Terrorist Hardeep Singh Nijjar murder: India Must Take Canadas Allegations Seriously: Justin Trudeau After US Case | கனடா குற்றச்சாட்டு: இந்தியாவுக்கு ஜஸ்டின் ட்ரூடோ அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒட்டாவா: பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம் தொடர்பாக கனடாவின் குற்றச்சாட்டை, இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம் தொடர்பாக கனட பிரதமர் இந்தியா மீது குற்றம்சாட்டினார். இதனையடுத்து இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இச்சூழ்நிலையில், அமெரிக்காவில் வாழும் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவரை கொலை செய்ய … Read more

Demolition of UNESCO heritage symbol despite Pakistan being a UNESCO vice-chairman | யுனெஸ்கோ துணை தலைமையில் பாக்., இருந்தும் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னம் இடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: யுனெஸ்கோவின் நிர்வாக குழுவிற்கு துணைத்தலைவராக பாகிஸ்தான் தேர்வு செய்யப்பட்ட போதிலும், கோயில்களை இடிக்கும் அந்நாட்டின் போக்கு மாறவில்லை. பாகிஸ்தானில் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட இடத்தின் சுற்றுச்சுவர் மற்றும் கோயில் ஒன்றும் இடிக்கப்பட்டதற்கு அங்கு வசிக்கும் ஹிந்துக்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நமது அண்டை நாடான பாகிஸ்தானில், சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஹிந்துக்களின் கோயில்களை சேதப்படுத்துவது, அவமரியாதை செய்வது, ஹிந்து மத … Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் மீண்டும் நீட்டிப்பு: பிணைக் கைதிகளை விடுவிப்பதில் உடன்பாடு எட்டும் வரை தொடர வாய்ப்பு

காசா: இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் தொடரும் என்று போர் நிறுத்ததுக்கான ஒப்பந்தம் முடிவடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக இருதரப்பும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, “பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான மத்தியஸ்தர்களின் தொடர் செயல்பாட்டு முயற்சிகள் மற்றும் ஒப்பந்தங்களின்படி போர் இடைநிறுத்தம் தொடர்கிறது” என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் எவ்வளவு நாளைக்கு இது தொடரும் என்ற காலக்கெடு கூறிப்பிடப்படவில்லை. இதனிடையே தெளிவான விபரங்கள் எதுவும் குறிப்பிடாமல், ஏழாவது நாளைக்கு போர் நிறுத்தம் நீட்டிக்க … Read more

Former US Secretary of State has passed away | அமெரிக்கா முன்னாள் வெளியுறவு அமைச்சர் காலமானார்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸிங்கர் காலமானார். அவருக்கு வயது 100. அமெரிக்காவின் இரண்டு முன்னாள் அதிபர்களுக்குக் கீழ் பணியாற்றி வெளியுறவுக் கொள்கைகளில் பல முடிவுகளை எடுத்ததில் ஹென்ரி கிஸ்ஸிங்கர் பங்கு வகித்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் வெளியிட்ட இரங்கல் செய்தியில் “வெளிநாட்டு விவகாரங்களில் மிகவும் நம்பகமான மற்றும் தனித்துவமான குரல்களில் ஒன்றை அமெரிக்கா இழந்து விட்டது” என்று கூறினார். வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸிங்கர் … Read more

அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்ரி கிஸ்ஸிங்கர் மறைவு

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர், நிக்சன், ஜெரால்டு போர்டு ஆகிய இரண்டு அதிபர்களின் கீழ் பணியாற்றி தூதரக ஆலோசகர் என்ற பல பெருமைகளைக் கொண்ட ஹென்ரி கிஸ்ஸிங்கர் மறைந்தார். அவருக்கு வயது 100. கனக்டிக்கட்டில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உயிர் பிரிந்ததாக கிஸ்ஸிங்கர் அசோசியேட்ஸ் அமைப்பு உறுதி செய்துள்ளது. கிஸ்ஸிங்கர் புகழ் பெற்றவர் மட்டுமல்ல சர்ச்சைகளின் நாயகரும்கூட. யார் இந்த ஹென்ரி கிஸ்ஸிங்கர்? அமெரிக்காவின் இரண்டு முன்னாள் … Read more

ஊழல் வழக்கிலிருந்து நவாஸ் ஷெரீப் விடுவிப்பு…!

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (வயது 73). 3 முறை பிரதமராக இருந்தவர். இவர் மீது தோஷகானா ஊழல் உட்பட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் இவருக்கு சிறைதண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து 2020-ம் ஆண்டு அவரது சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே அவரது உடல்நிலை மோசமானதால் சிகிச்சைக்காக 2019-ம் ஆண்டு லண்டன் சென்றிருந்தார். பின்னர் அங்கேயே தலைமறைவான அவர் கடந்த மாதம் 21-ந்தேதி நாடு … Read more

சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்பு | இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் பாராட்டு

கான்பெரா: சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை கடுமையாக போராடி மீட்ட இந்தியாவின் விடா முயற்சிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ இந்திய அதிகாரிகள் அற்புதமான சாதனையை நிகழ்த்தியுள்ளனர். சுரங்கப் பணியாளர்களை மீட்க களத்தில் நின்று அயராது போராடியதில் ஆஸ்திரேலிய பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் பங்களிப்பை பெருமையாக கருதுகிறேன் என்று அல்பனீஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பிலிப் கிரீன் கூறியதாவது: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள … Read more

போப் ஆண்டவருக்கு திடீர் உடல்நலக்குறைவு – துபாய் பயணம் ரத்து

வாடிகன், போப் ஆண்டவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் துபாயில் நடைபெறும் ஐ.நா.அவையின் உலக காலநிலை மாநாட்டில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பரில் 87 வயதை நிறைவுசெய்ய உள்ள போப் பிரான்சிஸுக்கு, இளம் வயதிலேயே அவருடைய நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. இந்தநிலையில், கடந்த ஒருவாரமாக அவர் நுரையீரல் வீக்கம் மற்றும் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக வாடிகன் அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, போப் பிரான்சிஸின் உடல்நிலையை கருத்தில்கொண்டு அவர் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டுமென மருத்துவர்கள் … Read more

41 தொழிலாளர்களை மீட்ட மீட்பு குழுவினர்: இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பாராட்டு

கான்பெர்ரா, உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் 17 நாட்களாக சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நேற்று முன்தினம் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்பு பணியை வெற்றிகரமாக நிறைவு செய்த மீட்பு குழுக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்டது இந்தியாவின் அற்புதமான சாதனை என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் … Read more

அமெரிக்காவில் குடும்பத்தினர் 3 பேரை சுட்டுக் கொன்ற இந்திய மாணவன்

நியூயார்க், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம், சவுத் ப்ளைன்பீல்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியாவைச் சேர்ந்த யஷ்குமார் பிரம்மபட்(வயது 38), அவரது பெற்றோர் திலீப்குமார் பிரம்மபட் (வயது 72 ), பிந்து பிரம்மபட் (வயது 72) ஆகியோர் வசித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு யஷ்குமாரின் சகோதரர் மகன் ஓம் பிரம்மபட் (வயது 23) நியூ ஜெர்சி வந்து இவர்களுடன் தங்கி படித்து வந்தான். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை 9 மணியளவில் அவர்களின் … Read more