ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்: மக்கள் அதிர்ச்சி

காபூல்: ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இவை ரிக்டர் அளவில் 4.4 மற்றும் 4.8 எனப் பதிவாகியுள்ளது. முதல் நிலநடுக்கமானது, பைசாபாத் (Fayzabad) நகரத்தில் இருந்து 126 கி.மீ. தொலைவில் 80 கி.மீ. ஆழத்தில், 4.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, பைசாபாத் நகரத்தில் இருந்து 100 கி.மீ தொலைவில் 140 கி.மீ ஆழத்தில், 4.8 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த … Read more

Hamas deputy leader Saleh al-Arouri killed in Beirut blast | ஹமாஸ் துணை தலைவர் லெபனானில் கொலை: உச்சம் தொடும் போர் பதற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் சலே அல்-அரூரி உயிரிழந்ததாக லெபனான் மற்றும் பாலஸ்தீன பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதனால் போர் தீவிரமாகும் என தெரிகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் சூழலில் ஹமாஸ் போராட்டக் குழுவின் நிறுவனர்களில் ஒருவரும் துணை தலைவருமான சலே அல்-அரூரி, மேற்குக் கரையில் உள்ள குழுவிற்கு தலைமை தாங்கி வந்தார். … Read more

“யாருடனும் பேச விடாமல் 54 நாட்கள் இருட்டு அறையில் அடைத்து வைத்தனர்” – ஹமாஸ் பிடியில் இருந்து மீண்ட இஸ்ரேல் பெண் தகவல்

ஜெருசலேம்: யாருடனும் பேச விடாமல் 54 நாட்கள் என்னை இருட்டு அறையில் அடைத்து வைத்திருந்தனர் என்று விடுவிக்கப்பட்ட இஸ்ரேல்-பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த டாட்டூன் பெண் கலைஞர் மியா ஸ்கெம் தெரிவித்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காசாவில் இயங்கி வரும் ஹமாஸ் படை இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அந்த நாட்டை சேர்ந்தவர்கள், அங்கிருந்த வெளிநாட்டவர்கள் என சுமார் 240 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர். 3 மாதங்களாக நடந்து வரும் … Read more

கடலோர காவல் படை விமானத்துடன் மோதியதில் ஜப்பான் விமானம் தீப்பற்றியது: 5 வீரர்கள் உயிரிழப்பு, 17 பயணிகள் காயம்

டோக்கியோ: ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம், கடலோர காவல் படை விமானத்துடன் மோதி நேற்று தீப்பிடித்ததில், 5 வீரர்கள் உயிரிழந்தனர். ஜப்பானின் கொக்கைடோ பகுதியிலிருந்து புறப்பட்ட ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ350 விமானம் 379 பேருடன், டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கியது. அப்போது அதே ஓடு பாதையில் ஜப்பான் கடலோர காவல் படைக்கு சொந்தமான எம்ஏ722 ரக விமானம், மேற்கு ஜப்பானின் நிகாடா விமான நிலையத்துக்கு செல்ல தயாராக … Read more

Disneys Mickey Mouse : Expired copyright | டிஸ்னியின் மிக்கி மவுஸ்: காலாவதியானது காப்புரிமை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: பிரபல கார்ட்டூன் கதாபாத்திரமான, ‘மிக்கி மவுஸ்’ சம்பந்தமான, ‘டிஸ்னி’ நிறுவனத்தின் 95 ஆண்டு கால காப்புரிமை காலாவதியாகிவிட்டது. இதனால் தற்போது மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தின் பொது பயன்பாட்டுக்கான தடை நீங்கியுள்ளது. கடந்த 1928ம் ஆண்டு, ‘ஸ்டீம்போட் வில்லி’ என்னும் குறும்படம் வாயிலாக, மிக்கி மவுஸ் கதாபாத்திரம் அமெரிக்காவைச் சேர்ந்த, ‘டிஸ்னி’ நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்க சட்டத்தின் படி, 95 ஆண்டுகள் வரை காப்புரிமை செல்லுபடியாகும். இதன் அடிப்படையில், குறிப்பிட்ட … Read more

Japan Earthquake; 55 people died and thousands of buildings were damaged | ஜப்பான் நிலநடுக்கம்; 55 பேர் பலி ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சேதம்

வாஜிமாஜப்பானில், நேற்று முன் தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 55 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான கட்டடங்கள், வாகனங்கள், சாலைகள் சேதமடைந்தன. கிழக்காசிய நாடான ஜப்பானின், ஹோன்சு தீவில் நேற்று முன்தினம் பிற்பகல் அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஹோன்சு தீவின் மேற்கு கடலோர மாவட்டமான இஷிகவாவை மையமாக வைத்து இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மின்சார நிலையம் இவை ரிக்டர் அளவில் 5 முதல் 7.6 வரை பதிவானது. இதனால் இஷிகவா மாவட்டத்தின் பல்வேறு நகரங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. … Read more

ரன்வேயில் திடீரென தீப்பற்றி எரிந்த விமானம்.. டோக்கியோ விமான நிலையத்தில் பரபரப்பு

டோக்கியோ: ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. ரன்வேயில் தரையிறங்கும்போது, கடலோர காவல்படையின் விமானம் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் துணையுடன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான விமானத்தில் சுமார் 400 பயணிகள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த … Read more

செய்தியாளர்கள் சந்திப்பின்போது எதிர்க்கட்சி தலைவர் மீது கத்திக்குத்து தாக்குதல் – தென்கொரியாவில் பரபரப்பு

சியோல், தென்கொரியா நாட்டின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தலைவர் லி ஜி மியங். இவர் இன்று காலை அந்நாட்டின் புசன் மாகாணம் ஹடியொக் தீவில் புதிதாக கட்டப்பட்டுவரும் விமான நிலையத்தை பார்வையிட்டார். அதன்பின்னர், லி ஜி மியங் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு லி பதிலளித்துக்கொண்டிருந்தார். அப்போது, லி ஜி மியங்கின் ஆதரவாளர்போல் வந்த நபர் ஆட்டோகிராப் (கையெழுத்து) வாங்குவதுபோல் அவரை நெருங்கியுள்ளார். திடீரென அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் எதிர்க்கட்சி தலைவர் … Read more