உடலுறவில் இத்தனை பிரச்னைகளா… விந்தணு முதல் ஆணுறை வரை அலர்ஜி – மனம் திறந்த பெண்!

World Bizarre News: அமெரிக்க பெண் ஒருவர் தனக்கு இருக்கும் அரிய வகை உடல் பாதிப்பினால், உடலுறவு கொள்வதிலும், கர்ப்பமடைவதிலும் இருக்கும் சிரமங்கள் குறித்து பொதுவெளியில் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 43 பேர் பலி; பலர் படுகாயம்

டாக்கா: வங்கதேசத்தில் 6 தளங்கள் கொண்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 43 பேர் பலியாகினர். பலர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர். வங்கதேச தலைநகர் டாக்காவில் 6 தளங்கள் கொண்ட வணிக வளாகம் ஒன்றில் நேற்று (வியாழக்கிழமை) பின்னிரவு தீவிபத்து ஏற்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். விபத்து குறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் டாக்டர் சமந்தா லால் சென் இன்று (வெள்ளிக்கிழமை) காலை செய்தியாளர்களை … Read more

Israeli airstrikes: 70 killed in Gaza | இஸ்ரேல் வான் தாக்குதல்: காசாவில் 70 பேர் பலி

ரபா : மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் தீவிரமாகியுள்ளது. முதலில் இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று, மேற்கு காசா நகரில் உணவு கொண்டு வந்த லாரிகளை சுற்றி பாலஸ்தீனியர்கள் திரண்டனர். உணவை பெற தள்ளுமுள்ளு ஏற்பட்டு … Read more

World Seaweed Day | உலக கடற்புற்கள் தினம்

கடற்புற்கள் என்பது கடலுக்கு அடியில் வாழும் ஒரு தாவரம். இதில் பல்வேறு இனங்கள் உள்ளன. சில கடல்வாழ் உயிரினங்களுக்கு கடற்புற்கள் முக்கிய உணவாக உள்ளது. 1930களில் இருந்து கடல்புற்களின் பரப்பு குறைந்து வருகிறது. இவை குறைந்தால் கடல் வளம், கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பாக அமையும். இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மார்ச் 1ல் உலக கடற்புற்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கடல் தண்ணீரை சுத்தப்படுத்துதல், மாசுக்களை கவர்தல் போன்றவை கடல்புற்களின் பணி. கடலில் ஏற்படும் கார்பனில் 18 … Read more

Israeli army fire on Palestinians in Gaza: 107 dead | காசாவில் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு: 107 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காசா: காசா பகுதியில் பாலஸ்தீனியர்கள் கூட்டத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 100-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான போர், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காசாவின் வடக்கு பகுதியில் உள்ள பாலஸ்தீனியர் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 104 … Read more

பாகிஸ்தான் ஏர்லைன்சுக்கு நன்றி..! கடிதம் எழுதி வைத்துவிட்டு கனடாவில் மாயமான விமான பணிப்பெண்..!

பாகிஸ்தானில் இருந்து கனடா நாட்டின் டொரன்டோ நகருக்கு கடந்த 26-ம் தேதி பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் சென்றது. அந்த விமானத்தில் பணியாற்றிய மரியம் ரசா என்ற பணிப்பெண், விமானம் தரையிறங்கியதும் டொரன்டோ நகருக்குள் சென்றார். மறுநாள் விமானம் புறப்பட வேண்டிய நேரத்தில் பணிக்கு திரும்ப வேண்டிய மரியம், பணிக்கு வரவில்லை. இதையடுத்து அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு அதிகாரிகள் சென்றனர். அங்கு அவர் இல்லை. அவர் தங்கியிருந்த அறை பூட்டப்பட்டிருந்தது. அறையை திறந்து பார்த்துபோது அங்கு, மரியம் ரசாவின் … Read more

உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பித்த நாடுகளுக்கு ஆதரவு: இந்தியா அறிவிப்பு

அபுதாபி, உலக வர்த்தக அமைப்பின் 13-வது மந்திரிகள் மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நடந்து வருகிறது. இதில், கலந்து கொள்வதற்காக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் சென்றுள்ளார். அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து அவர் பேசும்போது, உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து கோரி 22-க்கும் கூடுதலான நாடுகள் விண்ணப்பித்து உள்ளன. அவர்களுடைய கோரிக்கைகளை கருணை அடிப்படையிலான பார்வை கொண்டு, … Read more

உணவுக்காக காத்திருந்த மக்களை சுட்டுத் தள்ளிய இஸ்ரேல் படையினர் – காசாவில் தொடரும் கொடூரங்கள்!

காசா: தெற்கு காசாவில் உணவுக்காக காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி கல் மனதையும் கலங்கச் செய்கிறது. காசாவில் 5,00,000-க்கும் அதிகமானோர் அல்லது நான்கு பேரில் ஒருவர் பஞ்சத்தின் ஆபத்தில் இருக்கின்றனர் என உலக உணவுத் திட்டத்தின் துணை நிர்வாக இயக்குநர் எச்சரித்துள்ளார். அக்டோபர் 7, 2023-ஆம் ஆண்டு இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகளில் இருந்து ஒலிக்கத் தொடங்கிய போர் … Read more

ஆத்திரத்தை தூண்டிய ஹனிமூன் கேள்வி… டிவி லைவ் ஷோவில் காமெடியனை அறைந்த பாகிஸ்தான் பாடகி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகி ஷாஜியா மன்சூர், டிவி லைவ் ஷோவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது, அவருடன் உரையாடிய காமெடி நடிகர் ஷெர்ரி நன்ஹாவுடன் வாக்குவாதம் ஏற்பட்டு, அவரை தாக்குவது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஹனிமூன் குறித்து காமெடி நடிகர் ஷெர்ரி நன்ஹா நகைச்சுவையாக பேசுவதும், பின்னர் அவர் தாக்கப்படுவதும் பதிவாகி உள்ளது. “ஒருவேளை நமக்கு திருமணம் ஆனால், நமது ஹனிமூனுக்கு உங்களை உடனடியாக மான்டே கார்லோவுக்கு அழைத்துச் செல்வேன். … Read more

அமெரிக்க ராணுவத்தில் 5 சதவீதம் ஆட்குறைப்பு

வாஷிங்டன், உலகில் சக்தி வாய்ந்த ராணுவ படைகளை கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்க தரைப்படையில் 4 லட்சத்து 50 ஆயிரம் வீரர்களும், 50 ஆயிரம் ரிசர்வ் படைவீரர்களும் பணி புரிந்து வருகின்றனர். இந்தநிலையில் அமெரிக்க ராணுவத்துக்கான நிதியில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த நாட்டு நாடாளுமன்றம் கூறியுள்ளது. இதனால் ராணுவத்தில் ஆட்குறைப்பு செய்ய அரசு முடிவு செய்து அதனை தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி அமெரிக்க ராணுவத்தில் 5 சதவீதம், அதாவது சுமார் 25 … Read more