காசாவில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் – 28 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

காசா, மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி போர் வெடித்தது. இந்த போரில் இதுவரை 28 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியரகள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் காசாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் போர் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தெற்கு காசாவில் உள்ள ரபா நகரத்தில் … Read more

அமெரிக்காவில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. இந்திய வம்சாவளி நிர்வாகி அடித்துக்கொலை

வாஷிங்டன்: அமெரிக்காவில் சமீப காலமாக இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த வார துவக்கத்தில் சிகாகோவில் இந்திய மாணவர் சையது மசாஹிர் அலியை கொள்ளையர்கள் கடுமையாக தாக்கினர். ஜார்ஜியாவின் லிதோனியா நகரில் மற்றொரு மாணவர் விவேக் சைனியை போதை ஆசாமி ஒருவர் கொடூரமாக தாக்கினார். இந்த ஆண்டில் 4 இந்திய மாணவர்கள் இறந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், 41 வயது நிரம்பிய இந்திய வம்சாவளி நிர்வாகி விவேக் தனேஜா, வாஷிங்டனில் மர்ம நபரால் கடுமையாக … Read more

ரஃபா மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல்: 10 குழந்தைகள் உள்பட 28 பேர் பலி

டெல் அவிவ்: காசாவின் ரஃபா நகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில்10 குழந்தைகள் உள்பட 28 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை காசா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இரண்டு நாடுகளின் அதிகார அத்துமீறலுக்கு இன்னும் எத்தனை அப்பாவி உயிர்கள் பலியாகப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்தப் போரில் இதுவரை 28 … Read more

விமானத்தில் சென்றபோது ரத்தம் கக்கி இறந்த நபர்… பயத்தில் அலறிய சக பயணிகள்

பாங்காக்: தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து ஜெர்மனியின் முனிச் நகருக்கு நேற்று முன்தினம் இரவு லுப்தான்சா பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது 63 வயது நிரம்பிய பயணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடுமையாக மூச்சு வாங்கியது. சிறிது நேரத்தில் ரத்த வாந்தி எடுத்தார். மூக்கில் இருந்தும் ரத்தம் கொட்டியது. பின்னர் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த அவரது மனைவி கதறி அழுதார். சக பயணிகளும் பயத்தில் அலறினர். விமான பணியாளர்கள் மற்றும் விமானத்தில் இருந்த … Read more

‘பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் மோசடி’ – விசாரணைக்கு மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பொதுத் தேர்தல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை வலியுறுத்தியுள்ளன. பாகிஸ்தானின் தேசிய அவை மற்றும் மாகாண அவைகளுக்கான தேர்தல் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. காலை 8 மணிக்குத் தொடங்கிய தேர்தல் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதனையடுத்து, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றதால், வாக்குகள் எண்ணும் பணி இன்னும் முடிவுக்கு வரவில்லை. தேசிய அவையின் … Read more

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்; வெற்றி பெற்றது நாங்களே…!! இம்ரான் கான், நவாஸ் ஷெரீப் தனித்தனியாக அறிவிப்பு

லாகூர், பாகிஸ்தானில் கடந்த 8-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இந்த தேர்தல் நிறைவடைந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 336 இடங்களில் 266 இடங்கள் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவை ஆகும். எஞ்சிய 70 இடங்கள் வெற்றி பெற்ற கட்சிகளின் பெரும்பான்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஒட்டுமொத்தமாக 169 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சியில் அமரும். இந்த தேர்தலில், சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பலரும் சுயேச்சையாக போட்டியிட்டு உள்ளனர். அவருடைய … Read more

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தில் நேற்று நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 11.53 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. மேற்கு பப்புவா மாகாணத்தில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தன. இதனால் அச்சம் அடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. கடந்த டிசம்பர் … Read more

உடலுறவு… ஊரில் யாருக்கும் தூக்கமே இல்லை… இரவில் வரும் பயங்கர சத்தம் – என்ன காரணம்?

World Bizarre News: அமெரிக்காவின் ஒரு பகுதியில் இரவில் ஏற்படும் ஒரு பயங்கர சத்தத்தால் பலராலும் தூங்கவே முடியவில்லை என கூறப்பட்ட நிலையில், அது எங்கிருந்து வருகிறது என்பது ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். 

US Wonderful Place To Study, Be Safe: Envoy After Indian Students Deaths | “கல்வி கற்க எங்கள் நாடு பாதுகாப்பானது”: அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்கா படிப்பதற்கும் பாதுகாப்பாக இருப்பதற்கும் ஒரு அற்புதமான இடம் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் பலரும் படித்து வருகிறார்கள். வளர்ந்த நாடான அமெரிக்காவில் நல்ல சம்பளம் மற்றும் பல்வேறு வசதிகள் கிடைப்பதால் அங்கேயே செட்டிலாகிவிடும் என்ற நம்பிக்கையில் பலரும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்வதை பார்க்க முடிகிறது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்தே … Read more

சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு அதிகம் செலவு வைக்கும் 9 நாடுகள்

இந்தியர்களுக்கு ரூபாய் மதிப்பு அடிப்படையில் சுற்றுலா செல்லும்போது அதிகம் செலவு வைக்கும் 9 நாடுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.