Pakistans comment on India is perverse: Ambassadors response at UN | ‛எங்களை பற்றி பாகிஸ்தான் கருத்து தெரிவிப்பது விபரீதமானது : ஐ.நா., சபையில் இந்திய தூதர் பதிலடி

ஐக்கிய நாடுகள்: ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, ‛‛ மோசமான சாதனைகளை கொண்ட நாடு, மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது. அதற்கு பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் கிடையாது. இந்தியா பற்றி கருத்து தெரிவிப்பது விபரீதமானது” எனத் தெரிவித்து உள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலின் வழக்கமான 55வது கூட்டம் நடந்தது. இதில், பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது. இதற்கு இந்தியாவின் நிரந்தர தூதர் அனுபமா … Read more

மொபைல் லைட்டிலேயே கேன்சரை கண்டுபிடித்த தாய்… உயிர் தப்பிய மகன் – அது எப்படி?

World Bizarre News: வெறும் மொபைல் ஃபிளாஷ் லைட்டை பயன்படுத்தி தனது மகனின் புற்றுநோயை கண்டுபிடித்து, சரியான நேரத்தில் சிகிச்சைக்கு அளித்த சென்ற தாயாரின் நெகிழ்ச்சி கதையை இங்கு காணலாம். 

New Yorks Albert Einstein medical school students dont need to pay tuition fees | மருத்துவக்கல்லூரி படிப்பு இலவசம் ; அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கல்லூரி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: அமெரிக்காவில் புகழ்பெற்ற நியூயார்க் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்துள்ளது. மேலும் தற்போதைய 4 ம் ஆண்டு மாணவர்களின் கல்வி கட்டணமும் திரும்ப தரப்படும் என்றும் கூறியுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கல்லூரி விழா ஒன்றில் பேசிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நிறுவனத்தின் பொருளாளர் இதனை தெரிவித்தார். இவர் ஒரு பில்லியன் டாலர் நன்கெடை வழங்குவதாக தெரிவித்தார். இந்த கட்டண பீரீ அறிவிப்பை … Read more

அமெரிக்க அதிபர் போட்டியில் முந்துவாரா டிரம்ப்! ‘அமெரிக்க கேபிடல்’ ஏற்படுத்தும் எதிர்வினை!

Donald Trump In President Election : மார்ச் 19 நாளன்று நடைபெறவிருக்கும் வாக்களிப்பில் இருந்து டிரம்ப் நீக்கப்படுவதாக இல்லினாய்ஸ் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Indian civilian team visited Maldives | மாலத்தீவுகளுக்கு சென்றது இந்திய சிவிலியன் குழு

மாலே: மாலத் தீவுகளில் உள்ள மூன்று இந்திய விமானப் படை தளங்களை பராமரிக்கும் பணிக்காக, இந்திய சிவிலியன் குழு அங்கு சென்றடைந்தது. தெற்காசிய நாடான மாலத்தீவுகளின் அதிபராக, சீன ஆதரவாளர் முகமது முய்சு, கடந்தாண்டு நவம்பரில் பதவியேற்றார். ஆதரவு இதைத் தொடர்ந்து, மாலத்தீவுகள் மற்றும் இந்தியா இடையேயான உறவில் உரசல் ஏற்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், நம் நாட்டின் சுற்றுலா குறித்தும் அந்த நாட்டின் அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தனர். இந்நிலையில், தன் சீன ஆதரவு … Read more

சட்டவிரோத ஆயுத பரிமாற்றம் உலகிற்கே அச்சுறுத்தல்! ரஷ்யா & வடகொரியா மீது குற்றச்சாட்டு!

North Korea munitions to Russia : ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் பாகங்கள் அடங்கிய கொள்கலன்களிலேயயே, வட கொரியாவுக்கு உணவு அனுப்பும் ரஷ்யா!  

Indian businessman arrested in tax fraud case | வரி மோசடி வழக்கு இந்திய தொழிலதிபர் கைது

வாஷிங்டன்: மஹாராஷ்டிராவின் மும்பை மற்றும் அமெரிக்காவின் நியூஜெர்சியில், தங்க நகைத் தொழிலில் ஈடுபட்டு வரும், இந்திய அமெரிக்கர் மோனிஷ்குமார் கிரண்குமார் தோஷி ஷா, 39, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இவர் இந்தியா மற்றும் துருக்கியில் இருந்து நகைகளை, அமெரிக்காவுக்கு வரவழைத்தார். நேரடியாக வரவழைத்தால், அதற்காக சுங்கக் கட்டணம் செலுத்த நேரிடும். இதை தவிர்ப்பதற்காக, அவர் பல மோசடிகளில் ஈடுபட்டார். இதன்படி, கிழக்காசிய நாடான தென்கொரியாவில் ஓர் அலுவலகம் திறந்து, அங்கு அனுப்ப வைத்து, அங்கிருந்து … Read more

15 வருஷமா சிக்காமல் சரக்கு பாட்டில்களை திருடியவர் சிக்கியது எப்படி?

15 ஆண்டுகளுக்கும் மேலாக 7,000 மது பாட்டில்களைத் திருடியதற்காக பிரெஞ்சுக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  

இளவரசி கேத் மிடில்டன் எங்கே? – பிரிட்டன் அரச குடும்பத்தில் எழுந்த புதிய பிரச்சினை!

வேல்ஸ்: பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேல்ஸ் இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேத் மிடில்டன் தம்பதி. இவர்கள் திருமணம் 2011-ம் ஆண்டு ஏப்ரல் 29-ல், லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணமாகி கென்சிங்டன் அரண்மனையில் வசித்து வரும் இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. பிரிட்டன் மன்னருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து அவரது அரசப் பணிகளை இளவரசர் வில்லியமே கவனித்து வருகிறார். இதனிடையே, வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதி கடந்த இருவாரங்களாக … Read more

பசிபிக் கடலில் உள்ள மெக்வாரி தீவுப்பகுதியில் நிலநடுக்கம் – ரிக்டர் 5.4 ஆக பதிவு

ஹோபார்ட், ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாகாணத்தின் ஒரு அங்கமான மெக்வாரி தீவுப்பகுதி, தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் நியூசிலாந்து மற்றும் அண்டார்டிகாவுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த தீவுப்பகுதியில் இன்று காலை 5.56 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related Tags : Macquarie … Read more