அமெரிக்காவில் இரு வீடுகளில் 7 பேரை சுட்டுக் கொன்ற நபர் தற்கொலை

சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ நகரில் இரு வீடுகளில் 7 பேரைச் சுட்டுக் கொன்ற நபர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். ஜோலியட் எனும் பகுதியில் இருக்கும் இரண்டு வீடுகளில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும், ரோமியோ நான்ஸ் என்பவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஜோலியட் போலீஸார் கூறும்போது, “கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள இரண்டு வீடுகளில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது. … Read more

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடமில்லாதது அபத்தமானது – எலான் மஸ்க்

வாஷிங்டன், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஆனால், இந்த பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ரஷியா, இங்கிலாந்து ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த 5 நாடுகளுக்கும் சிறப்பு உரிமைகள் உள்ளன. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ரத்து செய்யும் வகையில் வீட்டோ எனப்படும் உரிமை இந்த 5 நாடுகளுக்கும் உள்ளன. அதேவேளை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை … Read more

சர்வதேச மாணவர் விசாக்களுக்கு 2 வருட வரம்பை அறிவித்த கனடா – இந்திய மாணவர்களுக்கு சிக்கல்!

ஒட்டாவா: கனடாவுக்கு கல்வி பயில வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா காலம் இரண்டு வருடங்களாக கனடா அரசு வரம்பு நிர்ணயித்துள்ளது. இதனால், இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு நிலவுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர், “கனடாவுக்கு கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு 8 லட்சத்துக்கும் மேற்பட்ட கல்வி விசாக்கள் வழங்கப்பட்டன. 2023-ம் ஆண்டு கிட்டத்தட்ட 5.60 லட்சம் மாணவர் … Read more

3 மாத போரில் மோசமான தாக்குதல்; 21 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு – இஸ்ரேல் தகவல்

டெல் அவிவ், மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி போர் வெடித்தது. கடந்த 3 மாதங்களாக நீடித்து வரும் இந்த போர் காரணமாக காசாவில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக அழிக்கும் வரை போர் தொடர்ந்து நடைபெறும் என இஸ்ரேல் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் வெடிப்பொருட்களை … Read more

ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இல்லாமல் இருப்பது அபத்தம்: எலான் மஸ்க்

சான் பிரான்சிஸ்கோ: ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் இல்லை என்பது அபத்தமானது என்று உலகின் மிகப் பெரிய பணக்காரரும் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒரு கட்டத்தில் ஐநா அமைப்புகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். பிரச்சினை என்னவென்றால், அதிகப்படியான அதிகாரம் உள்ளவர்கள் அதை விட்டுவிட விரும்பவில்லை. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும், ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர … Read more

ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 24 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: இஸ்ரேல் தகவல்

டெல் அவிவ்: மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் 24 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை காசா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போருக்கும் இன்னும் முடிவு காணப்படவில்லை. இந்நிலையில், மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் … Read more

Elon Musk Calls For UNSC Changes: India Not Having Permanent Seat Absurd | ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடமில்லாதது அபத்தம்: எலான் மஸ்க்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ‛‛ உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவிற்கு, ஐ.நா., பாதுகாப்பு சபையில் நிரந்தர இடமில்லாதது அபத்தமானது” என டெஸ்லா மற்றும் எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் கூறியுள்ளார். ஐ.நா., பாதுகாப்புச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,‛‛ பாதுகாப்பு கவுன்சிலில் ஆப்ரிக்காவுக்கு இன்னும் ஒரு நிரந்தர உறுப்பினர் இல்லை என்பதை நாம் எப்படி ஏற்க முடியும். சர்வதேச அமைப்புகள், இன்றைய … Read more

UNSCவில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து எப்போது? எலோன் மஸ்க் கேள்வி

Elon Musk On UNSC Membership Of India: உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இல்லை என்பது அபத்தமானது என டெஸ்லா சி.இ.ஓ எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்

Canada caps international student permits by one-third, move to impact Indians | வெளிநாட்டு மாணவர்களுக்கு கனடா கட்டுப்பாடு: இந்தியர்களையும் பாதிக்கும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒட்டாவா: கனடாவில் ஏற்பட்டுள்ள தங்குமிட பிரச்னை காரணமாக வெளிநாட்டு மாணவர்களுக்கு கனடா அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. 2 ஆண்டுகள் மட்டுமே தங்க அனுமதி, வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா 35 சதவீதம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச மாணவர்கள், கனடா நாட்டின் சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகின்றனர். சில கல்வி நிறுவனங்கள் அதிகளவு சர்வதேச மாணவர்களை அனுமதித்து வருகிறது. இதனால், அந்நாட்டு அரசுக்கு புதிய … Read more