கொலம்பியாவில் போராட்டம்: மாணவர்களை அதிரடியாக கைது செய்தது அமெரிக்க அரசு

கொலம்பியா: இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடத்தை கைப்பற்றி போராட்டம் நடத்திய மாணவர்களை நியூயார்க் போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் போரை நிறுத்தக் கோரி அமெரிக்கா முழுவதும் பல்வேறு முக்கிய பல்கலைக்கழகங்களில் கடந்த சில நாட்களாகவே போராட்டம் பரவி வருகிறது. நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய இந்தப் போராட்டம் பல பல்கலைக்கழகங்களுக்கும் பரவியது. அமெரிக்காவின் சிகாகோ, பிரான்சிஸ்கோ, நியூயார்க், கலிபோர்னியா உள்ளிட்ட நகரங்களில் உள்ள … Read more

இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை

லண்டன், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வருபவர் சாகில் சர்மா (வயது 25). இந்திய வம்சாவளியான இவர் தனது மனைவி மெஹக் சர்மாவுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த சாகில் தனது மனைவி மெஹக்கை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் கழுத்தில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்தநிலையில் … Read more

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்

வாஷிங்டன், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், தன்னுடனான பாலியல் உறவுகளை மூடி மறைக்க ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு ரூ.1 கோடி கொடுத்தது தொடர்பாக அவருக்கு எதிராக கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த சூழலில் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என டிரம்புக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அவர் அதை மீறி வழக்கில் தொடர்புடையவர்களை பொதுவெளியில் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இதைத்தொடர்ந்து கோர்ட்டை அவமதித்ததாக கூறி டிரம்ப் நேற்று கோர்ட்டில் ஆஜா்படுத்தப்பட்டார். … Read more

4 மாதங்களில் பிரேசிலில் 40 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

பிரேசிலியா, ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும் ஆண்டுக்கு ஆண்டு அதன் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 4 மாதங்களில் இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10 லட்சம் பேருக்கு டெங்கு பரவிய நிலையில் தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது. … Read more

கம்போடியா: ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20 பேர் பலி – வெடிபொருட்களை தவறாக கையாண்டதாக தகவல்

பினோம் பென், கம்போடியாவின் கமோங் சிபியூ மாகாணத்தில் உள்ள ராணுவ படைத்தளத்தில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். ராணுவ தளத்தில் உள்ள 4 கட்டிடங்கள் மற்றும் அருகில் இருந்த வீடுகள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் உயிரிழந்த 20 பேரின் உடல்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. இந்த வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், வெடிபொருட்களை தவறாக … Read more

இந்தியா வல்லரசு நாடாக முயல்கிறது; ஆனால் நம் நாடு பிச்சை எடுக்கிறது – பாக். எதிர்க்கட்சித் தலைவர் வேதனை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியும் அரசியல் குழப்பமும் நீடித்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மவுலானா ஃபஸ்லுர் ரஹ்மான் இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒப்பிட்டு பேசியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது. நேற்று முன்தினம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் வலதுசாரி கட்சியான ஜமியத் உலமா-இ-இஸ்லாம் ஃபஸ்லின் தலைவர் மவுலானா ஃபஸ்லுர் ரஹ்மான் பேசுகையில், “1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றன. ஆனால், இன்று இந்தியா வல்லரசாக மாற இலக்குநிர்ணயித்து பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் திவால் ஆவதைத் தடுக்க … Read more

'ஹமாஸ் அமைப்பை அழிக்க ரபா நகரின் மீது இஸ்ரேல் படையெடுக்கும்' – நெதன்யாகு சபதம்

ஜெருசலேம், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே சுமார் 7 மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 34 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே இருதரப்பினருக்கும் இடையே போர்நிறுத்தம் மற்றும் அகதிகளை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே சமயம் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கப்போவதாக கூறி உக்கிரமான தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், தனது இலக்கின் இறுதிக்கட்டமாக ரபா நகரை குறிவைத்துள்ளது. ரபா நகரில் … Read more

இந்தியா வல்லரசு கனவு காண்கிறது… ஆனால் நாம் யாசிக்கிறோம்… பாக் எதிர்கட்சித் தலைவர்

பாகிஸ்தானில், எதிர்கட்சியான ஜமியத் உலமா-இ-இஸ்லாம் JUI-F தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், பாகிஸ்தானும் இந்தியாவும் இணைந்து சுதந்திரம் அடைந்த நிலையில், பாகிஸ்தான் திவாலாகும் நிலையில் உள்ளது என்றும், ஆனால் இந்தியா இப்போது வல்லரசாக முயற்சிக்கிறது எனக் கூறியுள்ளார். 

“கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு” – ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம்

லண்டன்: கோவிஷீல்டு கரோனா தடுப்பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதனை உருவாக்கிய ஆஸ்ட்ரஜெனக்கா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரிட்டன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கோவிஷீல்டு பாதிப்புகள் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் சமர்ப்பித்த ஆவணத்தில், கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக ரத்தம் உறைதல், ரத்தத் தட்டுக்களின் (பிளேட்லட்) அளவு குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதை அந்தச் செய்தி மேற்கோள் காட்டியுள்ளது. கடந்த 2019 டிசம்பர் இறுதியில் பரவத் தொடங்கி உலகம் முழுவதும் … Read more

கனடா- இந்தியா உறவில் மீண்டும் விரிசல்..?

புதுடெல்லி, சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்கிற பிரிவினை கொள்கையுடன், காலிஸ்தான் இயக்கம் செயல்பட்டு பல்வேறு அரசியல் கொலைகள், குண்டு வெடிப்பு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இந்த இயக்கம் அடக்கி ஒடுக்கப்பட்ட போதிலும், பஞ்சாபில் மீண்டும் தலைதுாக்கியுள்ளது. இந்த சூழலில் கனடாவில் சீக்கியர் தினம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். அப்போது ‛‛காலிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் … Read more