ஹமாஸ் தலைவர் முகமது சின்வாருக்கு இஸ்ரேல் படைகள் முடிவு கட்டியது எப்படி?

ஜெருசலேம்: ஹமாஸ் தலைவர் முகமது சின்வார் மற்றும் முகமது சபோனே ஆகி யோரை கொன்றது தொடர்பான 3டி வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரேலிய பாது காப்பு படை கூறியுள்ளதாவது: காசாவின் கான் யூனுஸ் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்கு அடியில் ஒரு பதுங்கு குழி கட்டமைப்பு இருப்பதை இஸ்ரேலிய ராணுவம் கண்டுபிடித்தது. ஹமாஸ் போர் கட்டுப்பாட்டு மையமாகவும் அது செயல்பட்டு வந்தது. நிலத்துக்கு அடியில் சுரங்கப்பாதை வழியாக சென்று அந்த மையத்தை அடையும் வழியும் … Read more

நைஜீரி​யா​ சாலை விபத்தில் 22 விளை​யாட்டு வீரர்​கள் உயி​ரிழப்பு

அபுஜா: நைஜீரி​யா​வில் நடந்த சாலை விபத்​தில் 22 விளை​யாட்டு வீரர்​கள் உயி​ரிழந்​தனர். நைஜீரிய நாட்​டின் தென்​மேற்கு பகு​தி​யில் அமைந்​துள்ள ஓகுன் மாகாணத்​தில் நடை​பெற்ற விளை​யாட்​டு போட்​டிகளில் பங்​கேற்று விட்டு 35 விளையாட்டு வீரர்​கள், பயிற்​சி​யாளர்​கள் நேற்று முன்​தினம் இரவு பேருந்​தில் வீடு திரும்பி கொண்​டிருந்​தனர். இந்த பேருந்து சிரோ​மாவா என்ற இடத்​தில் உள்ள மேம்​பாலத்​தில் சென்​ற​போது கட்​டுப்​பாட்டை இழந்து, மேம்​பாலத்​தின் தடுப்​புச்​சுவரை இடித்​துக் கொண்டு தரை​யில் விழுந்​தது. இதில் 22 பேர் உயி​ரிழந்​தனர். காயமடைந்​தவர்​கள் அரு​கிலுள்ள மருத்​து​வ​மனை​யில் … Read more

உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் அழிப்பு

கீவ்: கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ரஷ்யாவின் பெலயா, ஒலன்யா, டியாகிலெவா, இவாநோயா ஆகிய 4 விமானப்படை தளங்கள் மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன்கள் மூலம் நேற்று தாக்குதல் நடத்தியது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் ரஷ்ய விமான படைத் தளங்கள் மீது குண்டுமழை பொழிந்தன.இதில் 4 விமானப்படை தளங்களிலும் 40-க்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் தீயில் எரிந்து அழிந்தன. இதுகுறித்து உக்ரைன் … Read more

பெண் ஊழியரை கட்டியணைத்து முத்தமிட்ட மேலாளர் – கோர்ட்டு அளித்த பரபரப்பு தீர்ப்பு

பீஜிங், கிழக்கு சீனாவில் ஷாண்டோங் மாகாணத்தின் கிங்டாவோவில் உள்ள ஒரு கப்பல் நிறுவனத்தில் உற்பத்தி மேற்பார்வையாளராக லின் என்பவர் பணியாற்றினார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம், தனது அலுவலகத்தில் பணியாற்றும் ஷி என்ற பெண் ஊழியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அலுவலகத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். அலுவலகப் படிக்கட்டுகளில் லின், தனது சக ஊழியரான ஷியை கட்டியணைத்து முத்தமிடும் காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தன. இருப்பினும் தன் மீதான … Read more

உக்ரைன் முதன்முறையாக தீவிர தாக்குதல்… ரஷியாவின் 40 விமானங்கள் அழிப்பு

மாஸ்கோ, ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு ஏற்பட்ட போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுத மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்து வருகிறது. போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் … Read more

அமெரிக்கா: பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கிசூடு – 2 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் மினியாபோலீஸ் நகரில் மினசோட்டா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒரு மாணவன் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தான். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்த போலீசார் துப்பாக்கிசூடு நடத்திய மாணவனை கைது செய்தனர். இதனையடுத்து அந்த பல்கலைக்கழக … Read more

பிரான்ஸ்: வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை பரவியதில் 2 பேர் பலி; 192 பேர் காயம்

பாரீஸ், ஜெர்மனியின் முனிச் நகரில், பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) மற்றும் இன்டர் மிலன் அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி போட்டி நடந்தது. இந்த போட்டியில், பி.எஸ்.ஜி. அணி 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை இல்லாத வகையில் இது மிக பெரிய வெற்றியாகும். இதனை தொடர்ந்து, பிரான்சின் பாரீஸ் நகரின் தெருக்களில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வன்முறை பரவியது. அப்போது டாக்ஸ் நகரில், 17 வயது சிறுவன் கத்தியால் … Read more

நைஜீரியாவில் அதிர்ச்சி சம்பவம் – சாலை விபத்தில் பலியான 21 விளையாட்டு வீரர்கள்

அபுஜா, நைஜீரியாவின் தென்மேற்கு ஓகுன் மாநிலத்தில் நடந்த விளையாட்டுத் போட்டிகளில் பங்கேற்றுவிட்டு விளையாட்டு வீரர்கள் பஸ்சில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இந்த பஸ்சில் பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 35 பயணிகள் பயணித்துள்ளனர். அவர்கள் அனைவரும் பஸ்சில் சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடக்கு கனோ மாநிலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு பாலத்தின் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த … Read more

ரஷ்யாவில் பாலம் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு: உக்ரைன் சதியா என விசாரணை

மாஸ்கோ: ரஷ்யாவில் மேற்கு பகுதியில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ரயில் ஒன்று சிக்கி, அதிலிருந்த ஓட்டுநர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். முதல்பாலம் இடிந்த சம்பவம், உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள பிரையான்ஸ் பகுதியில் சனிக்கிழமை இரவு நடந்துள்ளது. பயணிகள் ரயில் மீது பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் ஓட்டுநரும் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது. சிறிது நேரத்துக்கு பின்பு, உக்ரைன் எல்லைப்பகுதியின் குர்ஸ்க் பிராந்தியத்தில் மற்றொரு பாலம் இடிந்து வேறொரு … Read more

வளர்ந்து வரும் ஏஐ நுட்ப போர் முறை குறித்து முப்படைகளின் தலைமை தளபதி பேச்சு!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஷாங்க்ரி-லா மன்றத்தில் சர்வதேச நாடுகளின் பாதுகாப்பு தலைவர்கள் பங்கேற்ற வட்டமேசை மாநாட்டில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் பங்கேற்றார். அப்போது வளர்ந்து வரும் போர் முறை குறித்தும், அதில் ஏஐ பங்கு குறித்தும் அவர் எச்சரித்தார். ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, ஜப்பான், நெதர்லாந்து, நியூஸிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு படைத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இது ஆசிய அளவிலான முக்கிய பாதுகாப்பு உச்சி மாநாடு … Read more