அமெரிக்க பல்கலை.யில் இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டம்: இந்திய வம்சாவளி மாணவி கைது

வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபலமான பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி ஒருவர், இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பிறந்த அசிந்தியா சிவலிங்கன் என்ற மாணவியும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் மற்றொரு மாணவரான ஹசன் சையத் ஆகிய இருவரும் வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் நடத்தும் வாராந்திர பத்திரிகை உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ஜெனிபர் மொரில் கூறும்போது, “பல்கலைக்கழகத்துக்குள் கூடாரங்கள் அமைப்பது … Read more

நைஜீரியா: சிறைகளை சேதப்படுத்திய கனமழை; 119 கைதிகள் தப்பியோட்டம்

அபுஜா, நைஜீரியா நாட்டின் நைஜர் மாகாணத்தின் வடமத்திய பகுதியில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு அந்த பகுதியில் கனமழை பெய்தது. இதில், சிறையின் சில பகுதிகள் பலத்த சேதமடைந்தன. இதனை பயன்படுத்தி சிறையில் இருந்து 119 கைதிகள் தப்பி சென்றனர். இதுபற்றி தகவல் தெரிந்ததும் போலீசார் மற்றும் உயரதிகாரிகள் சம்பவ பகுதிக்கு சென்றனர். போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியதில், தப்பி சென்ற கைதிகளில் 10 பேர் மீண்டும் பிடித்து வரப்பட்டனர். அவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர். … Read more

ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

பாக்தாத்: ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திய ஐ.எஸ். அமைப்பை 2017-ம் ஆண்டில் ஈராக் படைகள் தோற்கடித்த பிறகு, நூற்றுக்கணக்கான ஐ.எஸ். ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டனர். இன்னும் பலர் ஈராக்கில் அல்லது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது. அவ்வகையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் 11 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நசிரியா மத்திய சிறைச்சாலையில் நேற்று முன்தினம் அவர்கள் தூக்கிலிடப்பட்டதாக சிறை … Read more

திடீரென பாய்ந்து தாக்கிய சிறுத்தை.. வளர்ப்பு நாயால் உயிர்தப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரர்

ஜிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கய் விட்டல் (வயது 51). இவர் ஜிம்பாப்வேயின் ஹூமானி பிராந்தியத்தில் உள்ள பபலோ ரேஞ்சில் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தை நிர்வகித்து வருகிறார். இங்குள்ள பாதை வழியாக கடந்த திங்கட்கிழமை கய் விட்டல் மலையேற்றத்தில் ஈடுபட்டார். அப்போது ஒரு சிறுத்தை திடீரென அவர் மீது பாய்ந்து தாக்கி உள்ளது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவருடன் சென்ற வளர்ப்பு நாய் குறுக்கே வந்து சிறுத்தையை எதிர்கொண்டு கடுமையாக போராடியது. இதனால் … Read more

அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்.. இதை பார்த்து உலகம் சும்மா இருக்காது: நெதன்யாகு ஆவேசம்

பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம்தேதி இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கியது. 6 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த போரில், காசாவில் 34 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த போர் உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் வலிமையான நட்பு நாடான அமெரிக்காவில் உள்ள மிகவும் பிரபலமான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், காசா போருக்கு எதிரான போராட்டத்தை எதிர்கொண்டுள்ளன. போர்நிறுத்தம், … Read more

பிலிப்பைன்சில் வெயிலுக்கு 6 பேர் பலி

மணிலா, தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் கடந்த 3 மாதங்களாகவே வறண்ட வானிலை நிலவி வந்தது. இந்தநிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே பிலிப்பைன்சில் கடுமையான வெப்ப அலைவீசி வெயில் சுட்டெரிக்கிறது. நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இயல்பைவிட அதிக அளவில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக மத்திய பிலிப்பைன்ஸ், சோசிச்கசர்கென் மாகாணம் ஆகிய பகுதிகளில் 110 டிகிரி வரை வெயில் பதிவாகியது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தநிலையில் வெப்ப … Read more

மரண தண்டனை கைதியான தனது மகளை 11 ஆண்டுக்கு பின் சந்தித்த தாய்!

ஏமன் சிறையில் இருக்கும் தனது மகள் நிமிஷா ப்ரியாவை சந்திக்க அவரது தாய் இந்தியாவில் இருந்து வந்தார். ஏமன் நாட்டில் செவிலியராக பணிபுரிந்த கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு, கொலை வழக்கு ஒன்றில் 2018ம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

‘மாஸ்டர் செஃப் ஆஸி.’ நடுவர்களைக் கவர்ந்த இந்திய வம்சாவளி போட்டியாளரின் பானி பூரி!

புதுடெல்லி: பிரபலமான இந்திய சாலையோர உணவான பானி பூரி, ‘மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா’வின் சீசன் 16-ல் இடம்பிடித்து நடுவர்களைக் கவர்ந்துள்ளது. சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட அந்த சமையல் போட்டி நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த போட்டியாளரான சுமீத் சைகல் தனது விருப்பத்துக்குரிய பானி பூரியை தனித்த சுவையுடன் தயாரித்து நடுவர்களைக் கவர்ந்துள்ளார். மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா நிகழ்ச்சியில் இதற்கு முன்பு பல இந்திய வம்சாவளி போட்டியாளர்கள் தங்களின் முத்திரையைப் பதித்துள்ளனர். சஷி செலியா மற்றும் ஜஸ்டின் நாராயண் ஆகியோர் … Read more

‘காசாவுக்கான எனது ஆதரவில் எந்தவித குழப்பமும் இல்லை’ – மலாலா உறுதி

புதுடெல்லி: காசா மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்துள்ள நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் காசாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கான தனது ஆதரவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுடன் இணைந்து தயாரித்த பிராட்வே மியூசிக்கலுக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தனது நிலைப்பாடு குறித்து வியாழக்கிழமை எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “காசா மக்களுக்கான எனது ஆதரவில் எந்தவித குழப்பமும் இருக்கக் கூடாது என்று … Read more

கென்யாவில் தொடரும் கனமழை: 23 மாவட்டங்கள் பாதிப்பு; 38 பேர் பலி

புதுடெல்லி: கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கனமழையால் கென்யா முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்கா நாடான கென்யாவில் கடந்த மாதம் முதலாக கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் பெய்த கனமழையால் பலர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆப்பிரிக்க நாடுகளில் பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், நகரின் சில … Read more