பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் அழைப்பு – மத்திய மந்திரி ஜெய்சங்கர் தகவல்

மாஸ்கோ, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக ரஷியாவுக்கு சென்றுள்ளார். மாஸ்கோ சென்றடைந்த அவருக்கு அந்நாட்டின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர், ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவுடன் இரு தரப்பு விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் ரஷியா இந்தியா இடையிலான ஒத்துழைப்பு, வடக்கு தெற்கு இடையிலான சர்வதேச போக்குவரத்து உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோவில் … Read more

பிரபல தென் கொரிய நடிகர் மர்ம மரணம்.. ஆஸ்கார் விருது வென்ற 'பாரசைட்' படத்தில் நடித்தவர்

சியோல்: ஆஸ்கார் விருது வென்ற பாரசைட் திரைப்படத்தில் நடித்திருந்த பிரபல தென் கொரிய நடிகர் லீ சுன்-கியூன் (வயது 48) மர்மமான முறையில் மரணம் அடைந்தார். மத்திய சியோலில் உள்ள ஒரு பார்க்கில் அவர் தனது காருக்குள் இன்று இறந்து கிடந்ததாக தென் கொரிய அவசரகால சேவை அலுவலகம் தெரிவித்துள்ளது. நடிகர் லீ சுன்-கியூனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். … Read more

அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் ஆந்திராவை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

அமலாபுரம்: அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் மினி வேனும் டிரக்கும் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஆந்திர ஆளும் கட்சி எம்எல்ஏவின் உறவினர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலத்தின் மும்மிடிவரம் தொகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ பி. வெங்கட சதீஷ்குமார். இவரது உறவினர்கள் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு எம்எல்ஏவின் உறவினர்களான பி.நாகேஸ்வர ராவ், இவரது மனைவி சீதா மகாலட்சுமி மற்றும் லோகேஷ், நவீனா, க்ருதிக், நிஷிதா உள்ளிட்ட … Read more

Kudankulam nuclear power plant project signing agreement with Russia | கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்து

மாஸ்கோ,தமிழகத்தில் அமைக்கப்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில், அடுத்தகட்ட அணு உலைகள் அமைப்பது தொடர்பாக, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன், தலா, 1,000 மெகாவாட் திறனுள்ள ஆறு அலகுகள் அமைக்க, 2002ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. பல்வேறு எதிர்ப்புகள் உள்ளிட்ட காரணங்களால், நீண்ட இழுபறிக்குப் பின், முதல் அலகு, 2016ல் செயல்பாட்டுக்கு வந்தது. இரண்டாவது அலகும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தற்போது, மூன்றாவது மற்றும் நான்காவது அலகுகளுக்கான கட்டுமானங்கள் நடந்து வருகின்றன. … Read more

Oscar-winning actor dies mysteriously in South Korea | ஆஸ்கர் விருது வென்ற நடிகர் தென் கொரியாவில் மர்ம மரணம்

சியோல்ஆஸ்கர் விருது வென்ற, பாரசைட் திரைப்படத்தில் நடித்த பிரபல தென் கொரிய நடிகர் லீ சுன் கியூன், 48, பூங்கா ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ல் வெளியான தென் கொரிய படமான பாரசைட், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் உட்பட நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றது. ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் லீ சுன் கியூன். சியோலில் குடும்பத்தினருடன் வசித்து வந்த … Read more

Rahul scored Century in Centurion: Indian team added 245 runs | செஞ்சுரியனில் செஞ்சுரி அடித்த ராகுல்: இந்திய அணி 245 ரன்கள் சேர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் செஞ்சுரியன்: செஞ்சுரியன் டெஸ்டில் துாணாக நின்ற ராகுல் சதம் விளாசினார். இந்திய அணி 245 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆல்அவுட்டானது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், ‘பாக்சிங் டே’ போட்டியாக நேற்று (டிச.,26) செஞ்சுரியனில் துவங்கியது. துவக்கத்தில் இருந்து தடுமாறிய இந்திய அணியில் ஸ்ரேயாஸ் (31), கோலி (38) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். … Read more

செங்கடலில் ஹவுதி கிளர்சியாளர்களால் ஏவப்பட்ட டிரோன்கள், ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..!!

