இந்தியா பலமுறை உதவிகள் செய்தும் மாலத்தீவு தலைவர்களின் வெறுப்புக்கு காரணம் என்ன?

புதுடெல்லி: ஒரு காலத்தில் மாலத்தீவுகள் தமிழ்நாட்டின் சோழ மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த தீவுகள் பின்னர் சிங்களவர்களின் ஆட்சிக்கு மாறியது. கடந்த 1153-ல் மாலத்தீவில் முஸ்லிம் மதம் பரவியது. கடந்த 1558-ல் போர்ச்சுகல், 1654-ல் நெதர்லாந்தின் காலனி நாடாக இருந்த மாலத் தீவு கடந்த 1887-ல் பிரிட்டனின் காலனி நாடாக மாறியது. கடந்த 1965-ம் ஆண்டில் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. கடந்த 1968-ம் ஆண்டில் சுல்தான் ஆட்சியில் இருந்து குடியரசு நாடாக மாறியது. அப்போது … Read more

பொதுத்தேர்தலில் வெற்றி: 5-வது முறையாக வங்கதேச பிரதமர் ஆகிறார் ஷேக் ஹசீனா

டாக்கா : வங்கதேசத்தின் 12-வது பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. முதல்கட்ட முடிவுகளின்படி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். தேர்தலில் அவரது கட்சியான அவாமி லீக் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியை ருசித்துள்ளது. நேற்று அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி மொத்தமுள்ள 300 இடங்களில் 200 இடங்களை கைப்பற்றியுள்ளது. கிட்டத்தட்ட 90 சதவீத முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் … Read more

சைபர் தாக்குதலால் மாலத்தீவு அரசு இணையதளங்கள் முடங்கின

மாலே: சைபர் தாக்குதலால் மாலத்தீவு அரசின் இணைய தளங்கள் முடங்கி உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார். அந்த தீவின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் தீவின் அழகான, தூய்மையான கடற்கரை பகுதிகளின் புகைப்படங்கள், வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் சுற்றுலா துறையை நம்பியிருக்கும் மாலத்தீவு அதிர்ச்சி அடைந்தது. பிரதமர் மோடி, இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் அவதூறாக விமர்சித்தனர். இந்த சூழலில் மாலத்தீவின் அரசு இணையதளங்கள் மீது … Read more

இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட மசூத் ரஹ்மான் பாக்.கில் சுட்டுக்கொலை

இஸ்லாமாபத்: பாகிஸ்தானில் முல்லா மசூத் ரஹ்மான் உஸ்மானி கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கவுரி நகரில் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் மசூத் ரஹ்மான் உஸ்மானியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர். இத்தாக்குதலில் உஸ்மானி உயிரிழந்தார். அவரது ஓட்டுநர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் இஸ்லாமாபாத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு இதுவரையில் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளை தேடி வருவதாகவும். விரைவிலேயே குற்றவாளிகள் கைது … Read more

லட்சத்தீவு கடற்கரைக்கு சென்று வந்த பிறகு பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனம்: மாலத்தீவின் 3 அமைச்சர்கள் நீக்கம்

மாலே: பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த மாலத்தீவின் 3 அமைச்சர்கள் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2, 3-ம் தேதிகளில் அரசுமுறை பயணமாக லட்சத் தீவு சென்றிருந்தார். அந்த பயணத்தின் புகைப்படங்கள், வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதோடு அவர் வெளியிட்ட பதிவுகளில், “லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அங்கு வாழும் மக்களின் அரவணைப்பையும் கண்டு பிரமிக்கிறேன். அகத்தி, பங்காராம், கரவெட்டி ஆகிய இடங்களில் … Read more

திபெத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் 4.0 ஆக பதிவு

லாசா, திபெத்தில் உள்ள சிசாங் பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று மாலை 7.38 மணிக்கு ஏற்பட்டுள்ளது. தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தினத்தந்தி Related Tags : Tibet  … Read more

பிரதமர் மோடியை விமர்சித்த 3 மந்திரிகளை சஸ்பெண்டு செய்து மாலத்தீவு அரசு உத்தரவு

மாலி, சமீபத்தில் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து லட்சத்தீவு கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர், பின்னர் ஸ்நோர்கெலிங் முறையில் கடலில் நீந்தினார். இது தொடர்பான புகைப்படங்களை பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில், “லட்சத்தீவு மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்குள்ள தீவின் வியக்க வைக்கும் அழகு மற்றும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பை பார்த்து நான் பிரமிப்பில் … Read more

வங்காளதேசத்தில் எதிர்க்கட்சிகளே போட்டியிடாமல் நடந்த பொதுத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

டாக்கா, அண்டை நாடான வங்காளதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஷேக் ஹசீனா வெற்றி பெற்று 5-வது முறை பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவி அதன்பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையினை பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கம் நிராகரித்தது. இதையடுத்து முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. மேலும் இந்த தேர்தலை … Read more

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி..3 பேர் படுகாயம்..!

பெஷாவர், பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட காவல்துறை அதிகாரி (டிபிஓ) கூறுகையில், குர்ரம் மாவட்டம் பரசினாரிலிருந்து பெஷாவர் செல்லும் வழியில் இரண்டு வாகங்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலில் பலியான 4 பேரில் 2 பேர் பாதுகாப்புப் … Read more