இஸ்ரேல் மீது விரைவில் ஈரான் தாக்குதல் நடத்த கூடும்; அமெரிக்கா கணிப்பு

வாஷிங்டன், சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் நகரில் இருந்த ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் 3 முக்கிய அதிகாரிகள் மரணமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளது. இதுபற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் வெள்ளை மாளிகையில் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதிலில், நான் உறுதியான தகவலுக்குள் போக விரும்பவில்லை. ஆனால், இஸ்ரேல் மீது ஈரான் காலதாமதமின்றி விரைவில் … Read more

ஈரானை முன்வைத்த அமெரிக்காவின் ‘எச்சரிக்கை’யை மீறி காசா மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்

டெல் அவிவ்: “சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், விரைவில் இஸ்ரேலை தாக்க ஈரான் முயற்சிக்கும்” என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ள நிலையில் காசா மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து துளைத்தெடுத்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் 1500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசாவில் வான்வழி, தரைவழி என அனைத்து வழிகளிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸை அழிக்கும் … Read more

ஸ்பெயின்: மத்திய தரைக்கடலில் மிதந்து வந்த படகில் 4 பெண்களின் சடலங்கள்

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டின் முர்சியா நகரின் அருகே உள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரு படகு தத்தளித்தபடி மிதந்து வந்ததை கடற்படையினர் கண்டறிந்தனர். அருகில் சென்று பார்த்தபோது அதில் 4 பெண்கள் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த படகை இன்று காலையில் கார்டஜினா துறைமுகத்திற்கு மீட்புக்குழுவினர் இழுத்து வந்தனர். படகில் இருந்த பெண்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர்களின் இறப்புக்கான காரணம், பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும். அவர்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் … Read more

செப்டம்பர் மாதம் 4 நாடுகளுக்கு போப் பிரான்சிஸ் பயணம் – வாடிகன் அறிவிப்பு

வாடிகன் சிட்டி, கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் வருகிற செப்டம்பர் மாதம் இந்தோனேசியா, கிழக்கு திமோர், பப்புவா நியூ கினியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என வாடிகன் தேவாலயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி போப் பிரான்சிஸ், வரும் செப்டம்பர் 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை ஜகார்த்தா, போர்ட் மோர்ஸ்பி, வனிமோ, பப்புவா நியூ கினியா, டிலி, கிழக்கு திமோர் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்குச் செல்ல இருக்கிறார். இதுவரை … Read more

இந்தியாவுடன் உள்நாட்டு கரன்சியில் வர்த்தகம்: மாலத்தீவு பேச்சுவார்த்தை

மாலே: இந்தியாவிடமிருந்து மாலத்தீவு ஆண்டுக்கு 780 மில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்கிறது. இதுவரையில், இதற்கான தொகையை மாலத்தீவு டாலரில் வழங்கி வந்தது. இந்நிலையில், இனி இந்தியாவுடனான வர்த்தக பரிவர்த்தனையை மாலத்தீவின் நாணயமான ரூபியாவில் மேற்கொள்வது குறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகம்மது சயித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மாலத்தீவில் வரும் 21-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில், ஆளும் கட்சி மீண்டும் … Read more

பிலிப்பைன்சில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 2 பேர் பலி

மணிலா, பிலிப்பைன்சின் காவிட் மாகாணத்தில் உள்ள கடற்படை தளத்தில் வழக்கமான ராணுவ பயிற்சிகள் நடைபெற்றன. இதற்காக சாங்கி விமான நிலையத்தில் இருந்து கடற்படை தளத்துக்கு ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட சிறிதுநேரத்தில் அந்த ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி கேவிட் சிட்டியில் உள்ள ஒரு சந்தைப்பகுதி அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டர் கீழே விழுவதை பார்த்த பொதுமக்கள் பதறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உடல் சிதறி … Read more

தென்கொரியா நாடாளுமன்ற தேர்தல்: எதிர்க்கட்சி அபார வெற்றி – 189 இடங்களை கைப்பற்றி சாதனை

சியோல், தென்கொரியாவில் அதிபர் யூன் சுக் இயோல் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அதிபருக்கு அடுத்தபடியான அதிகாரத்தில் இருப்பவர் பிரதமர் ஆவார். அதன்படி ஆளும் மக்கள் சக்தி கட்சி கூட்டணி சார்பில் ஹான் டக்-சூ பிரதமராக இருந்தார். இவரது பதவிக்காலம் முடிவதால் நேற்று முன்தினம் (புதன்கிழமை) அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் நீண்ட ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். தென்கொரியாவை பொறுத்தவரை மொத்தம் 300 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி … Read more

காலநிலை மாற்றம் | வெப்ப அலையால் 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்படுவர்: ஐ.நா. எச்சரிக்கை

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இந்த ஆண்டு ஏற்படக்கூடிய அதீத வெப்ப அலையில் சிக்கி கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் உள்ள 24 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. காலநிலை மாற்றத்தின் தாக்கங்களால் பெரியவர்களைவிட குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவர். அதீத வெப்ப அலை அவர்களுக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஆகையால் இந்த கோடை காலத்தில் நாம் குழந்தைகளைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் … Read more

கட்டுமான பணி: இந்தியாவிலிருந்து 6 ஆயிரம் தொழிலாளர்கள் வரவுள்ளதாக இஸ்ரேல் தகவல்

டெல்அவிவ், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 6 மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போர் காரணமாக இஸ்ரேலில் வேலை பார்த்து வந்த பெரும்பாலான வெளிநாட்டு தொழிலாளர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் அங்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவில் இருந்து 6 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு அழைத்துவரப்பட உள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “குறுகிய காலத்தில் கட்டுமானத் துறைக்காக அதிக … Read more

இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதல்: மகன்கள், பேரன்களை பறிகொடுத்த ஹமாஸ் தலைவர்

காசா, பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது 6 மாதங்களுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் இஸ்ரேல் காசாவில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் ஹமாஸ் தலைவர்களின் குடும்பத்தினரும் இலக்கு வைக்கப்படுகின்றனர். இந்த நிலையில் மேற்கு காசாவில் உள்ள அல்-ஷாதி அகதிகள் முகாமுக்கு அருகே ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான இஸ்மாயில் ஹனியேவின் குடும்பத்தினர் சென்ற காரை குறிவைத்து இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்மாயில் ஹனியேவின் 3 … Read more