இந்திய எம்பிக்கள் குழுவின் விளக்கத்தை ஏற்று பாக். ஆதரவு அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா

சசி தரூர் தலைமையிலான இந்திய எம்பிக்கள் குழுவின் விளக்கத்தை ஏற்று பாகிஸ்தான் ஆதரவு அறிக்கையை கொலம்பியா திரும்ப பெற்று உள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த மே 7-ம் தேதி பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்தது. அப்போது சுமார் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாக உலக நாடுகளிடம் பாகிஸ்தான் … Read more

பாகிஸ்தானுக்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கையை திரும்ப பெற்றது கொலம்பியா

பொக்கோட்டா, காஷ்மீரின் பகல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதை யடுத்து ஆபரேசன் சிந்தூர் என்ற யெயரில் பாகிஸ்தா னில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதனால் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த முயற்சித்தது. அதை இந்தியா ராணுவம் முறியடித்தது. இதற்கிடையே பாகிஸ்தா னின் பயங்கரவாத ஆதரவு மற்றும் இந்தியா எடுத்த நடவடிக்கைகள் பற்றி விளக்க வெளிநாடுகளுக்கு எம்.பிக்கள் கொண்ட 7 குழுக்களை மத்திய அரசு அனுப்பி உள்ளது. அவர்கள் ஒவ்வொரு … Read more

இந்தியர்களை யாராலும் பிரிக்க முடியாது: லாத்​வியாவில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு

இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்று திமுக கட்சி எம்.பி. கனிமொழி பேசியுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவை உலகுக்கு அம்பலப்படுத்தவும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ போன்ற இந்தியாவின் தற்காப்பு உரிமையை எடுத்துரைக்கவும் சர்வதேச நாடுகளுக்கு இந்திய பிரதிநிதிகள் சென்றுள்ளனர். இதற்காக அமைக்கப்பட்டுள்ள 7 அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில், தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையிலான குழுவும் ஒன்று. இந்த குழுவினர் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணமாகி உள்ளனர். இதில் ரஷ்யா, சுலோவேனியா, கிரீஸ் … Read more

நைஜீரியா: வெள்ள பாதிப்புக்கு 151 பேர் பலி

அபுஜா, நைஜீரியா நாட்டின் தலைநகர் அபுஜா நகரில் இருந்து மேற்கே 380 கி.மீ. தொலைவில் மொக்வா என்ற நகரம் உள்ளது. வடக்கு மத்திய பகுதியில் நைஜர் மாகாணத்திற்கு உட்பட்ட இந்த நகர், முக்கிய வர்த்தக மற்றும் போக்குவரத்து நகரங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நகரங்களுக்கு நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள விவசாயிகள் வெங்காயம், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் பிற உணவு பொருட்களை எடுத்து வந்து விற்பனை செய்வார்கள். இவற்றை நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து வரும் … Read more

இந்தியாவின் புல்லட் ரயில் திட்டத்துக்காக ஜப்பானில் சோதனை ஓட்டம் தொடக்கம்

இந்தியாவுக்கான புல்லட் ரயில்கள் ஜப்பானில் தயாரிக்கப்பட்டு உள்ளன. இந்த புல்லட் ரயில்களின் சோதனை ஓட்டம் ஜப்பானில் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பை, குஜராத்தின் அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பரில் புல்லட் ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களாக கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புல்லட் ரயில் திட்டத்தின் மதிப்பீடு ரூ.2 லட்சம் கோடி … Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு

காபுல், ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 8.15 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 110 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 35.69 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.21 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக … Read more

உலக அழகிப் பட்டம் வென்றார் தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா! | Miss World 2025

ஹைதராபாத்தில் நடைபெற்ற உலகி அழகி இறுதிப் போட்டியில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ 72-வது மிஸ் வேர்ல்டாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ரூ.8.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் உலக அழகி 2025-ம் ஆண்டுக்கான போட்டி நடைபெற்றது. இதில் 120 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். மே 10-ம் தேதி தொடங்கிய இதன் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் மார்டினிக், எத்தியோப்பியா மற்றும் போலந்து நாடுகளைச் … Read more

பாகிஸ்தான்: பலூசிஸ்தான் மக்கள் 5 பேர் படுகொலை; சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை

கெச், பாகிஸ்தானின் ஆட்சிக்கு உட்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்தில், வெவ்வேறு இடங்களில் 5 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு பாகிஸ்தான் ராணுவமே காரணம் என பலூச் தேசிய இயக்கத்தின் மனித உரிமைகள் அமைப்பான பாங் தெரிவித்து உள்ளது. அவர்கள் கெச் மற்றும் ஆவாரன் மாவட்டங்களில் சட்டவிரோத வகையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் யாசிர் என்ற தினக்கூலி வேலையில் ஈடுபட்டு வந்தவரை ராணுவ ஆதரவு பெற்ற படையினர் சுட்டு கொன்றனர். இதனை தொடர்ந்து, தர்மன் பலூச் என்பவர் … Read more

பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட எத்தியோப்பியா துணைப் பிரதமர் உறுதி

அடிஸ் அபாபா: பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியாவுடன் இணைந்து எத்தியோப்பியா பணியாற்றும் என்று அந்நாட்டின் துணைப் பிரதமர் ஆதம் ஃபரா, இந்திய தூதுக்குழுவிடம் உறுதிபட தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை உலகுக்கு எடுத்துச்சொல்லும் நோக்கில் பல்வேறு நாடுகளுக்கு மத்திய அரசு தூதுக்குழுக்களை அனுப்பி உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே தலைமையிலான குழு, எத்தியோபியா தலைநகர் அடிஸ் அபாபாவில் அந்நாட்டின் துணை பிரதமர் … Read more

ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் நிலநடுக்கம் – ரிக்டரில் 6.1 ஆக பதிவு

டோக்கியோ: ஜப்பானின் வடக்கே அமைந்துள்ள முக்கிய தீவுப் பகுதியான ஹொக்கைடோவில் இன்று (மே 31) பிற்பகல் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் (ஜே.எம்.ஏ) தெரிவித்துள்ளது. ஜப்பானின் வடக்கே அமைந்துள்ள நாட்டின் 2-வது பெரிய தீவுப் பகுதியான ஹொக்கைடோவில் சனிக்கிழமை (மே 31) பிற்பகலில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 20 கி.மீ (12 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அந்த நாட்டின் … Read more