The man who set fire to the Israeli embassy in the US earlier in support of the Palestinians | இஸ்ரேல் தூதரகம் முன்பு பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக தீக்குளித்த அமெரிக்க விமானப்படை அதிகாரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு பாலஸ்தீனர்களை விடுவிக்க கோரி அமெரிக்க விமானப்படை அதிகாரி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அந்த நபர் மருத்துமனையில் கவலைக்கிடமாக உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதுவரை போரில் 29,092 பாலஸ்தீனர்கள் உயிரிழந்து உள்ளனர். … Read more

பாட்டில் மூடிகளை தலையால் திறந்து கின்னஸ் உலக சாதனை

ராவல்பிண்டி, உலகம் முழுவதும் அரிய சாதனைகளை படைத்தவர்கள், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த, முகமது ரஷீத் என்பவர் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதன்படி, மேஜை ஒன்றின் முனை பகுதியில் பாட்டில்களை இறுக பிடித்து கொண்டு திறமையாக, அதன் மூடிகளை அவருடைய தலையால் விரைவாக முட்டி, நீக்குகிறார். பாட்டில்களை ஒன்றன் பின் ஒன்றாக அவருடைய உதவியாளர்கள் அனுப்பி கொண்டே இருக்கின்றனர். அதிவேகத்தில் இந்த பாட்டிலின் மூடிகளை நீக்கும் செயலை … Read more

ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருந்த ராணுவ வீரர் படுகொலை: இஸ்ரேல்

டெல் அவிவ், இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில், 1,200 இஸ்ரேல் மக்கள் உயிரிழந்தனர். 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். அவர்களின் பிடியில் உள்ள 134 பேரில் 31 பேர் உயிரிழந்து விட்டனர் என்று இஸ்ரேல் சமீபத்தில் அறிவித்தது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், பாலஸ்தீனர்களின் மொத்த உயிரிழப்பு 29,092 ஆக உள்ளது என்று காசா சுகாதார அமைச்சகமும் தெரிவித்து … Read more

நேபாளம்: 57 லட்சம் குழந்தைகளுக்கு ரூபெல்லா, தட்டம்மை தடுப்பூசி போட இலக்கு

காத்மண்டு, நேபாளத்தில் நாடு முழுவதும் உள்ள 57 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி போடுவது என அந்நாட்டு அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக வருகிற மார்ச் 20-ந்தேதி வரை தேசிய அளவில் தடுப்பூசி முகாம்கள் செயல்படும். இதில், இந்திய எல்லை மற்றும் காத்மண்டு பள்ளத்தாக்கிற்கு உட்பட்ட 3 மாவட்டங்கள் என அதிகம் தொற்று பாதித்த 21 பகுதிகள் உள்பட 24 மாவட்டங்களில் இந்த தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும். இதன்படி, 9 மாத குழந்தைகள் … Read more

மதவழிபாட்டின்போது துப்பாக்கி சூடு – 15 பேர் பலி

ஒவ்கடங்கு, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதேவேளை அந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினருக்கு உதவியாக … Read more

காசாவிற்கான மனிதாபிமான உதவிகள் ஹமாஸ் கைக்கு போவதை தடுக்க… இஸ்ரேல் எடுக்கும் நடவடிக்கை!

காசா பகுதியில் ஹமாஸை முழுவதுமாக ஒழித்துக் கட்டும் வரை, போர் தொடரும் என்று அறிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர், போர் முடிந்தபின் காசா பகுதியின் பாதுகாப்பு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தலீபான்களால் கைது செய்யப்பட்ட ஆஸ்திரிய முதியவர் ஓராண்டுக்கு பின் விடுதலை

காபுல், ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனால், அதிபர் அஷ்ரப் கானி நாட்டில் இருந்து தப்பியோடினார். தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியபின் அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல வெளிநாட்டு தூதரகங்கள் மூடப்பட்டன. அதேபோல், பெண்கள் பொதுஇடங்களுக்கு செல்லவும் தலீபான்கள் தடைவிதித்தனர். பெண்கள் 6ம் வகுப்புக்குமேல் படிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனிடையே, ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த 84 வயதான ஹெர்பெட் பிரிட்ஸ் என்ற முதியவரை தலீபான்கள் கைது … Read more

தேசிய கொடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த துனிசிய இமாம் பிரான்ஸிலிருந்து நாடு கடத்தல்

பாரிஸ்: பிரான்ஸ் தேசிய கொடி குறித்துஅவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி துனிசிய இமாம் பிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். துனிசியாவைச் சேர்ந்த இமாம் (மத போதகர்) மஹ்ஜூப் மஹ்ஜூபி (52), தெற்கு பிரான்ஸின் பக்னோல்ஸ்-சுர்-செஸ் நகரில் உள்ள ஒரு மசூதியில் மத போதனை செய்துள்ளார். அப்போது, பிரான்ஸின் மூவர்ணக் கொடி என்பது சாத்தானியம் என விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை நாடுகடத்துமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதுகுறித்து பிரான்ஸ் உள் துறை அமைச்சர் ஜெரால்டு டார்மனின் தனது … Read more

Fire accident in America: Indian killed | அமெரிக்காவில் தீ விபத்து: இந்தியர் பலி

நியூயார்க் : அமெரிக்காவில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, இந்திய இளைஞர் உயிரிழந்தார். இந்தியாவைச் சேர்ந்த பசில் கான், 27, என்ற இளைஞர், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் மன்ஹாட்டன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, ‘தி ஹெச்சிங்கர் ரிப்போர்ட்’ என்ற பத்திரிகையில் பத்திரிகையாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், பசில் கான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியது. இந்த … Read more

Nikki Haley lost in home province | சொந்த மாகாணத்தில் நிக்கி ஹாலே தோல்வி

சார்லஸ்டன் : அமெரிக்காவில், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் களமிறங்கியுள்ள நிக்கி ஹாலேவுக்கு, சொந்த மாகாணமான தெற்கு கரோலினாவில் அதிர்ச்சி கிடைத்தது. முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை விட 20 சதவீத குறைவாக ஓட்டுகளே கிடைத்தன. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடக்கிறது. இதற்காக கட்சிகளின் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்கிறது. குடியரசு கட்சியில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, தெற்கு கரோலினா முன்னாள் கவர்னரான, இந்திய … Read more