உலகின் நம்பிக்கையான தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம்

புதுடெல்லி: உலக தலைவர்களில் நம்பிக்கையான தலைவர் யார் என்று சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் ஒவ்வொரு நாட்டு தலைவரும் எப்படி நடந்து கொள்கின்றனர் என்றும் ஆய்வு செய்யப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வின்போது, உலகத் தலைவர்களுக்கு அவர்களது சொந்த நாட்டில் எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்றும் பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதோடு உலக நாடுகளில் எந்த அளவுக்கு மரியாதை இருக்கிறது என்றும் … Read more

பிரதமர் மோடி மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டார்

மாலே, பிரதமர் மோடி மாலத்தீவில் மேற்கொண்ட 2 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து தூத்துக்குடிக்கு இன்று தனி விமானத்தில் புறப்பட்டார். அவர் இன்றிரவு 8 மணியளவில், தூத்துக்குடி வருகை தருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. மற்றும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. நிகழ்ச்சிக்கு இன்று வருகை தரும் மிகமுக்கிய நபர்களின் வாகனங்களை தவிர மற்ற எந்த வாகனங்களுக்கும் விமான நிலையத்தின் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது. தூத்துக்குடி விமான நிலையத்தில், விமான பயணம் மேற்கொள்ளும் … Read more

பாகிஸ்தான்: மற்றொரு பெண் டிக்டாக் பிரபலம் மர்ம மரணம்; நெட்டிசன்கள் அதிர்ச்சி

கராச்சி, பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தின் கோத்கி நகரில் வசித்து வந்தவர் சுமீரா ராஜ்புத். டிக்டாக்கில் பல வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் அடைந்த இவரை 58 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், அவருடைய வீட்டில் உயிரிழந்த நிலையில், அவர் கண்டெடுக்கப்பட்டு உள்ளார். அவருடைய மர்ம மரணம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அவருடைய 15 வயது மகள் கூறும்போது, அவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொள்ள சில தனிநபர்கள் வற்புறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக, அவருக்கு … Read more

தாய்லாந்து-கம்போடியா எல்லை பகுதியில் மோதல்: பலி 32 ஆக உயர்வு; 130 பேர் காயம்

பாங்காக், தென்கிழக்கு ஆசிய பகுதியில் அமைந்த தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே கடந்த மே மாதத்தில் மோதல் போக்கு ஏற்பட்டது. அப்போது, கம்போடியா ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால், இரு நாடுகளின் இடையேயும் பதற்றம் தொற்றியது. இந்த சூழலை தேசியவாதிகள் பெரிதுபடுத்தினர். இதனால், பதற்றம் இன்னும் அதிகரித்தது. இந்நிலையில், இரு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும் எல்லை பகுதியில் கடந்த வியாழக்கிழமை மோதி கொண்டனர். துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. கம்போடிய ராணுவம் நீண்டதூர ராக்கெட்டுகளை … Read more

சுற்றுலாவை மேம்படுத்த 40 நாடுகளுக்கு இலவச விசா: இலங்கை அரசு அறிவிப்பு

கொழும்பு: சுற்றுலாவை மேம்படுத்தவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் 40 நாடுகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கவுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் தெரிவித்தார். ‘ஹோட்டல் ஷோ கொழும்பு 2025’ தொடக்க விழாவின் போது உரையாற்றிய இலங்கையின் வெளியுறவு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத், “தற்போதைய நிலவரப்படி, இந்தியா உட்பட ஏழு நாடுகள் மட்டுமே இலங்கையில் விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கப்பட்டன. அந்தப் பட்டியலை 40 நாடுகளுக்கு விரிவுபடுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விசா கட்டண விலக்கு … Read more

தாய்லாந்து – கம்போடியா படைகளின் மோதலும் பின்னணியும்: ஒரு தெளிவுப் பார்வை

தாய்லாந்து – கம்போடியா இடையே நீண்ட காலமாக புகைந்து கொண்டிருந்த எல்லைப் பிரச்சினை, தற்போது ராணுவ மோதலாக வெடித்துள்ளது. கம்போடிய ராணுவ நிலைகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது தாய்லாந்து. கம்போடியா ராக்கெட், பீரங்கிக் குண்டுகளைப் பயன்படுத்தியதாலேயே இந்த பதில் நடவடிக்கை என்று தாய்லாந்து விளக்கமும் அளித்துள்ளது. தாய்லாந்து தரப்பில் ஒரு சிறுவன் உள்பட 11 பொதுமக்களும், ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கம்போடியா இழப்பு குறித்து அதிகாரபூர்வமாக ஏதும் தகவல் இல்லை. இரண்டும் சிறிய … Read more

டிஆர்எப் பிரிவுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவுக்கும் தொடர்பு இல்லை: பாகிஸ்தான்

வாஷிங்டன்: லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பிரிவை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என அமெரிக்க அரசு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், டிஆர்எப் பிரிவுக்கும், லஷ்கர்-இ-தொய்பாவுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தர் கூறியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர், வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க நாட்டின் வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோவை சந்தித்தார். இந்த சந்திப்பு வாஷிங்டனில் நடைபெற்றது. இதன் பிறகு முகமது இஷாக் தர் கூறியது: “டிஆர்எப் அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத … Read more

கம்போடியாவுடன் மோதல்: தாய்லாந்தில் அவசர நிலை பிரகடனம்

பாங்காங், தாய்லாந்து-கம்போடியா ஆகிய நாடுகளின் எல்லையில் தா முயென் தாம் என்ற கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அமைந்துள்ள பகுதிக்கு இரு நாடுகளும் உரிமை கோருகின்றன. இதனால் இரு நாடுகள் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நிலவுகிறது. அந்த பிரச்சினை தொடர்பாக கடந்த மே மாதம் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக் கொண்டனர். அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் கம்போடிய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து இரு நாடுகளும் தங்களது எல்லையை மூடுவதாக அறிவித்தன. இதற்கு … Read more

21 வாரங்களில் பிறந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த குழந்தை

வாஷிங்டன், அமெரிக்காவின் லோவா மாகாணத்தை சேர்ந்த ரண்டால் கீன்-மோலி தம்பதிக்கு கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நாஷ் கீன் என பெயரிடப்பட்டது. சமீபத்தில் தனது முதல் பிறந்தநாளை கொண்டாடிய அந்த குழந்தை, பிறக்கும்போதே கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது. குழந்தை நாஷ் தனது தாயின் கருவில் இருந்து வெறும் 21 வாரங்களில், அதாவது சுமார் 133 நாட்களுக்கு முன்பாகவே குறை பிரசவத்தில் பிறந்தது. குழந்தை பிறந்தபோது அதன் எடை … Read more

மாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

மாலே: பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலத்தீவு தலைநகர் மாலேவுக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரளாவில் இருந்து 700 கி.மீ. தொலைவில் மாலத்தீவு அமைந்துள்ளது. அந்த நாட்டின் 60-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதற்காக பிரதமர் மோடி நேற்று சிறப்பு விமானத்தில் மாலத்தீவின் வேலனா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார். மாலத்தீவு அதிபர் முகமது முய்சு விமான நிலையத்துக்கு நேரடியாக வந்து … Read more