மாலத்தீவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

மாலே: பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலத்தீவு தலைநகர் மாலேவுக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரளாவில் இருந்து 700 கி.மீ. தொலைவில் மாலத்தீவு அமைந்துள்ளது. அந்த நாட்டின் 60-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதற்காக பிரதமர் மோடி நேற்று சிறப்பு விமானத்தில் மாலத்தீவின் வேலனா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார். மாலத்தீவு அதிபர் முகமது முய்சு விமான நிலையத்துக்கு நேரடியாக வந்து … Read more

மாலத்தீவுக்கு ரூ.4,850 கோடி கடன் வழங்குவதாக இந்தியா அறிவிப்பு

மாலி, பிரதமர் மோடி இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு தனி விமானம் மூலம் மாலத்தீவு புறப்பட்டார். 2 நாட்கள் பயணமாக மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் மோடியை அந்நாட்டின் அதிபர் முகமது முய்சு விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். நாளை நடைபெறும் மாலத்தீவின் 60-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதனிடையே, … Read more

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்த சுந்தர் பிச்சை!

வாஷிங்டன்: ஆல்பபெட் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை (53) உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். தமிழகத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து தனது கல்வியறிவின் மூலம் ஸ்டான்போர்டு பல்கலையில் கடந்த 1993-ல் உதவித் தொகை பெற்று உயர்கல்வியை முடித்தவர் சுந்தர் பிச்சை. பின்பு இவர் கடந்த 2004-ல் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்து 10 ஆண்டுகளில் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அளவுக்கு தனது திறனை வளர்த்துக் கொண்டார். கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக கடந்த … Read more

இம்மானுவேல் மேக்ரானின் மனைவியை விமர்சித்தவர் மீது வழக்குப்பதிவு

பாரிஸ், அமெரிக்காவைச் சேர்ந்தவர், சமூக வலைதளத்தில் பிரபலமானவரான பெண் அரசியல் விமர்சகர் கேண்டஸ் ஓவன்ஸ். இவர், ஐரோப்பிய நாடான பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் மனைவி பிரிகெட்டே மேக்ரான், ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர் என்று கூறியிருந்தார். இது அந்நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பிரான்ஸ் அதிபர் சார்பில், அமெரிக்காவின் டெலாவேர் ஐகோர்ட்டில் அவதுாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மேக்ரான் தம்பதிக்கு எதிராக, கேண்டஸ் ஓவன்ஸ் தொடர்ந்து அவதுாறு பிரசாரம் செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது. … Read more

சுந்தர் பிச்சை சொத்து மதிப்பு ரூ.9 ஆயிரம் கோடியாக உயர்வு

வாஷிங்டன், கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக இருந்து வருபவர் சுந்தர் பிச்சை. தமிழ் நாட்டில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறிய அவர் கூகுளின் ஆண்ட்ராய்டு பிரிவை வழிநடத்தினார். அந்த நிறுவன வளர்ச்சியில் இவரது பங்கு மிக சிறப்பானது. இவரது திறமையால் 2015- ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார்.இந்த பதவிக்கு வந்து தற்போது அவர் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். … Read more

சிவன் கோயிலுக்காக அடித்துக்கொள்ளும் இரு நாடுகள்.. தாய்லாந்து – கம்போடியா போரின் பின்னணி என்ன?

Thailand – Cambodia War: தாய்லாந்து – கம்போடியா நாடுகளுக்கு இடையே போர் வெடித்துள்ள நிலையில், இந்த போரின் பின்னணி என்ன? எதற்காக போர் தொடங்கி உள்ளது என்பது குறித்து இங்கு பார்க்கலாம். 

தாய்லாந்து – கம்போடியா ராணுவ மோதலால் பெரும் பதற்றம்: முகாம்களில் 1,38,000 மக்கள் தஞ்சம்

சுரின்: தாய்லாந்து – கம்போடியா இடையே நடைபெற்று வரும் ராணுவ மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, எல்லை பகுதியில் வசிக்கும் இரு நாடுகளைச் சேர்ந்த மக்களும் இடத்தை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து வருகின்றனர். தாய்லாந்து எல்லையில் இருந்து 1,38,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளான தாய்லாந்து – கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. தாய்லாந்தின் சுரின் மாகாண … Read more

பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

வாஷிங்டன், பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் அமெரிக்காவில் காலமானார் .அவருக்கு வயது 71.WWE – போட்டிகளில் 12 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஹல்க் 90 கிட்ஸ்களின் ஆதர்ச நாயகனாக விளங்கினார். ஹல்க் ஹோகன் மறைவுக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். 1 More update தினத்தந்தி Related Tags : மல்யுத்த வீரர்  USA  wrestler 

கம்போடியாவில் சைபர் மோசடி: 105 இந்தியர்கள் கைது

நாம்பென்: கம்போடியாவில் சைபர் மோசடி தொடர்பாக 15 நாட்களில் 138 இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில், 105 இந்தியர்களும், 606 பெண்களும் அடங்குவர். இந்தியர் களைத் தவிர, 1,028 சீன குடிமக்கள், 693 வியட்நாமியர்கள், 366 இந்தோனேசியர்கள், 101 வங்கதேசத்தவர், 31 பாகிஸ்தானியர்களும். 82 தாய்லாந்து நாட்டவரும் கைதாகியுள்ளனர். இந்த சோதனைகளின் போது கணினிகள், மடிக்கணினிகள், மொபைல் போன்கள். இந்திய மற்றும் சீன காவல் துறையினரின் போலி … Read more

ரஷியாவில் விமானம் கீழே விழுந்து விபத்து: 50 பேர் பலி

மாஸ்கோ, ரஷியாவின் கிழக்கு பதியில் 50 பேருடன் பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. சைபீரியாவை தளமாக கொண்ட அங்காரா என்ற விமான நிறுவனத்தால் இயக்கப்படும் அந்த விமானம் ஏ.என்.24 சீன எல்லையில் உள்ள அமுர் பிராந்தியத்தின் டிண்டா நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தநிலையில், டிண்டா நகrஅத்தை விமானம் நெருங்கும்போது விமானபோக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் ரேடார் திரைகளில் இருந்து திடீரென விலகி சென்றது. மேலும் விமானத்துடனான தொடர்பு துண்டானது. விமானத்தை தொடர்பு கொள்ள அதிகாரிகள் முயற்சி செய்தினர். … Read more