Hindu temple desecration in America | அமெரிக்காவில் ஹிந்து கோயில் அவமதிப்பு: போலீசார் விசாரணை

வாஷிங்டன்: கலிபோர்னியா மாகாணத்தில் ஹிந்து கோயில் ஒன்றின் வெளிப்புற சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான மற்றும் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் நெவார்க் நகரில் உள்ள ஹிந்து கோயில் ஒன்றின் வெளிப்புற சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான மற்றும் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி … Read more

அமெரிக்காவில் இந்து கோயிலில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்து கோயில் ஒன்றில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சுவரில் எழுதிவைத்த வாசகத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. கலிபோர்னியாவின் நேவார்க் நகரில் சுவாமிநாராரயண் கோயில் உள்ளது. அதில் பிரதமர் மோடி, இந்தியாவுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரங்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவில் இதுபோல் இந்து கோயிலில் வெறுப்புப் பிரச்சாரம் இடம்பெறுவது இது முதன்முறை அல்ல. அண்மையில் கனடாவில் இதுபோல் இந்து கோயில்களில் இதுபோல் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டன. சர்ச்சையின் பின்னணி: இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் … Read more

சீனா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 148 ஆக உயர்வு

பீஜிங், வடமேற்கு சீனாவின் கன்சு, குயின்காங் ஆகிய மாகாணங்களில் கடந்த 19-ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் தென் சீனக்கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் உருவானதாக சீன வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனால் சீனாவில் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. இந்த நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளன. … Read more

காசா போராளிக் குழுவை ஒழிக்க நினைக்கும் இஸ்ரேலின் நோக்கம் தோல்வி அடையும்: ஹமாஸ்

காசா, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் 7-ந் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டதுடன், சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதை தொடர்ந்து, ஹமாசை அடியோடு ஒழிப்போம் என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்த போர் 2 மாதங்களை கடந்து நீண்டு வருகிறது. சர்வதேச நாடுகளின் முயற்சியால் காசாவில் 7 நாட்கள் போர் … Read more

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் பங்கேற்கிறார் என தகவல்

பாரீஸ், நாட்டின் குடியரசு தின விழாவின் போது உலக நாடுகளை சேர்ந்த தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக இந்தியா அழைப்பது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்படவில்லை. நடப்பு ஆண்டில் குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் பதா எல் சிசி பங்கேற்றார். இதற்கிடையே, அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து … Read more

அமெரிக்கா சென்ற இந்திய மாணவி மாயம் – கண்டுபிடித்தால் ரூ.8 லட்சம் பரிசு என அறிவிப்பு

வாஷிங்டன், குஜராத் மாநிலத்தின் வதோதராவை சேர்ந்த மயூஷி பகத் அமெரிக்காவிற்கு எப் 1 மாணவர் விசாவில் 2016இல் சென்றிருக்கிறார். அவர் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி அங்கு இருந்து வெளியேறி இருக்கிறார். அதற்கு பிறகு அவரை காணவில்லை. அவரது குடும்பத்தினர் 2019 மே 1ஆம் தேதி, இது குறித்து புகார் அளித்திருக்கின்றனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க … Read more

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. ராவல்பிண்டியை மையமாக கொண்டு 16 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. தினத்தந்தி Related … Read more

Indian passenger plane makes emergency landing | இந்திய பயணியர் கடத்தலா அவசரமாக தரையிறங்கிய விமானம்

பாரிஸ் :ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து நிகாரகுவேவுக்கு 300க்கும் மேற்பட்ட இந்திய பயணியருடன் சென்ற விமானத்தை பிரான்ஸ் அதிகாரிகள் பாரிஸ் விமான நிலையத்தில் நேற்று அவசரமாக தரையிறக்கினர். பயணியர் கடத்தப்படுவதாக சந்தேகம் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து மத்திய அமெரிக்க நாடான நிகாரகுவேவுக்கு 303 பயணியருடன் ருமேனியாவின் ‘லெஜென்ட் ஏர்லைன்ஸ்’ விமானம் நேற்று புறப்பட்டது. இந்த பயணியரில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. இந்த விமானத்தில் உள்ள சிலர் … Read more