பாகிஸ்தான்: 2024-ல் கராச்சியில் சிறுமி உள்பட 26 பேர் பலி; பகீர் தகவல்

கராச்சி, பாகிஸ்தானில் பொருளாதார சரிவு, விலைவாசி உயர்வு என மக்கள் பல்வேறு துயர்களை எதிர்கொள்ள முடியாமல், சிக்கி தவித்து வருகின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு முன் 8-ந்தேதி அந்நாட்டில் பொது தேர்தல் நடந்து முடிந்தது. எனினும், அதிகாரப்பூர்வ ஆட்சி அமையாமல் இழுபறி நிலையே காணப்படுகிறது. இந்த சூழலில், நடப்பு ஆண்டு தொடங்கியதில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகரில் இதுவரை 26 பேர் தெருக்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். இதுபற்றி கண்காணிப்பாளர்கள் மற்றும் உயிர்தப்பியவர்கள் … Read more

தனது கணவரின் உடலை ஒப்படைக்க புதின் மறுப்பதாக நவால்னியின் மனைவி குற்றச்சாட்டு

மாஸ்கோ, ரஷிய எதிர்க்கட்சி தலைவரும், அதிபர் புதினின் தீவிர எதிர்ப்பாளருமான அலெக்சி நவால்னி ஊழல் வழக்கில் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ஆர்க்டிக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் அவர் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். நவால்னியின் மரணத்துக்கு அதிபர் புதினே காரணம் என பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் புதின் அரசு அதை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்த நிலையில் சிறையில் உயிரிழந்த தனது கணவரின் உடலை ஒப்படைக்க புதின் … Read more

Living Safely in Kashmir Social Activist Yana Mir Talks | காஷ்மீரில் பாதுகாப்பாக வசிக்கிறோம்: சமூக ஆர்வலர் யானா மிர் பேச்சு

லண்டன்: ‘மலாலாவை போல், சொந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை; இந்தியாவில் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறோம்’ என, ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் யானா மிர், பிரிட்டன் பார்லிமென்டில் உரையாற்றினார். தாக்குதல் ஐரோப்பிய நாடான பிரிட்டன் பார்லிமென்டில், ‘சங்கல்ப் திவாஸ்’ என்ற நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில், ஜம்மு – காஷ்மீர் பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான யானா மிர், 32, பங்கேற்று, நம் நாட்டுக்கு எதிரான பாகிஸ்தானின் பிரசாரத்தை கண்டித்தும், … Read more

தேசியக்கொடியை சாத்தான் என குறிப்பிட்ட மதபோதகர் – 12 மணிநேரத்தில் நாட்டை விட்டு வெளியேற்றம்

பாரிஸ், துனிசியா நாட்டை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் மஜுப் மஜுபி (வயது 52). துனிசியாவை சேர்ந்த இவர் 1980ம் ஆண்டு முதல் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். இவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே, பிரான்ஸ் தேசியக்கொடியை சாத்தான் என குறிப்பிட்டு மதபோதகர் மஜுப் மஜுபி பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. மேலும், பிரான்சின் நெறிமுறைகளை எதிர்க்க இஸ்லாம் ஊக்குவிப்பதாகவும், பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டுடனும், யூத சமூகத்தினரை எதிரிகளாக சித்தரித்தும் மஜுப் பேசும் வெறுப்புப்பேச்சு வீடியோ சமூகவலைதளத்தில் … Read more

செங்கடல் தாக்குதலுக்கு பதிலடி: ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்

சனா, இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையேயான போர் 3 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது. மேலும், செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு … Read more

Russia Ukraine war: 2 ஆண்டுகள் நிறைவடைந்து 3ம் ஆண்டாக தொடரும் ரஷ்யா உக்ரைன் போர்..!!

ரஷ்யா உக்ரைன் போர்: கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா அறிவித்தது. நாட்டு அமைப்பு நாடுகளில், உக்ரைன் இணைவது எதிர்த்து அண்டை நாடான ரஷ்யா போர் தொடுத்தது. 

Germany passes bill to legalize cannabis use: Barley | கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக்கியது ஜெர்மன் : பார்லி.யில் மசோதா நிறைவேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெர்லின்: ஜெர்மனியில் கஞ்சா செடியை வீட்டிலேயே வளர்ப்பதற்கும், கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக்கும் மசோதா பார்லிமென்டில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐரோப்பிய நாடான ஜெர்மனி ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப் பெரிய பொருளாதார நாடாக உள்ளது. இந்நிலையில் கஞ்சாவுக்கு விதிக்கப்பட்ட தடையை ஜெர்மன் அரசு நீக்கி, அதை சட்டப்பூர்வமாக அனுமதித்துள்ளது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி வீட்டிலேயே மூன்று கஞ்சா செடிகளை வளர்க்கலாம். … Read more

இனி கஞ்சா வளர்ப்பதற்கும், வைத்திருப்பதற்கும் அனுமதி… இந்த நாட்டில் – காரணம் என்ன?

World Bizarre News: இனி 18 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டில் கஞ்சா வளர்ப்பதும், வைத்திருப்பதும் ஜெர்மனியில் சட்டப்பூர்வமாகி உள்ளது. இதுகுறித்து முழுமையாக இங்கு காணலாம். 

நவால்னியின் 'ரகசிய இறுதிச் சடங்கிற்கு' அழுத்தம் தருகின்றனர்: தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு

மாஸ்கோ, ரஷிய அதிபர் புதினையும், அவரது கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. இதனால் அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் இவர் மீதான ஆதரவு பெருகியது. இதனையடுத்து கடந்த 2013-ல் அவர் மீது பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், கோர்ட்டு அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு மொத்தம் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் … Read more