காசாவிலிருந்து துருக்கி தப்பி சென்று மறுமணம் செய்து கொண்ட ஹமாஸ் முன்னாள் தலைவர் சின்வரின் மனைவி

டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்தவர் யாஹ்யா சின்வர். இவருக்கும் சமர் முகமது அபு ஜாமருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சின்வர் உயிரிழந்தார். சின்வரின் மனைவி சமர் தனது குழந்தைகளுடன் வேறு ஒரு பெண்ணின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ரபா எல்லை வழியாக எகிப்துக்கு தப்பிச் சென்றுள்ளார். அங்கிருந்து துருக்கியில் வசித்து வந்த அவர், தனது … Read more

துருக்கியில் காட்டுத்தீ; 14 பேர் பலி

அங்காரா, துருக்கியில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் வடமேற்கே அமைந்த 4-வது மிக பெரிய நகரான புர்சா நகரில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால், தலைநகர் அங்காராவுடனான சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. தீயை அணைக்க 1,900-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சென்றுள்ளனர். இதுபற்றி வனத்துறை மந்திரி இப்ராகிம் யுமாக்லி கூறும்போது, நேற்று 84 இடங்களில் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். கராபுக் … Read more

பாகிஸ்தான்: டயர் வெடித்ததில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- 9 பேர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து இன்று காலை 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு லாகூருக்கு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பஸ் எம்-2 மோட்டார் பாதை வழியாகசென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ்சின் ஒரு டயர் வெடித்தது. இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து விபத்து குறித்து … Read more

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.7 ஆக பதிவு

பீஜிங், சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் ஜனவரி மாதம் 7ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், திபெத்தில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 2.43 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானதாக தேசிய நில … Read more

காங்கோ நாட்டில் தேவாலயத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு – 21 பேர் உயிரிழப்பு

கின்ஷாசா, காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள கொமாண்டா பகுதியில் அமைந்துள்ள ஒரு தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென தேவாலயத்திற்குள் ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள், அங்கு இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தினர். இதனால் அங்கிருந்த மக்கள் பயத்தில் சிதறியடித்து ஓடத் தொடங்கினர். அவ்வாறு ஓடியவர்களை துரத்திச் சென்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். மேலும் தேவாலயத்திற்கு அருகே இருந்த சில வீடுகள் மற்றும் கடைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இந்த கொடூர … Read more

மியான்மரில் நிலநடுக்கம் – ரிக்டர் 3.6 ஆக பதிவு

நேபிடா, மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி ரிக்டர் 7.7 மற்றும் ரிக்டர் 6.4 அளவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 3,700 பேர் உயிரிழந்ததாகவும், 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது. இதனை தொடர்ந்து மியான்மரில் அவ்வப்போது சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், மியான்மரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.45 … Read more

விமானத்தில் திடீரென பற்றிய தீ! உயிரை பிடித்துக்கொண்டு ஓடிய பயணிகள்-வைரல் வீடியோ

Watch Video American Plane Catches Fire At Denver : அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்தில், விமானம் புறப்படத் தயாரான நிலையில், ரன் வேயில் சென்றபோது திடீரென தீ பற்றியதால் விமானிகள் பீதியடைந்தனர். இது குறித்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

மூத்த ஹிஸ்புல்லா தளபதி படுகொலை; இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் அறிவிப்பு

டெல் அவிவ், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 59 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. லெபனான் நாட்டில் இருந்தபடி, இஸ்ரேலை தாக்கியது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் … Read more

தாய்லாந்து – கம்போடியா இடையில் போர் தீவிரமடைகிறது

பாங்காக்/நாம்பென்: தாய்லாந்து, கம்போடியா இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த போரில் இருதரப்பில் இதுவரை 33 பேர் உயிரிழந்து உள்ளனர். தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து அமைந்துள்ளது. இதன் அண்டை நாடு கம்போடியா இரு நாடுகளும் 817 கி.மீ. தொலைவு எல்லையை பகிர்ந்து கொள்கிறது. பண்டைய காலத்தில் முதலாம் ராமா மன்னரால் தோற்றுவிக்கப் பட்ட ரத்தனகோசின் பேரரசு தாய்லாந்தை ஆட்சி செய்தது. இதே போல இரண்டாம் ஜெயவர்மன் மன்னரால் தோற்றுவிக்கப்பட்ட கெமர் பேரரசு கம்போடியாவை ஆட்சி செய்தது. இந்து … Read more

மியான்மரில் நிலநடுக்கம் – ரிக்டர் 3.4 ஆக பதிவு

நேபிடா, மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி ரிக்டர் 7.7 மற்றும் ரிக்டர் 6.4 அளவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 3,700 பேர் உயிரிழந்ததாகவும், 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது. இதனை தொடர்ந்து மியான்மரில் அவ்வப்போது சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், மியான்மரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 11.27 … Read more