அரசுப் பணி காலத்தில் போதைப் பொருள் பயன்பாடு: ஊடக குற்றச்சாட்டுக்கு எலான் மஸ்க் மறுப்பு!

வாஷிங்டன்: அமெரிக்காவின் அரசு செயல்திறன் துறையில் பணியாற்றிய காலத்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தினார் என்ற ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையின் குற்றசாட்டினை உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் மறுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக அரசு செயல்திறன் துறையில் தொழில்நுட்ப ஜாம்பவான் எலான் மஸ்க் பணியாற்றிய காலத்தில் அவரிடம் அடிக்கடி போதைப் பொருள் பயன்பாடு மற்றும் ஒழுங்கற்ற நடத்தை இருந்ததாக ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தியைக்காட்டி தகவல் அறிந்தவர்கள் தெரிவித்தனர். அந்தக் கட்டுரையில், ‘எலான் மஸ்க் … Read more

‘அணுசக்தியின் பேரழிவை அமெரிக்கா தடுத்தது’ – இந்தியா – பாக். போரை நிறுத்தியதாக ட்ரம்ப் பேச்சு

வாஷிங்டன்: இந்தியா – பாகிஸ்தான் மோதலை தடுத்ததில் அமெரிக்காவின் பங்கு குறித்தும், இதன் மூலம் அணுசக்தியின் பேரழிவு தடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். தொழிலதிபர் எலான் மஸ்க் உடன் தி ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை டொனால்டு ட்ரம்ப் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்தது: “இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலை தடுத்தது நாங்கள்தான். அது நடக்காமல் போயிருந்தால் மிகப்பெரிய அணுசக்தி பேரழிவாக மாறி இருக்கலாம் என்று நான் நம்புகிறேன். ஒருவருக்கொருவர் சுட்டுக் கொள்பவர்கள், அணு ஆயுத … Read more

காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல் – 72 பேர் பலி

காசா சிட்டி, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், … Read more

இந்தோனேசியா: கல் குவாரியில் பாறை சரிந்து விபத்து – 13 பேர் பலி

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தின் சிரேபன் நகரத்தில் சுண்ணாம்புக் கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிலாளர்கள் பலர் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை 9.30 மணியளவில் பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டது. அப்போது, அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் ஏராளமான எந்திரங்கள் பாறைகளுக்குள் புதைந்தன. இந்தச் சமபவத்தில் 13 தொழிலாளர்கள் பலியான நிலையில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு … Read more

பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கும் பிரான்ஸ்; மீறினால் ரூ. 13 ஆயிரம் அபராதம்…!

பாரிஸ், ஐரோப்பிய நாடான பிரான்சில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்க வேண்டும் என மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக, குழந்தைகள் அடிக்கடி செல்லும் பகுதிகளான கடற்கரைகள், பூங்காக்கள், பஸ் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பகுதிகளில் புகைப்பிடிக்க தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் இந்த தடைக்கு 62 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், பிரான்சில் ஜூலை 1ம் தேதி முதல் பொது … Read more

அமெரிக்கா: நியூயார்க் தெருவில் நடந்த இந்திய திருமண ஊர்வலம்

நியூயார்க், இந்திய திருமணங்கள் ஆடம்பரம் மற்றும் கொண்டாட்டத்திற்கு பெயர் பெற்றவை. வித்தியாசமான அழைப்பிதழ்கள், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகள் தொடங்கி ஆடம்பரமான விருந்துகள், பிரமாண்டமான ஊர்வலம் என திருமண கொண்டாட்டங்கள் களை கட்டும். சில இடங்களில் பிரமாண்ட திருமண ஊர்வலம் நடக்கும் போது சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படுவதையும் காண முடியும். இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற இந்திய திருமண ஊர்வலம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அங்குள்ள வால் ஸ்டிரீட் பகுதியில் லோயர் மன்ஹாட்டன் தெருக்களில் சுமார் 400 … Read more

நைஜீரியாவில் கனமழை, வெள்ளம்: 88 பேர் பலி

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டின் நைஜர் மாகாணம் மக்வா நகரில் நேற்று கனமழை பெய்தது. பல மணிநேரம் நீடித்த கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு மக்வா நகரின் பல்வேறு பகுதிகளை சூழ்ந்தது. பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள அணையில் உடைப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த கனமழை, வெள்ளத்தில் இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். இதையடுத்து அப்பகுதியில் … Read more

ரஷ்யா – இந்தியா – சீனா கூட்டமைப்பை மீட்டெடுக்க தீவிர முயற்சி: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தகவல்

மாஸ்கோ: ரஷ்யா – இந்தியா – சீனா கூட்டமைப்பின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதில் மாஸ்கோ உண்மையிலேயே ஆர்வமாக உள்ளது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் பெர்ம் நகரில் நடைபெற்ற யூரேசியா சர்வதேச சமூக மற்றும் அரசியல் மாநாட்டில் உரையாற்றிய செர்ஜி லாவ்ரோவ், “முன்னாள் ரஷ்ய பிரதமர் யெவ்ஜெனி ப்ரிமகோவின் முன்முயற்சியின் பேரில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய முக்கூட்டின் வடிவமைப்புக்குள் பணிகளை விரைவில் மீண்டும் தொடங்குவதில் … Read more

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் குழந்தை திருமணத்துக்கு தடை – புதிய சட்டம் சொல்வது என்ன?

இஸ்லாமாபாத்: இஸ்லாமாபாத் தலைநகர் பிரதேச குழந்தை திருமண தடை மசோதாவுக்கு அந்நாட்டு குடியரசு தலைவர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் அளித்துள்ளார். தலைநகர் இஸ்லாமாபாத்தில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் செய்வதை சட்டவிரோதமாக அறிவிக்கும் மசோதா அந்நாட்டின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதா கடந்த 27-ம் தேதி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில், குடியரசு தலைவர் ஆசிப் அலி சர்தாரி இன்று தனது ஒப்புதலை அளித்துள்ளார். … Read more

பொய் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்: சவுதியில் ஒவைசி குற்றச்சாட்டு

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளிடம் விளக்குவதற்காக ரவிசங்கர் பிரசாத், சசிதரூர், கனிமொழி உள்ளிட்ட 7 பேர் தலைமையில் எம்.பி.க்கள் குழுவினர் வெளி நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் பாஜக எம்.பி. பைஜயந்த் பாண்டா தலைமையிலான குழு சவுதி அரேபியா சென்றுள்ளது. இக்குழுவில் இடம்பெற்றுள்ள ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசதுதீன் ஒவைசி, சவுதி அரசுப் பிரதிநிதிகள் மத்தியில் பேசியதாவது: நாமெல்லாம் முஸ்லிம் நாடுகள், … Read more