Earthquake in Bangladesh | வங்கதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு

டாகா: வங்கதேசத்தின் தென் கிழக்கே 55 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, மேற்கு வங்கத்திலும் நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவல் வெளியாகவில்லை. டாகா: வங்கதேசத்தின் தென் கிழக்கே 55 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, மேற்கு வங்கத்திலும் நில அதிர்வு … Read more

பாலஸ்தீன பிரச்சினைக்கு நீடித்த தீர்வு காண இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி அழைப்பு

துபாய்: பாலஸ்தீன பிரச்சினைக்கு நீடித்த தீர்வு காண இஸ்ரேல் முன்வர வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக்கிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வரும் ஐநாவின் பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டில் கலந்து கொண்ட ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குத்ரஸ், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், இஸ்ரேல் அதிபர்ஐசக் ஹெர்சாக் உள்பட உலகத் … Read more

It is the soil that unites us.. Sadhgurus keynote address at the climate conference attended by world leaders | நம்மை ஒருங்கிணைப்பது மண்ணே.. உலகத் தலைவர்கள் கலந்து கொண்ட பருவநிலை மாநாட்டில் சத்குரு சிறப்புரை

துபாய்; துபாயில் நேற்று (டிச.1) தொடங்கிய ஐநா பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டின் நம்பிக்கை பெவிலியனில் தனது தொடக்க உரையில் சத்குரு பேசுகையில் “நீங்கள் யார், எந்த நம்பிக்கையை கொண்டவர், எந்த சொர்க்கத்திற்கு செல்பவர் என்பது முக்கியமல்ல. நாம் அனைவரும் ஒரே மண்ணில் இருந்து தான் வந்தோம், அந்த மண்ணில் விளையும் உணவை தான் உண்கிறோம், இறக்கும் போது மீண்டும் அதே மண்ணுக்கு தான் செல்வோம். … Read more

வங்கதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோளில் 5.6 ஆக பதிவு

கொல்கத்தா: வங்கதேசத்தில் இன்று காலை 9.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 5.6 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மேற்கு வங்கத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கதேசத்தில் நிலநடுக்கமும், இந்தியாவில் நில அதிர்வும் ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தின் தென் கிழக்கே 55 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.6 ஆக பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு … Read more

2028-ல் சர்வதேச காலநிலை உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்த வேண்டும் – பிரதமர் மோடி பரிந்துரை

துபாய், சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ளார். இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச அளவில் இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது;- “இந்தியாவின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் ஆகும். ஆனால் உலகளாவிய கார்பன் வெளியேற்றத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் 4 சதவீதமாக மட்டுமே உள்ளது. மக்கள்தொகை குறைவாக … Read more

நியூயார்க்கில் காலிஸ்தான் தீவிரவாதியை கொல்ல முயன்ற நிகில் குப்தா போதை கடத்தல் ஆசாமி

புதுடெல்லி: அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ள இந்தியர் நிகில் குப்தா சர்வதேச போதைப் பொருள் கடத்தல் ஆசாமி என தெரியவந்துள்ளது. நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் தலைவர் குர்பந்வந்த் சிங் பன்னுன். காலிஸ்தான் தீவிரவாதியான இவர் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி. அமெரிக்க மற்றும் கனடா குடியுரிமை பெற்றுள்ள இவர் தற்போது நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். இவரை கொலை செய்ய நடந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும், இதில் இந்திய அதிகாரி ஒருவருக்கும், நிகில் குப்தா என்ற இந்தியருக்கும் தொடர்பு உள்ளதாக … Read more

In India! UN Climate Change Conference in 2028… | இந்தியாவில்! 2028ல் ஐ.நா., பருவநிலை மாநாடு… துபாயில் முன்மொழிந்தார் பிரதமர் மோடி

துபாய் சி.ஓ.பி., 28 எனப்படும், ஐ.நா.,வின் 28வது பருவநிலை மாநாட்டை துபாயில் நேற்று துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, 2028ல் நடக்கும் 33வது ஆண்டு மாநாட்டை இந்தியாவில் நடத்துவது குறித்து முன்மொழிந்தார். வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், 28வது ஐ.நா., பருவநிலை உச்சி மாநாடு நேற்று துவங்கியது. இதை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். சி.ஓ.பி., 28ன் தலைவர் சுல்தான் அல் ஜபர் மற்றும் ஐ.நா., பருவநிலை மாற்ற தலைவர் … Read more

துபாயில் இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

துபாய், சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ளார். இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச அளவில் இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து துபாயில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டின் அமர்வுகளுக்கு மத்தியில் இலங்கை … Read more

2028 மாநாட்டை இந்தியாவில் நடத்த வேண்டும்: ஐ.நா. பருவநிலை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி யோசனை

துபாய்; வரும் 2028-ம் ஆண்டுக்கான ஐ.நா. பருவநிலை மாறுபாடு மாநாட்டை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். கடந்த 1992-ம் ஆண்டில் ஐ.நா. சபை சார்பில் நடத்தப்பட்ட ‘பூமி மாநாட்டில்’ பருவநிலை மாற்றத்தை தடுக்க உறுதியேற்கப்பட்டது. இதன்படி கடந்த 1992-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. சபை சார்பில் பருவநிலை மாறுபாடு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் 28-வது மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நேற்று முன்தினம் … Read more

3 people arrested in USA for beating and kicking Indian student | இந்திய மாணவருக்கு அடி, உதை அமெரிக்காவில் 3 பேர் கைது

வாஷிங்டன் அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 20 வயது மாணவரை கடத்தி, அடித்து துன்புறுத்திய வழக்கில், சக இந்தியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெங்கடேஷ் ஆர்.சத்தரு என்பவர் வசித்து வருகிறார். இவர், சக இந்தியர்களான ஸ்ரவன் வர்மா, நிகில் வர்மா பென்மட்சா ஆகியோருடன் சேர்ந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 20 வயது மாணவரை, ஏப்ரல் மாதத்தில் இருந்து, தனக்கு சொந்தமான மூன்று வீடுகளில் வைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். … Read more