ஜோர்டான்: ஆளில்லா விமான தாக்குதலில் 3 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி

அம்மான், இந்த தாக்குதலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் பைடன் உறுதி கூறியுள்ளார். ஜோர்டான் நாட்டில் முகாம்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியிருந்தபோது, திடீரென ஆளில்லா விமானம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில், 3 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். 25 பேர் காயமடைந்து உள்ளனர். சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளது என கூறப்படுகிறது. இதற்கு எதிராக … Read more

Irans Space Shuttle Test Confuses Western Countries | ஈரான் விண்கல சோதனை மேற்கத்திய நாடுகள் கலக்கம்

ஜெருசலேம்:மேற்காசிய நாடான ஈரான், ஒரே நேரத்தில் மூன்று விண்கலங்களை விண்ணுக்கு செலுத்தி சாதனை படைத்தது; இது மேற்கத்திய நாடுகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான், அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. இது தன்னிச்சையாக பல ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. இதற்கு, அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், சிமோர்க் என்ற ராக்கெட் வாயிலாக, ஈரான் நேற்று மூன்று விண்கலங்களை செலுத்தியது. தொலைத் தொடர்பு சேவை மற்றும் ஆராய்ச்சிகளுக்காக இந்த விண்கலங்கள் … Read more

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மோதல், கைகலப்பு – பரபரப்பு வீடியோ

மாலி, மாலத்தீவில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபராக முகமது முய்சு செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள முய்சு பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், மாலத்தீவு நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அதிபர் முய்சு தலைமையில் புதியாக நியமிக்கபட்டுள்ள மந்திரிகளுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்க சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவாதத்தின்போது, ஆளுங்கட்சி மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், ஆளும் கட்சியின் ஆதரவு … Read more

பிரேசிலில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிரேசிலியா, பிரேசில் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மேற்கு பகுதியில் 592 கிலோமீட்டர் (368 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை. தினத்தந்தி Related Tags : பிரேசில்  நிலநடுக்கம்  Brazil  earthquake 

உலக பணக்காரர்… எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளிய பெர்னார்ட்…. 11வது இடத்தில் அம்பானி!!

பிரான்ஸ் நாட்டின் பணக்காரரான பெர்னார்ட் அர்னால்ட் மீண்டும் உலக பணக்காரர் (World’s Richest Person) என்ற பட்டத்தை வென்றுள்ளார். பெர்னார்ட் அர்னால்ட்டின் நிகர மதிப்பு திடீரென 207.6 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

ஹவுதி தாக்குதல்.. பற்றி எரியும் பிரிட்டன் எண்ணெய் கப்பல்: உதவி செய்ய விரைந்த இந்திய கடற்படை

செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் செல்லக் கூடிய வணிகக் கப்பல்களை குறிவைத்து ஹவுதி போராளிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் இன்று ஏடன் வளைகுடா பகுதியில் பிரிட்டனைச் சேர்ந்த எண்ணெய்க் கப்பலான எம்.வி. மர்லின் லுவாண்டாவை தாக்கி உள்ளனர். ஏவுகணை மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் எண்ணெய் கப்பலில் தீப்பற்றியது. எண்ணெய் கப்பலில் இருந்தவர்கள், இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலை தொடர்புகொண்டு உதவி கேட்டனர். இதையடுத்து ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலில் இருந்து தீயணைப்பு சாதனங்களுடன் … Read more

பூமியை விட இரண்டு மடங்கு பெரியது..நீர் இருக்கும் கிரகத்தை கண்டுபிடித்தது நாசா

வாஷிங்டன், பூமியில் இருந்து 97 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. இதனை நாசாவின் ஹப்பிள் ஸ்பேஸ் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. பூமியை விட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் ஜிஜே9827டி என்ற இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறுகள் அதிகமாக இருப்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் நீர் மூலக்கூறுகளோடு நீராவியும் கலந்து இருப்பதால் உறைந்த பனிக்கட்டிகள் அதிகமாக இருக்க … Read more

விமானத்தின் அவசரகால கதவை திறந்து இறக்கை மீது நடந்த பயணி.. சக பயணிகள் ஆதரவு: காரணம் இதுதான்..!

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ சிட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் கவுதமாலா நாட்டிற்கு ஏரோமெக்சிகோ பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. ஆனால் பயணிகள் ஏறி அமர்ந்து நீண்ட நேரம் ஆகியும் புறப்படவில்லை. பராமரிப்பு பணி தொடர்பான எச்சரிக்கை காரணமாக புறப்படுவதில் தாமதம் ஆனது. இந்நிலையில், விமானத்தில் இருந்த பயணிகளில் ஒருவர், அவசரகால கதவை திறந்துகொண்டு வெளியேறி, விமானத்தின் இறக்கையில் நடந்து சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை விமான நிலைய … Read more

துருக்கியில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5 ஆக பதிவு

அங்காரா, துருக்கியில் இன்று காலை 5.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 10 கிமீ ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களின் விவரங்கள் வெளியாகாத நிலையில், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக துருக்கியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் சுமார் 50 … Read more

உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல் – மியாமி துறைமுகத்தில் இருந்து முதல் பயணத்தை தொடங்கியது

வாஷிங்டன், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பிரபல ‘ராயல் கரீபியன்’ கப்பல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட பயணக் கப்பல் இன்று மியாமி துறைமுகத்தில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி மற்றும் இண்டர் மியாமி அணியினர் மூலம் இந்த கப்பலுக்கு ‘ஐகான் ஆப் தி சீஸ்’ (Icon of the Seas) என்று அதிகாரபூர்வமாக பெயர் சூட்டப்பட்டது. உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல் என்று கூறப்படும் இந்த ‘ஐகான் ஆப் தி சீஸ்’ … Read more