ஊழல் வழக்கில் பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை

இஸ்லாமபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவருமான இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி இருவருக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தோஷாகானா வழக்கில் இருவருக்கும் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த தம்பதி 10 ஆண்டுகளுக்கு பொது பதவிகள் வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இருவருக்கும் ரூ.787 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அரசின் ரகசிய … Read more

பாகிஸ்தான்: இம்ரான் கான் கட்சி பேரணியில் குண்டுவெடிப்பு; 4 பேர் பலி

கராச்சி, பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சிலர் நேற்று (செவ்வாய் கிழமை) பேரணி ஒன்றை நடத்தினர். அக்கட்சியின் கொடியை ஏந்தியபடி, பைக்குகளில் அவர்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், திடீரென குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில், அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் 3 பேர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதனை அக்கட்சிக்கான மாகாண … Read more

US Visa: ஆன்லைனில் அமெரிக்க விசா ரெனியூவல்! அருமையான வாய்ப்பை தவறவிடவேண்டாம்!

H-1B Visa Online Updation: ஆன்லைனிலும் அமெரிக்க விசாவை புதுப்பிக்கலாம் தெரியுமா? US H-1B விசா புதுப்பித்தல் இயக்கம் ஆன்லைனில் தொடங்கியது… எப்படி விண்ணப்பிப்பது? விதிமுறைகள் என்ன?

டாக்டர், நர்சு, நோயாளி வேடத்தில் மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேல் சிறப்பு படையினர் – ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 3 பேர் சுட்டுக்கொலை

ஜெருசலேம், இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையேயான போர் 3 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகிறது. காசா முனையில் போர் நடந்துவரும் நிலையில் மேற்குகரையிலும் இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மேற்குகரையின் ஜெனின் நகரில் உள்ள … Read more

அரசின் ரகசிய ஆவணங்களை கசிய விட்டதாக புகார்: பாக். முன்னாள் பிரதமர் இம்ரானுக்கு 10 ஆண்டு சிறை

இஸ்லாமபாத்: அரசின் ரகசிய ஆவணங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். அந்நாட்டின் ராணுவ ஆதரவை இழந்தபின், அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இம்ரான் கான் கடந்தாண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் காரணமாக ஏற்பட்ட வன்முறையை தடுக்க, … Read more

கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் சுட்டு கொலை; இந்தியர் கைது

ஒட்டாவா, கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் பிராம்ப்டன் நகரை சேர்ந்தவர் நிஷான் திந்த் (வயது 18). இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், அவரை மற்றொரு இளைஞர் துப்பாக்கியால் சுட்டது தெரிய வந்தது. இதுபற்றிய தகவல் அல்லது வீடியோ காட்சிகள் எதுவும் உள்ளனவா? என விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லப்பட்ட இளைஞர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என … Read more

அமெரிக்காவில் வானில் பறக்கவிடப்பட்ட 'ஜெய் ஸ்ரீராம்' பேனர்

வாஷிங்டன், உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா கடந்த 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது அயோத்தி ராமர் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை கொண்டாடும் விதமாக அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் வசிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் நேற்று விமானம் மூலம் ‘பிரபஞ்சம் சொல்கிறது ஜெய் ஸ்ரீராம்’ என்ற பேனர் … Read more

Imran Khan gets 10 years in jail for leaking government secrets | அரசு ரகசியங்களை கசிய விட்ட வழக்கு இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை

இஸ்லாமாபாத், அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாக்., பிரதமராக, 2018 – 22 வரை பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான், 71, பதவி வகித்தார். இவரது ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து அவர் பதவி விலகினார். குற்றச்சாட்டு இதைத் தொடர்ந்து, இம்ரான் மீது ஊழல் உட்பட பல்வேறு வழக்குகள் … Read more

தமிழக மீனவர்கள் 10 பேர் நிபந்தனையுடன் விடுதலை.. இலங்கை கோர்ட்டு உத்தரவு

கொழும்பு: தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. அவ்வகையில் கடந்த மாதம் 23-ம் தேதி 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் பருத்திதுறை நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 10 மீனவர்களுக்கும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற அடிப்படையில் அவர்களை நிபந்தனையுடன் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. … Read more

International Zebra Day | சர்வதேச வரிக்குதிரை தினம்

குதிரை இனத்தை சேர்ந்தவை வரிக்குதிரை. இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஜன. 31ல் சர்வதேச வரிக்குதிரை தினம் கடைபிடிக்கப்படுகிறது. பாலுாட்டி வகையை சேர்ந்தது. இவை கூட்டமாக வாழும். மூன்று வகைகள் உள்ளன. நின்றுகொண்டே துாங்கும். இரண்டு வரிக்குதிரைகள் ஒன்றின் மீது ஒன்று தங்களின் கழுத்துப் பகுதியை வைத்துக் கொண்டு நின்று ஓய்வு எடுக்கும். இதன் உயரம் 3 — 7 அடி. நீளம் 7 — 10 அடி. மணிக்கு 68 கி.மீ., வேகத்தில் ஓடும். எடை 250 … Read more