இது டம்மி தேர்தல்.. புதிதாக தேர்தல் நடத்தவேண்டும்: வங்காளதேச பிரதான எதிர்க்கட்சி வலியுறுத்தல்

டாக்கா: வங்காளதேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியான அவாமி கட்சி அமோக வெற்றி பெற்றது. தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக குற்றஞ்சாட்டி முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. ஆனால், ஜதியா கட்சி, வங்காளதேசம் கல்யாண் கட்சி போன்ற கட்சிகள் போட்டியிட்டன. தேர்தல் நடைபெற்ற 299 தொகுதிகளில் 223 தொகுதிகளை கைப்பற்றி ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்காளதேசத்தின் பிரதமராக ஷேக் ஹசீனா 4வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஷேக் ஹசீனாவின் பதவியேற்பு … Read more

‘இந்தியாவை புறக்கணிக்குமாறு மாலத்தீவிடம் கூறவில்லை’ – சீன அரசு பத்திரிகை தகவல்

பெய்ஜிங்: இந்தியாவைப் புறக்கணிக்குமாறு மாலத்தீவிடம் சீனா கூறவில்லை என்று அந்நாட்டு அரசு பத்திரிகையான ‘குளோபல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா – மாலத்தீவு இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு, அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ளார். இந்நிலையில், இந்தியா – மாலத்தீவு சிக்கல் தொடர்பாக குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: “மாலத்தீவை சமமான பங்குதாரராக சீனா கருதுகிறது. மாலத்தீவின் இறையாண்மையை மதிக்கிறது. அதேபோல், மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நட்பு … Read more

“இந்தியா உடனான உறவு மிக நெருக்கமானது” – வங்கதேச பிரதமராக மீண்டும் தேர்வான ஷேக் ஹசீனா நெகிழ்ச்சி

டாக்கா: இந்தியா உடனான வங்கதேசத்தின் உறவு மிகவும் நெருக்கமானது என அந்நாட்டின் பிரதமராக மீண்டும் தேர்வாகி உள்ள ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவாமி லீக் வெற்றி பெற்றதை அடுத்து, 5-வது முறையாக அந்நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனா தேர்வாகி உள்ளார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு டாக்காவில் உள்ள கனபாபன் என்ற தனது இல்லத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீது … Read more

Sheikh Hasinas party won 2 out of 3 seats; Becomes Prime Minister for the 5th time! | வங்கதேசத்தில் 3ல் 2 பங்கு இடங்களை பிடித்து ஷேக் ஹசீனா கட்சி வெற்றி

டாக்டா: வங்கதேசத்தில் நடந்த பொதுத்தேர்தலில்,3ல் 2 பங்கு இடங்களை பிடித்து ஷேக் ஹசீனா கட்சி வெற்றி பெற்றது. 5வது முறையாக ஷேக் ஹசீனா பிரதமராகிறார். நம் அண்டை நாடான வங்கதேசத்தில், ஆவாமி லீக் கட்சித் தலைவரான ஷேக் ஹசீனா, பிரதமராக உள்ளார். இந்நிலையில், நேற்று வங்கதேசத்தில் நடந்த பொதுத் தேர்தலை முக்கிய எதிர்க்கட்சியான, வங்கதேசம் தேசியவாத கட்சி புறக்கணித்த நிலையில், ஓட்டுப் பதிவு மிகவும் மந்தமாகவே நடந்தது. இதில் ஹசீனா பெற்ற ஓட்டுக்கள் 2 லட்சத்து 49 … Read more

ஆணுறுப்பை அறுத்துக்கொண்ட பாதிரியார்… பொறுத்து பார்த்தும் முடியவில்லை – என்ன பிரச்னை?

Bizarre News: பாதிரியார் ஒருவர் தனது பிறப்புறுப்பை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த சம்பவம் செக் குடியரசு நாட்டில் நிகழ்ந்துள்ளது. 

2023-ல் மாலத்தீவுக்கு சென்ற சுற்றுலா பயணிகளில் இந்தியர்கள் முதலிடம்

மாலி: கடந்த 2023-ம் ஆண்டில் மாலத்தீவுக்கு சென்ற சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். மாலத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2023-ம் ஆண்டில் (டிச. 13 வரை) மொத்தம் 17 லட்சத்து 57 ஆயிரத்து 939 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவு வந்துள்ளனர். இது கடந்த 2022-ம் ஆண்டைவிட 12.6% அதிகம். அதிகபட்சமாக 2 லட்சத்து 9,198 இந்தியர்கள் மாலத்தீவு வந்துள்ளனர். அடுத்தபடியாக ரஷ்யா (2,09,146), சீனா (1,87,118) ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். … Read more

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் – 6 போலீஸார் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் போலியோ தடுப்பூசி செலுத்தச் சென்ற மருத்துவக்குழுவுக்கு பாதுகாப்பு அளித்த 6 போலீஸார் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா (Khyber Pakhtunkhwa) மாகாணத்தில் போலியோ தடுப்பூசி செலுத்துவதற்காக இன்று காலை அப்பகுதிக்கு மருத்துவக்குழு ஒன்று சென்றிருக்கிறது. அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக போலீஸ் குழு ஒன்று சென்றுள்ளது. (போலீஸாரை) குறிவைத்து மர்ம நபர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் 6 போலீஸார் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள … Read more

இந்தியா பலமுறை உதவிகள் செய்தும் மாலத்தீவு தலைவர்களின் வெறுப்புக்கு காரணம் என்ன?

புதுடெல்லி: ஒரு காலத்தில் மாலத்தீவுகள் தமிழ்நாட்டின் சோழ மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த தீவுகள் பின்னர் சிங்களவர்களின் ஆட்சிக்கு மாறியது. கடந்த 1153-ல் மாலத்தீவில் முஸ்லிம் மதம் பரவியது. கடந்த 1558-ல் போர்ச்சுகல், 1654-ல் நெதர்லாந்தின் காலனி நாடாக இருந்த மாலத் தீவு கடந்த 1887-ல் பிரிட்டனின் காலனி நாடாக மாறியது. கடந்த 1965-ம் ஆண்டில் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. கடந்த 1968-ம் ஆண்டில் சுல்தான் ஆட்சியில் இருந்து குடியரசு நாடாக மாறியது. அப்போது … Read more

பொதுத்தேர்தலில் வெற்றி: 5-வது முறையாக வங்கதேச பிரதமர் ஆகிறார் ஷேக் ஹசீனா

டாக்கா : வங்கதேசத்தின் 12-வது பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. முதல்கட்ட முடிவுகளின்படி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். தேர்தலில் அவரது கட்சியான அவாமி லீக் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியை ருசித்துள்ளது. நேற்று அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி மொத்தமுள்ள 300 இடங்களில் 200 இடங்களை கைப்பற்றியுள்ளது. கிட்டத்தட்ட 90 சதவீத முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் … Read more