வாஷிங்டன், இஸ்ரேல் ராணுவம்-காசாவின் ஹமாஸ் ஆயுதக் குழு இடையிலான போா் கடந்த அக். 7ந் தேதி தொடங்கியதிலிருந்து இந்த விவகாரத்தில் பேசுபொருள் ஆகியிருக்கும் மற்றொரு அமைப்பு ஹவுதி. செங்கடலில் இஸ்ரேலை நோக்கிப் பயணிக்கும் அல்லது இஸ்ரேலிலிருந்து பயணிக்கும் சரக்கு கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்திவருவதன் மூலம் உலக நாடுகளை கவலைகொள்ளச் செய்திருப்பவர்கள் ஏமனை தலைமையிடமாக கொண்ட இந்த ஹவுதி கிளா்ச்சியாளா்கள். உலகின் பிரதான கிழக்கு-மேற்கு வா்த்தக வழித்தடமாக செங்கடல் அமைந்துள்ளது. இந்தச் செங்கடலில் வா்த்தக கப்பல்கள் மீது … Read more

Rewind 2023 | உலகை உலுக்கும் போர்களும், ஆயுதக் குழு போராட்டங்களும் – உறைவது எப்போது?!

2023 ஆண்டு பிறக்கும்போதே முந்தைய ஆண்டின் உக்ரைன் – ரஷ்யா போர் ஓராண்டை எட்டவிருந்தது. இப்போது 2023 முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல் – ஹமாஸ் போர் மூண்டுள்ளது. இன்று, டிச.26, 2023 நிலவரப்படி இந்தப் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,000-ஐ கடந்துவிட்டது. இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள். ஒவ்வொரு முறையும் ஒரு பெரும் போர் மூளும்போதும் மூன்றாம் உலகப் போர் இதுவாக இருக்கலாம், இல்லை இது அதற்கு அடித்தளமாக அமையலாம் என்றெல்லாம் ஊகங்கள் உருவாகின்றன. … Read more

Husband kills wife in front of eight-year-old daughter | எட்டு வயது மகள் கண் முன் மனைவியை கொன்ற கணவன்

ஹவாய்:அமெரிக்காவில் இன்ஸ்டாகிராம் பிரபலமாக இருந்த மனைவியை குழந்தையின் கண் முன்னே கணவன் சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தைச் சேர்ந்தவர் தெரசா கச்சுவாலா, 33. புகைப்படம் மற்றும், ‘வீடியோ’க்கள் பகிரும், ‘இன்ஸ்டாகிராம்’ சமூக ஊடகத்தில் பிரபலமான இவர், அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிறுவனத்தையும் நடத்தி வந்தார். கணவர் ஜேசன் கச்சுவாலாவுடன் ஏற்பட்ட தகராறால், அவரை பிரிந்து, தன் மூன்று குழந்தைகளுடன் தனியே வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் தெரசா … Read more

நைஜீரியாவில் வெவ்வேறு பகுதிகளில் நடந்த சாலை விபத்துகளில் 15 பேர் பலி – 70 பேர் காயம்

அபுஜா, நைஜீரியாவின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நிகழ்ந்த சாலை விபத்துகளில் குறைந்தது 15 பேர் பலியாகினர். மேலும் 70 பேர் பலவிதமான காயங்களுக்கு உள்ளானதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். விடுமுறையைக் கொண்டாடுவதற்காக குடும்பத்தினரும், நண்பர்களும் அதிகமாக பயணித்ததால் முக்கிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் நிகழ்ந்தன. அதிக போக்குவரத்து நெரிசல், மோசமான சாலை நிலைமைகள் மற்றும் சில சமயங்களில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட காரணிகள் தான் கலவையான விபத்துகளுக்கு காரணம் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். … Read more