர் கழன்று வேகமாக தரையில் விழுந்தது. விமான நிலைய ஊழியர்களின் பார்க்கிங் பகுதியில் டயர் விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த டயர் ஒரு காரின் பின்பக்க கண்ணாடியில் விழுந்து, பின்னர் அருகில் உள்ள வேலியில் மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் … Read more

Overflying plane: Falling tire : Viral video | மேலே பறந்த விமானம்: கீழே விழுந்த டயர் : வீடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லாஸ்ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் ஜப்பான் நோக்கி புறப்பட்ட போயிங் ரக விமானம் உயர பறந்த போது அதன் முன் சக்கரம் கழன்று கீழே விழும் வீடியோ வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பானின் ஒசாகா நோக்கி 249 பயணிகளுடன் போயிங் 767 ரக விமானம் புறப்பட்டது. ஓடு தளத்தலிருந்து மேலே பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் ஒரு சக்கரம் கழன்று கீழே விழுந்தது.இதனை யாரோ ஒருவர் மொபைலின் … Read more

5ஆவது திருமணம் அதுவும் 92 வயதில்… யார் இந்த காதல் மன்னன்?

Rubert Murdoch 5th Marriage: 92 வயதான பிரபலம் ஒருவர் விரைவில் தனது 5ஆவது திருமணம் நடைபெற உள்ளதாகவும், தனது காதலியையும் அறிவித்தார்.

இஸ்ரேல் போர் – ‘காசாவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 63 பெண்கள் உயிரிழப்பு’

காசா: காசாவில் ஒரே இரவில் இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 63 பெண்கள் கொல்லப்படுகிறார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்திய எட்டு தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் காசாவில் ஒரே இரவில் இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் … Read more