வெளிநாட்டு இசையை ரசித்த சிறுவர்களுக்கு 12 ஆண்டு கடும் உழைப்பு தண்டனை! வீடியோ வைரல்

Google Trending Video Of Teenagers Enquiry: வெளிநாட்டுக் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டதால் வாழ்க்கையை தொலைத்த டீன் ஏஜ் இளைஞர்கள்! கையில் விலங்குடன் விசாரணை மன்றத்தில் சிறுவர்கள் வைரல் வீடியோ

நிலவில் தரை இறங்கிய ஜப்பான் விண்கலம்: வேகமாக சக்தியை இழந்து வரும் லேண்டர்

டோக்கியோ, நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கி ஆய்வு செய்யும் பணிகளை பல்வேறு நாடுகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதில் இந்தியா உள்ளிட்ட ஒருசில நாடுகளே வெற்றியும் பெற்று இருக்கின்றன. இந்த வரிசையில் ஜப்பான் அனுப்பிய விண்கலத்தின் லேண்டர் வாகனம் (ஸ்லிம்) இன்று வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. துல்லிய தரை இறக்கம் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த லேண்டரை ஜப்பான் தரை இறக்கியது. இதன் மூலம் அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா, இந்தியாவை தொடர்ந்து 5-வது நாடாக … Read more

கே-பாப் பார்த்த 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடின வேலை செய்யும் தண்டனையை விதித்தது வட கொரியா அரசு

பியாங்யாங்: தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்த குற்றத்துக்காக தங்கள் நாட்டைச் சேர்ந்த 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடுமையான வேலை செய்யும் தண்டனையை வட கொரிய அரசு விதித்திருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 வயதே நிரம்பிய இரண்டு சிறுவர்கள் தென் கொரிய பாப் இசை, சினிமாவைக் கண்டு ரசித்ததற்காக தண்டிக்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கொரியா பல ஆண்டுகளாகவே தென் கொரியாவுடன் எந்த விதத்தில் தொடர்பு ஏற்படுத்தினாலும் … Read more

Lunar Mission: ஜப்பானின் 'Moon Sniper' நிலவில் தரையிறங்கியது! ஆனால் சோலார் பேனல் வேலை செய்யவில்லை!

Moon Sniper Of Japan: ஜப்பான் அனுப்பிய விண்கலம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக ‘சாஃப்ட் லேண்டிங்’ செய்த போதிலும் அதன் சூரிய மின்கலங்கள் போதுமான சக்தியை உருவாக்கவில்லை 

ரூ.4,000 கோடி மாளிகை, 700 கார்கள், 8 ஜெட் விமானங்கள் கொண்ட உலகின் செல்வ செழிப்புமிக்க அமீரக குடும்பம்

அபுதாபி: உலகின் செல்வச் செழிப்புமிக்க குடும்பங்களின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் அல் நஹ்யான் குடும்பம் முதல் இடத்தில் உள்ளது. எம்பிஇசட் என்று அழைக்கப்படும் சேக் முகம்மது பின் செய்யத்அல் நஹ்யான் 2022-ம் ஆண்டு ஒட்டுமொத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவராக பொறுப்பேற்றார். 18 சகோதரர்கள், 11 சகோதரிகள், 9 குழந்தைகள், 18 பேரக் குழந்தைகள் என இவரது குடும்பம் மிகப் பெரியது. அவரது குடும்பம் வசிக்கும் மாளிகையின் மதிப்பு ரூ.4,078 கோடி ஆகும். 700 … Read more

காசா பல்கலைக்கழகத்தை குண்டு வைத்து தகர்த்தது இஸ்ரேல்: விளக்கம் கேட்கிறது அமெரிக்கா

காசா: இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் 7-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதனால் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த சண்டையில் இஸ்ரேல் தரப்பில் இதுவரை 1,140 பேரும், காசாவில் 24,620 பேரும் உயிரிழந்தனர். காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடர்வதால், காசாவில் வசித்த 85 சதவீத மக்கள், அதாவது 24 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கி அத்தியாவசியப் பொருட்கள் போதிய அளவில் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களது … Read more

நிலவின் மேற்பரப்பை அடைந்த 5-வது நாடு: சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியது ஜப்பான் விண்கலம்

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் விண்கலமான ‘ஸ்லிம்’ நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய ஐந்தாவது நாடு என்ற வரலாற்றை ஜப்பான் உருவாக்கியுள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக ‘ஸ்லிம்’ என்ற விண்கலனை கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஜப்பான். நிலவை 120 முதல் 180 நாட்களில் இந்த விண்கலன் அடையும் வகையில் அதன் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. அந்நாட்டின் தனேகஷிமா விண்வெளி மையத்தில் HII-A லாஞ்சர் (ராக்கெட்) மூலம் நிலவை … Read more

Pak. – Both countries are determined to work together to end the Iran problem | பாக். – ஈரான் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி இணைந்து செயல்பட இரு நாடுகள் உறுதி

இஸ்லாமாபாத் :பாகிஸ்தான் மற்றும் ஈரானின், பரஸ்பர ஏவுகணை தாக்குதல்களால் ஏற்பட்ட பதற்றத்துக்கு மத்தியில், அந்நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள், தொலைபேசியில் நேற்று பேசினர். அப்போது, பாதுகாப்பு விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதாக அவர்கள் உறுதி அளித்தனர். ஏவுகணை தாக்குதல் நம் அண்டை நாடான பாகிஸ்தானின், சன்னி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பலுசிஸ்தானில், ஜெய்ஸ் அல் ஆதில் பயங்கரவாத அமைப்பை குறிவைத்து, அதன் அண்டை நாடான ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், இரு குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு … Read more

பயங்கரவாத இலக்குகள் மீது பாக்., ஈரான் பரஸ்பர தாக்குதல்: அமைதி காக்க ஐ.நா, அமெரிக்கா அழைப்பு

தெஹ்ரான்: எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் காரணம் கூறி பாகிஸ்தான், ஈரான் நாடுகள் பரஸ்பர வான்வழித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளும் அமைதி காக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் அழைப்பு விடுத்துள்ளன. இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு பின்னர் ஆயுத பலமுள்ள இரண்டு அண்டை நாடுகள் அதன் எல்லைகளின் மீது நடத்தும் ராணுவத் தாக்குதல்கள் உலக அளவில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளன. வியாழக்கிழமை ஈரானில் உள்ள தீவிரவாத இலக்குகள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 9 … Read more