ஈரான் மீது புதிய பொருளாதார தடைகள்.. அமெரிக்கா, இங்கிலாந்து அதிரடி

வாஷிங்டன்: இஸ்ரேல்-ஈரான் நாடுகளுக்கிடையிலான நீண்ட கால நிழல் யுத்தம் தீவிரமடைந்து நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு இஸ்ரேல் மீது குற்றம்சாட்டி உள்ள ஈரான், இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்தியது. அவற்றை அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேல் முறியடித்தது. இந்த தாக்குதல் காரணமாக, இரு நாடுகளிடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது. ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்போவதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் மோசமாக இருக்கும் பட்சத்தில் அது மூன்றாம் … Read more

இஸ்ரேலுக்கு உடனடி பதிலடி தர இப்போதைக்கு திட்டமில்லை: ஈரான்

டெஹ்ரான்: இஸ்ரேலுக்கு உடனடியாக பதிலடி தரும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத ஈரான் பாதுகாப்புப் படை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “இன்று அதிகாலை இஸ்ரேல் ட்ரோன் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ஃபாஹான் பகுதியில் உள்ள அணு உலையை சுற்றிய பகுதியில் வான்வழித் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் ஆயுதங்களைப் பயன்படுத்தினோம்” என்று கூறியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் மீது ஈரான் … Read more

வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் மீட்பு பணிகள் தீவிரம்

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செவ்வாயன்று பெய்த மிக கனமழையால் நகரெங்கும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. 24 மணிநேரத்தில் 142 மி.மீ மழை பெய்துள்ளதாக துபாய் வானிலை மையம் தெரிவித்தது. குறிப்பாக, துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சராசரியாக 94.7 மி.மீ. மழை பெய்தது. இதனால், விமான ஓடுபாதை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. நாட்டின் பிற பகுதிகளில் இதைவிட அதிகமாக மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அரசு செய்தி நிறுவனமான டபிள்யூஏஎம், … Read more

ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்: உறுதி செய்த அமெரிக்கா

புதுடெல்லி: இஸ்ரேல்இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேல் மீது ஈரான் கடந்த ஞாயிறு காலை சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகளை வீசியது. சுமார் 5 மணி நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 99 சதவீதத்தை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் அழித்தன. இந்த தாக்குதல் 3-ம் உலகம் போருக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் எழுந்தது. இதனையடுத்து, மத்திய … Read more

பாகிஸ்தான்: ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படை தாக்குதல்

புதுடெல்லி: பாகிஸ்தானின் கராச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சியில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, காவல்துறை நடத்திய பதில் தாக்குதலில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய தீவிரவாதியும், மற்றொரு தீவிரவாதியும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில், அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் இருந்த 5 வெளிநாட்டவர்களும் உயிர் தப்பினர். பாகிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சியை அமைக்கப் போராடும் சிலர், கடந்த … Read more

இஸ்ரேலுக்கு தொழில்நுட்ப உதவி வழங்குவதை எதிர்த்து போராட்டம்: 28 ஊழியர்களை நீக்கியது கூகுள்

கலிபோர்னியா: நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணி நீக்கம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் மற்றும் அமேசான் நிறுவனம் இஸ்ரேல் அரசுக்கு ஏஐ மற்றும் கிளவுட் தொழில்நுட்ப சேவை வழங்குவது தொடர்பாக 1.2 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர்த் தாக்குதல் நடத்தி வருகிற நிலையில், இஸ்ரேல் ராணுவத்துக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவிகள் வழங்குவது நியாயமற்றது என்று கூறி, இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக கூகுள் ஊழியர்கள் … Read more

யுத்தத்தின் வேதனையை சுட்டும் புகைப்படத்துக்கு 2024-க்கான ‘வேர்ல்ட் பிரஸ் போட்டோ’ விருது!

சென்னை: 2024-ம் ஆண்டுக்கான வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதை வென்றுள்ளார் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றி வரும் முகமது சலேம். இஸ்ரேல் – ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதலில் உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெற்கு காசாவின் கான் யூனிஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள நாசர் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது. அப்போது பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் … Read more

சட்டவிரோத நுழைவு… அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்

நியூயார்க்: இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (வயது 57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தபோது கைது செய்யப்பட்டார். அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் கைது செய்யப்பட்ட அவர், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் கஸ்டடியில் வைக்கப்பட்டிருந்தார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக அட்லாண்டாவில் வைத்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், அட்லாண்டாவின் செயின்ட் மேரிஸ் நகரில் உள்ள தென்கிழக்கு ஜார்ஜியா சுகாதார நிலையத்தில் கடந்த 15-ம் தேதி ஜஸ்பால் சிங் மரணம் அடைந்துள்ளார். அவர் … Read more

செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு இறுதி தகவலை அனுப்பிய இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர்

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியது. இந்த ரோவர் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் ஜெசெரோ க்ரேடர் என்கிற இடத்தில் தரையிறங்கியது. அப்பகுதியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஏரி இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் அங்குள்ள பாறை மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பெர்சவரன்ஸ் ரோவருடன் இன்ஜெனியூட்டி என்கிற சிறிய ஹெலிகாப்டரும் (டிரோன்) அனுப்பப்பட்டிருந்தது. ரோவர் பயணிக்கும் … Read more

ஆலியா பட் முதல் சத்ய நாதெல்லா வரை.. ‘டைம்’ இதழின் சக்திவாய்ந்த 100 நபர்களில் 8 இந்தியர்கள்

‘டைம்’ இதழ் 2024ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 100 நபர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 8 இந்தியர்கள் இடம்பெற்று சுவாரஸ்யம் சேர்த்துள்ளனர். உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா, ஒலிம்பிக் பதக்க மங்கை சாக்‌ஷி மாலிக், இண்டோ – பிரிட்டிஷ் நடிகர் தேவ் படேல், பாலிவுட் நடிகை ஆலியா பட், மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா, அமெரிக்க அரசுத் துறை ஊழியர் (US Department of Energy’s Loan Programmes Office director ) ஜிகர் … Read more