பிரான்சில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மரணம்

பாரீஸ், ஐரோப்பிய கவுன்சில் தலைவராக 1985 முதல் 1995 வரை இருந்தவர் ஜாக் டெலோர்ஸ் (வயது 98). ஐரோப்பிய நாணயமான யூரோவை அறிமுகம் செய்தது, ஐரோப்பிய ஒற்றை சந்தையை உருவாக்குதல் போன்றவற்றில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. அரசியல்வாதியான இவர் பிரான்சின் நிதி மந்திரியாகவும் பணியாற்றினார். கடந்த சில நாட்களாக இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது ஜாக் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அதிபர் … Read more

இந்தியா-பிலிப்பைன்ஸ் கடற்படைகளின் கூட்டுப்பயிற்சி: சீனா கடும் எதிர்ப்பு

பீஜிங், தென்சீன கடல் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அதே சமயம் அந்த கடல் பகுதி தங்களுடையது என வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே ஆகிய நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. இந்த சூழலில் சமீபத்தில் சர்ச்சைக்குரிய தென்சீன கடலில் பிலிப்பைன்ஸ் கடற்படையுடன் இணைந்து இந்திய கடற்படை கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனா தலைநகர் பீஜிங்கில் பத்திரிகையாளர்களிடம் பேசிய, ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வூ கியான் இதுப்பற்றி கூறுகையில், “இரு … Read more

எவருக்கும் அஞ்சாது மக்களுக்காக சேவை செய்தவர் விஜயகாந்த் – செந்தில் தொண்டமான் இரங்கல்

கொழும்பு, நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:- உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். விஜயகாந்த் மக்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த மனிதர். விஜயகாந்துடன் பல முறை ஏற்பட்ட சந்திப்பின் போது அவருடைய எண்ணங்களிலும் செயல்களின் ஊடாகவும் அவர் ஒரு … Read more

கத்தார்: இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சிறை தண்டனையாக குறைப்பு

தோஹா, அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர். அவர்கள் 8 பேரும் கத்தாரில் உளவு பார்த்ததாக கூறி, அந்நாட்டு அதிகாரிகள் கடந்த ஆண்டு கைது செய்தனர். அவர்களின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன. வழக்கு விசாரணையின் முடிவில் இந்தியர்கள் 8 பேருக்கும் கத்தார் கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மரண … Read more

பிரதமர் மோடி ரஷ்யா வர அதிபர் புதின் அழைப்பு

மாஸ்கோ: பிரதமர் மோடி ரஷ்யா வர வேண்டும் என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அவர் ரஷ்யதுணைப் பிரதமர் டெனிஸ் மான்ட்ரோ, வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் உட்பட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் … Read more

Putin congratulates Modi for winning the Lok Sabha elections! | லோக்சபா தேர்தலில் மோடி வெற்றி பெற புடின்…வாழ்த்து! : � ரஷ்யா வரும்படியும் அழைப்பு

‘ மாஸ்கோ, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், என் நண்பரும், இந்திய பிரதமருமான நரேந்திர மோடி வெற்றி பெற வாழ்த்துகள்’ என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐந்து நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். கடந்த 25ம் தேதி ரஷ்யா சென்ற அவர், அந்நாட்டு துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவை சந்தித்து பேசினார். பின், தலைநகர் மாஸ்கோவில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவையும் … Read more

8 Indians escape death row in Qatar jail | கத்தார் சிறையில் உள்ள 8 இந்தியர் மரண தண்டனையிலிருந்து தப்பினர்

புதுடில்லி, கத்தார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் எட்டு பேரின், மரண தண்டனை சிறை தண்டனையாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்திய கடற்படையில் கமாண்டராக பணியாற்றியவர் பிர்னந்து திவாரி. இவர் உள்ளிட்ட இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் எட்டு பேர், தனியார் நிறுவனம் சார்பில், மேற்கு ஆசிய நாடான கத்தாரின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு போர் பயிற்சி அளித்து வந்தனர். அப்போது, கத்தார் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக, 2022ல் எட்டு பேரும், அந்நாட்டு … Read more

Chilmishas husbands genitals cut | சில்மிஷ கணவரின் பிறப்புறுப்பு கட்

பிரேசிலியா:பிரேசிலில், உறவினரின் 15 வயது மகளுடன் தனிமையில் இருந்த கணவரின் பிறப்புறுப்பை மனைவி வெட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது. தென் அமெரிக்க நாடான பிரேசிலின், சாவோ பாலோ மாகாணத்தில் உள்ள அதிபயா என்ற பகுதியைச் சேர்ந்த, 39 வயது நபர், உறவினர் ஒருவரின் 15 வயது மகளுடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவரது மனைவி, அவரை கட்டிலில் இருந்து தரதரவென இழுத்துச் சென்று கை மற்றும் கால்களை கட்டினார். பின், ‘ஷேவிங்’ செய்ய பயன்படுத்தும், … Read more