ஒலிம்பிக் குதிரையேற்ற வீரரை கரம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மகள் – திருமண ஏற்பாடுகள் தீவிரம்

வாஷிங்டன், ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் இணைநிறுவனரான மறைந்த தொழிலதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் லாரன் போவெல் தம்பதியின் மகள் ஈவ் ஜாப்ஸ்(வயது 27). ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், மாடலிங் துறையில் கால்பதித்து, முன்னணி பிராண்ட்டுகளின் மாடலாக திகழ்ந்து வருகிறார். 6 வயதில் இருந்து குதிரையேற்ற பயிற்சிகளை பெற்று வரும் ஈவ் ஜாப்ஸ், பல்வேறு குதிரையேற்ற போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த இவர், கொரோனா பரவல் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். … Read more

பாகிஸ்தான் பயங்கரவாதத்தில் மூழ்கியுள்ளது – ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா குற்றச்சாட்டு

வெறித்தனத்திலும் பயங்கரவாதத்திலும் மூழ்கியுள்ள ஒரு நாடு பாகிஸ்தான் என்றும் அந்த நாடு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தொடர்ந்து கடன் வாங்கும் நாடு என்றும் ஐநா பாதுகாப்பு அவை கூட்டத்தில் இந்தியா குற்றம் சாட்டியது. 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பாதுகாப்பு அவையின் தற்போதைய தலைவராக பாகிஸ்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐநா பாதுகாப்பு அவையில் நடைபெற்ற, ‘சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்த்து வைப்பதன் மூலம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை ஊக்குவித்தல்’ எனும் தலைப்பில் நடைபெற்ற திறந்தவெளி … Read more

காசாவில் மூன்று நாட்களில் 21 சிறுவர்கள் உணவின்றி உயிரிழப்பு: ஐ.நா பகிர்வு

காசாவில் மூன்றே நாட்களில் 21 சிறுவர்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பலியானதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தீவிர ராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தின் காசாவில் உணவு பற்றாக்குறை மற்றும் மனித அத்துமீறில்கள் அரங்கேறுவது தொடர்கிறது. ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றார் பாரதி. ஆனால், ராணுவ நடவடிக்கை காரணமாக உறவு, உடமை என அனைத்தையும் இழந்து நிற்கும் காசா வாழ் மக்களுக்கு உண்ண முறையான உணவு கூட கிடைப்பதில்லை. இஸ்ரேல் … Read more

அணுசக்தி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் – ஈரான்

டெக்ரான், அணு ஆயுதத்தை ஈரான் தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த மாதம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும் இஸ்ரேலுக்கு ஈரானின் 3 முக்கிய அணு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதன்பின் இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதற்கிடையே அணுசக்தி – திட்டத்தை ஈரான் கைவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தி வருகிறது. அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் தாக்குதல் நடத்துவோம் … Read more

பாகிஸ்தானில் குடும்பத்தினரின் விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்த தம்பதி ஆணவக் கொலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் குடும்பத்தினரின் விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்த தம்பதியை ஆணவக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த இளம் ஜோடி தங்களது வீட்டாரின் எதிர்ப்புகளை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இதுதொடர்பாக அந்த பெண்ணின் சகோதரர் பழங்குடியினத் தலைவரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் அந்த காதல் ஜோடி ஆணவக்கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக அந்த ஜோடியை … Read more

யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா

வாஷிங்டன், யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்காவின் அரசுத்துறை செய்தித்தொடர்பாளர் டாமி ப்ரூஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டோடு யுனெஸ்கோ தொடர்ந்து செயல்படுவதே இந்த விலகலுக்கு காரணமாக கூறப்படுகிறது. இதற்கு முன் 1984-ல் யுனெஸ்கோ அமைப்பு ரஷியாவிற்கு சாதகமாக உள்ளது எனக்கூறி அமெரிக்கா வெளியேறியது. அப்போது ரொனால்டு ரீகன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தார். பின்னர் 2002-ல் மீண்டும் யுனெஸ்கோவில் இணைந்தது. அதனை தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகியது. பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் … Read more

உங்கள் பொருளாதாரத்தை நசுக்கி விடுவோம்; இந்தியாவுக்கு அமெரிக்க எம்.பி. மிரட்டல்

வாஷிங்டன், உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 244வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியா, உக்ரைன் நடத்திய நேரடி பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையே, போர் தொடங்கியது முதல் ரஷியா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. … Read more

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து கீதா கோபிநாத் விலகல்

வாஷிங்டன், சர்வதேச நாணய நிதியத்தில் துணை நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத். பொருளாதார நிபுணரான அவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் சர்வதேச நாணய நிதியத்தில் தலைமைப்பொருளாதர நிபுணராக பணியில் சேர்ந்தார். இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் பதவியில் இருந்து விலகுவதாக கீதா கோபிநாத் அறிவித்துள்ளார். அவர் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் பொருளாதார பேராசிரியராக மீண்டும் பணியில் சேர உள்ளதாக தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தில் சுமார் 7 அற்புதமான … Read more

வங்காளதேசத்தில் போர் விமானம் விபத்து: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு

டாக்கா, வங்காளதேசத்தின் குர்மிடோலா என்ற இடத்தில் அந்த நாட்டின் விமானப்படை தளம் உள்ளது. இங்கு வழக்கமாக வீரர்கள் விமானத்தில் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இதன்படி நேற்று பிற்பகல் 1 மணிக்கு எப்-7 பி.ஜி.ஐ. என்ற போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டது. இதில் விமானி மற்றும் பயிற்சி வீரர்கள் இருந்தனர். இந்த விமானம் சீனாவின் தயாரிப்பாகும். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள 2 மாடிகள் கொண்ட பள்ளிக்கூடம் … Read more

சீனாவின் மெகா அணை திட்டத்தால் இந்தியாவுக்கு ஆபத்தா? – ஒரு தெளிவுப் பார்வை

சீனா – இந்தியா இடையேயான எல்லைப் பிரச்சினை பல தசம காலமாக நீடிக்கும் தொடர்கதையாக இருக்க, இப்போது இன்னொரு வடிவில் இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது சீனா. அது, திபத்திய தன்னாட்சிப் பிராந்தியத்தில் உள்ள ‘யார்லங் ஸாங்போ’ (இந்தியாவில் பிரம்மபுத்திரா) நதியின் குறுக்கே உலகின் மெகா அணையைக் கட்டி எழுப்புவதற்கான தொடக்க விழா. சீனப் பிரதமர் லீ கியாங் தலைமையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 19) நடந்துள்ளது. மெகா அணைக்கான தொடக்க விழா குறித்த செய்திகள் … Read more