பாகிஸ்தான் பொதுத்தேர்தலை ஒத்திவைக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி 8-ந்தேதி பொதுத்தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் பாகிஸ்தானில் தற்போது நிலவி வரும் குளிர்காலம் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடுமையான வானிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, அடுத்த மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்தலை ஒத்திவைக்க பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு பாகிஸ்தான் தகவல் தொடர்பு துறை மந்திரி முர்தாஸா சோலங்கி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் … Read more

ஜப்பான் நிலநடுக்க உயிரிழப்பு 92 ஆக அதிகரிப்பு; 242 பேரை காணவில்லை

டோக்கியோ: ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது என்றும், இதுவரை 242 பேரைக் காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் மேற்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட 72 மணி நேரத்திற்குப் பிறகு ஒரு பெண், தற்போது இடிபாடுகளில் இருந்து கவனமாக மீட்கப்பட்டிருக்கிறார். மக்கள் தற்போது 34,000 பேர் வீடுகளை இழந்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு அவர்கள் வெளியில் சுகாராதமற்ற முறையில் வசிப்பதால், அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் … Read more

தென்கொரியா நோக்கி பீரங்கி குண்டுகளை வீசிய வடகொரியா – போர் மூளும் அபாயம்

சியோல், வடகொரியா – தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக பதற்றம் நிலவி வருகிறது. அணு ஆயுத சோதனை மேற்கொண்டு உலக நாடுகளை அவ்வப்போது அதிர்ச்சிக்குள்ளாக்கி வரும் வடகொரியா தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என எச்சரித்து வந்தது. இந்நிலையில், தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா இன்று திடீரென பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளது. தென்கொரியாவின் யோன்பியோங் தீவுப்பகுதியை குறிவைத்து இன்று காலை 9 மணிக்கு வடகொரியா பீரங்கி மூலம் குண்டுகளை வீசியது. வடகொரியா வீசிய … Read more

சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் சரக்கு கப்பல் கடத்தல்

புதுடெல்லி: சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் சரக்கு கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ளது. மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோமாலியாவின் கடற் பகுதியில் MV LILA NORFOLK என்ற சரக்கு கப்பல் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 15 இந்தியர்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோமாலியாவின் கடற் பகுதியில் MV LILA NORFOLK என்ற சரக்கு கப்பல் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 15 இந்தியர்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. … Read more

நேபாளத்துக்கு இந்தியா 75 மில்லியன் டாலர் நிதி உதவி: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு

காத்மாண்டு: கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க நேபாளத்துக்கு இந்தியா அந்நாட்டு மதிப்புப்படி ஆயிரம் கோடி ரூபாய் (75 மில்லியன் டாலர்) வழங்கும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். இரண்டு நாள் பயணமாக நேற்று நேபாள தலைநகர் காத்மாண்டு சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அங்கு இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ள திரிபுவன் பல்கலைக்கழக மைய நூலகத்தை இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “திரிபுவன் பல்கலைக்கழக … Read more

கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம்: தென் கொரியா மீது திடீர் தாக்குதல் நடத்திய வட கொரியா

பியாங்யாங்: தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியில் வட கொரியா திடீர் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தீவு தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே நீண்ட ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வரும் நிலையில், வட கொரியாவின் ராணுவ நடவடிக்கையால் கொரிய தீபகற்பம் பகுதியில் போர் பதற்றம் உருவாகியுள்ளது. 200-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வீசி வட கொரியா தாக்குதல் நடத்தியுள்ளதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. எதிர்பாராத இந்த தாக்குதலால் யோன்பியோங் தீவில் உள்ள … Read more

அமெரிக்கா | அயோவா மாநிலப் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; 5 பேர் காயம்

பெர்ரி: அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலமான அயோவாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சக மாணவர் ஒரு கொல்லப்பட்டதாகவும் 5 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்ததைத் தொடர்ந்து அங்கு போலீஸார் அவசர உதவி வாகனங்களுடன் பெர்ரி உயர்நிலைப் பள்ளிக்கு விரைந்து சென்றனர். இதுகுறித்து அயோவா பிரிவு குற்றப்புலனாய்வு உதவி இயக்குநர் மிட்ச் மோர்ட் வெடிட் கூறுகையில், ” 17 வயது … Read more

76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 10,000 கைதிகளுக்கு பொது மன்னிப்பு: மியான்மர் ராணுவ அரசு நடவடிக்கை

பாங்காக்: மியான்மரில் சுதந்திர தினத்தை யொட்டி 10,000 கைதிகளை விடுவிக்க அந்நாட்டு ராணுவ அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மியான்மர் அரசு தொலைக்காட்சியான எம்ஆர்டிவி தெரிவித்துள்ளதாவது: பிரிட்டனிடமிருந்து மியான்மர் சுதந்திரம் பெற்ற 76-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 9,652 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக மியான்மர் ராணுவக் குழுவின் தலைவரும், மூத்த தளபதியுமான மின் ஆங் ஹலைங் அறிவித்துள்ளார். அதன்படி, மியான்மர் சிறையில்அடைபட்டுள்ள 114 வெளிநாட்டவர்களுக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில்நாடு கடத்தப்படுவார்கள். இவ்வாறு … Read more

US school shooting: One dead | அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

பெர்ரி: மத்திய மேற்கு அமெரிக்காவின் லோவா மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். 5 மாணவர்கள் காயமுற்றனர். இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு குறித்த காரணம் ஏதும் வெளியாகவில்லை. மர்மநபர்களை பிடிக்க போலீஸ் சிறப்பு படை விசாரணை நடத்தி வருகிறது. அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாசாரம் சமீபத்தில் அதிகரித்து வருவதாக ஒரு புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 656 துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. பெர்ரி: மத்திய மேற்கு அமெரிக்காவின் லோவா மாகாணத்தில் … Read more

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் உலக சக்தியாக உருவெடுத்த இந்தியா: சீன நாளிதழ் குளோபல் டைம்ஸ் புகழாரம்

புதுடெல்லி: பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா உலக சக்தியாக உருவெடுத்துள்ளது என்று சீன அரசு நாளிதழான குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. சீனாவில் உள்ள பியூடான் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு மைய இயக்குநர் சாங் ஜியோடாங், சீன அரசு நாளிதழான குளோபல் டைம்ஸில் இந்தியாவின் அரசியல், பொருளாதார மாற்றம் குறித்து கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா உலக அரங்கில் அடைந்த முக்கியத்துவம் குறித்தும்,அரசியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இந்தியா தனக்கான சொந்த அடையாளத்தை உருவாக்கி … Read more