இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய திட்டம்? வாரண்ட் பிறப்பிக்க தயாராகும் சர்வதேச கோர்ட்டு

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் சரியாக சென்றடையவில்லை. இதனால் உணவு மற்றும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன. இது ஒருபுறமிருக்க, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கப்போவதாக கூறி உக்கிரமான தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், தனது இலக்கின் இறுதிக்கட்டமாக … Read more

துருக்கி: அதிரடி வேட்டையில் ஐ.எஸ். அமைப்பினர் 38 பேர் கைது

அங்காரா, துருக்கி நாட்டில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத குழுவினர் பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பொதுமக்கள், போலீசார் என பலரும் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், ஐ.எஸ். அமைப்பினரை கண்டறிந்து அவர்களை அழிக்கும் நோக்கில் அதிபர் எர்டோகன் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுபற்றி துருக்கி உள்துறை மந்திரி அலி எர்லிகயா செய்தியாளர்களிடம் கூறும்போது, ஐ.எஸ். அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போஜ்டாகன்-31 என்ற பெயரில் அடானா, ஆய்டின், கோரம், காசியன்டெப், கேசெரி மற்றும் … Read more

கவிதை எழுதினால் கூட சிறைவாசம்… சீனாவின் உய்குர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பல!

சீனாவில் உய்குர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் நடப்பது புதிதல்ல. உய்குர்களுக்கு எதிராக சீனா தொடர்ந்து அடக்குகுறைகளை பிரயோகம் செய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, உய்குர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து, உலக அளவில் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன. 

ஈராக்கில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் 15 ஆண்டு சிறை

பாக்தாத், ஓரினசேர்க்கைக்கு எதிரான நாடுகளில் ஒன்றாக ஈராக் திகழ்கிறது. இதனை எதிர்க்கும் வகையில் ஈராக் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது எம்.பிக்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இந்தநிலையில் பெரும்பான்மையினர் ஆதரவுடன் ஈராக்கில் ஓரின சேர்க்கை, விபசாரம் உள்ளிட்டவற்றை குற்றமாக அறிவித்து சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஈராக்கில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளது. விபசாரத்திற்கு சிறை தண்டனை, திருநங்கைகள், திருநம்பிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபடும் டாக்டர்களுக்கு … Read more

இப்போதெல்லாம் இந்தியர்களாக இல்லாவிட்டால் அமெரிக்காவில் சிஇஓ ஆக முடியாது: இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நகைச்சுவை

புதுடெல்லி: இப்போதெல்லாம் அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேராத வர்கள் தலைமைச் செயல் அதிகாரியாக முடியாது என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில், 2024 இந்தி யாஸ்போரா ஏஐ உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி பேசியதாவது: பார்ச்சூன் 500 நிறுவனங்களின் 10 தலைமை செயல் அதிகாரிகளில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் படித்த இந்தியர் களாக உள்ளனர். நீங்கள் இந்திய ராக இருந்தால் அமெரிக்க நிறுவனங்களில் … Read more

பாகிஸ்தானின் துணை பிரதமராக இஷாக் டார் நியமனம்

இஸ்லமாபாத், பாகிஸ்தானில் பல்வேறு குழப்பத்துக்கு மத்தியில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், ஷபாஸ் ஷெரீப் 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். பாகிஸ்தானின் 77 ஆண்டு கால வரலாற்றில் ஷபாஸ் ஷெரீப் அந்நாட்டின் 24-வது பிரதமர் ஆவார். இந்த நிலையில், பாகிஸ்தானின் துணை பிரதமராக இஷாக் டார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை பிரதமர் ஷபாஷ் ஷெரிப், துணை பிரதமராக நியமித்துள்ளார். துணை பிரதமர் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 73 வயதான இஷாக் டார், பாகிஸ்தான் முஸ்லிம் … Read more

அமெரிக்காவில் காரை கவிழ்த்து மனைவி, குழந்தைகளை கொல்ல முயன்றது ஏன்? – இந்திய மருத்துவர் விநோத வாக்குமூலம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், பாசடீனா நகரை சேர்ந்த இந்திய வம்சாவளி மருத்துவர் தர்மேஷ் படேல் (42). அவரது மனைவி நேஹா. அவர்களுக்கு 7 வயதில் மகள், 4 வயதில் மகன் உள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி தர்மேஷ் படேல், தனது மனைவி, இரு குழந்தைகளையும் காரில் சுற்றுலா அழைத்துச் சென்றார். அவரே காரை ஓட்டினார். சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள மலைப் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென 250 அடி … Read more

ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதலை அமெரிக்காவால் மட்டுமே தடுக்க முடியும்- பாலஸ்தீன ஜனாதிபதி பேச்சு

ரியாத்: காசாவின் ஹமாஸ் அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் போர் 7 மாதங்களாக நீடிக்கிறது. இந்த தாக்குதலில் காசாவில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். காசாவின் பெரும்பகுதியில் தாக்குதல் நடத்தி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள இஸ்ரேல், தனது கடைசி இலக்காக, தெற்கு பகுதியில் உள்ள ரபா நகரில் முழு அளவிலான தாக்குதலை நடத்தப்போவதாக மிரட்டி வருகிறது. ரபாவில் தஞ்சம் அடைந்துள்ள லட்சக்கணக்கான மக்கள் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பயந்து தப்பி செல்வதற்கு வேறு இடம் இல்லாமல் அச்சத்துடன் … Read more

இந்திய பயணம் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் எலான் மஸ்க் திடீர் சீனா பயணம்

வாஷிங்டன், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவரது டெஸ்லா நிறுவனம் சா்வதேச அளவில் மின்சார வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. மேலும் பிரபல சமூக வலைதளமான டுவிட்டரை வாங்கிய எலான் மஸ்க், அதன் பெயரை ‘எக்ஸ்’ என்று மாற்றினார். அதோடு ‘ஸ்பேஸ் எக்ஸ்’ விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவராகவும் எலான் மஸ்க் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த வாரம் இந்தியாவுக்கு வர திட்டமிட்டு இருந்தார். இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதலீடு மற்றும் ‘ஸ்டார் லிங்’ … Read more

பாலஸ்தீன கொடியை தொங்கவிட்ட போராட்டக்குழுவினர்… பைடன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு

காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் அமெரிக்காவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பொதுவெளியில் நடந்த போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து, கல்வி நிறுவனங்களுக்கும் பரவி உள்ளன. அமெரிக்காவின் பிரபலமான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர்கள் போராடி வருகின்றனர். காசாவில் போர்நிறுத்தம், இஸ்ரேலுக்கான அமெரிக்க ராணுவ உதவியை நிறுத்துதல், ஆயுத விநியோகம் மற்றும் போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை, போராட்டம் நடத்தும் மாணவர்கள் வலியுறுத்துகின்றனர். தடையை மீறி போராட்டங்களில் … Read more